மவுஸ் 44
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

இது என்ன தலைப்பு என்கிறீர்களா? ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று சொல்வது போலத்தான் இதுவும். ஆம், பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மேஜையில் இருந்து உருவாகி, இன்று பல லட்சம் கோடிக்கணக்கான கரங்களில் தவழும் மவுஸ் சாதனத்திற்கு, இந்த டிசம்பர் 9ல், 44 வயதாகிறது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதில், ஒரு மாபெரும் புரட்சியை மவுஸ் கொண்டு வந்தது எனில் அது மிகையாகாது.
ஆப்பிள் நிறுவனம் தான் இதனை உருவாக்கியது என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், செராக்ஸ் நிறுவனத்தின் காப்புரிமையைத் திருடி, மவுஸை வடிவமைத்ததாகச் சொல்வோரும் உண்டு. உண்மையில் இதனை உருவாக்கியவர் Douglas Engelbart என்பவராவார். இவர் அமெரிக்க நாட்டின் 87 வயது விஞ்ஞானி. ஸ்டான்போர்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்னும் ஆய்வு மையத்தில் பணியாற்றிய போது, மவுஸை இவர் உருவாக்கினார். இதனை உருவாக்கியதைப் பற்றி, இன்றும் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.
1963 ஆம் ஆண்டில் மவுஸ் உருவாவதற்கான கட்டமைப்பில் எங்கல்பார்ட் வெற்றி பெற்றாலும், இயத்துடன் கூடிய மவுஸை, 1968ல் தான் இயக்கிக் காட்டினார். அவர் போட்ட கோட்டில் பல நிறுவனங்கள் ரோடு போட்டன. Xerox, Apple, Microsoft மற்றும் Logitech ஆகியவை அவர் அறிமுகப்படுத்திய மவுஸில் பல நுணுக்கங்களை இணைத்து, பல வகையான மவுஸ் சாதனங்களை உருவாக்கிக் காட்டின. ஆனாலும், அன்று எங்கல்பார்ட் எந்த செயல்பாட்டிற்காக இதனை உருவாக்கினாரோ, அது இன்னும் மாறவே இல்லை. தொடுதிரை, ஒலி வழி கட்டளை என எத்தனை புதிய வசதிகள் ஏற்பட்டாலும், கைகள் இயக்கத்தில் கம்ப்யூட்டர் இயங்கும் வரை மவுஸ் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்.
மவுஸ் உருவான ஆண்டுகளையும், சில குறிப்பிட்ட மாற்றங்களையும் இங்கு காணலாம்.
1963: எங்கல் பார்ட் கொடுத்த கட்டமைப்பில், பில் இங்கிலீஷ் (Bill English) மவுஸ் ஒன்றை உருவாக்கினார். இதில் ஒரு பட்டன் தான் இருந்தது.
1968: எங்கல் பார்ட், முழுமையான மவுஸ் ஒன்றை 90 நிமிடங்கள் இயக்கிக் காட்டி, புதிய சகாப்தத்திற்கு வித்திட்டார். இதில் மூன்று பட்டன்கள் இருந்தன.
1972: ஜாக் ஹாவ்லி (Jack Hawley) மற்றும் பில் இங்கிலீஷ் இணைந்து புதிய டிஜிட்டல் மவுஸ் ஒன்றை செராக்ஸ் நிறுவன கம்ப்யூட்டருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிவமைத்தனர். சிறிய அளவிலான பந்து ஒன்று, இரண்டு ரோலர்களுக்கிடையே செயல்பட்டு, தேவையான இடத்திலிருந்து டிஜிட்டல் சிக்னல்களைக் கையாண்டது. அடுத்த 27 ஆண்டுகளுக்கு இதுவே அடிப்படை மவுஸ் இயக்கத்தினைத் தந்தது.
1981: செராக்ஸ் நிறுவனம் தன்னுடைய ஸ்டார் என்ற கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மவுஸ் ஒன்றை வடிவமைத்தது. இதில் இரண்டு பட்டன்கள் மற்றும் சிறிய உருளைப் பந்து இயங்கின. ஆனால், கம்ப்யூட்டரின் விலை மிக மிக அதிகமாக இருந்ததால், இந்த மவுஸ் மக்களை அடையவில்லை.
ஆனால், இதே ஆண்டில், ஹோவே கெல்லி (Hovey Kelley)என்பவர், புதிய மவுஸ் ஒன்றை வடிவமைக்க அனுமதி பெற்று, புதிய மாறுதலான பயன்பாட்டுடன் கூடிய மவுஸ் ஒன்றை வடிவமைத்தார். செலவு குறைவாகவும், அனைத்து மக்களும் பயன்படுத்தும் படியும் இருந்தது. பின்னர், ரிச்சர்ட் லயன் என்பவர் முதல் ஆப்டிகல் மவுஸ் ஒன்றை முழுமையாக இயங்கும் வகையில் வடிவமைத்தார். இதன் இயக்கத்திற்கு, புள்ளிகள் அமைந்த பேட் ஒன்று தேவையாய் இருந்தது.
1982: சன் ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, மவுஸ் பேடுடன் கூடிய மவுஸ் ஒன்றினை ஸ்டீவ் கிறிஷ் (Steve Kirsch)என்பவர் வடிவமைத்தார். இதே ஆண்டில், லாஜிடெக் நிறுவனம் P4 என்ற தன் முதல் மவுஸினை வர்த்தக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதனை வடிவமைத்தவர் ஜீன்டேனியல் (JeanDaniel). இது அப்போது 300 டாலருக்கு விற்பனையானது.
1983: ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மவுஸ், அதன் லிஸா கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் விற்பனையானது. இதில் ஒரே ஒரு பட்டன் மட்டுமே இருந்தது. இது சர்ச்சைக்குரிய வடிவமைப்பு என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமாக, இது 22 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்தது. இதே ஆண்டில், மைக்ரோசாப்ட், தன் முதல் மவுஸ் சாதனத்தை 195 டாலர் விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெர்சனல் கம்ப்யூட்டரின் சீரியல் போர்ட்டில் இணைக்கப்பட்டு இயங்கியது.
1984: லாஜிடெக் நிறுவனம் தன் முதல் வயர்லெஸ் மவுஸ் சாதனத்தை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியது. டிவி ரிமோட் கண்ட்ரோல் போல, இன்ப்ரா ரெட் அலைக் கதிர் வழி இந்த மவுஸ் இயங்கியது.
1986: கீ போர்டுடன் இணையும் வகையில் மவுஸ் ஒன்றினை, ஆப்பிள் உருவாக்கியது.
1987: ஐ.பி.எம். நிறுவனம் ககு/2 வரிசை கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்தது. உலகின் முதல் PS/2 மவுஸும் இதனுடன் வெளியானது.
1991: ரேடியோ அலைவரிசையில் இயங்கும், முதல் வயர்லெஸ் மவுஸினை லாஜிடெக் வடிவமைத்து வெளியிட்டது.
1993: ஹனி வெல் நிறுவனம், முதல் ஆப்டோ மெக்கானிகல் மவுஸினை வெளியிட்டது. இதில் சுழலும் பந்துக்குப் பதிலாக, இரண்டு சிறிய டிஸ்க்குகள், வெவ்வேறு கோணத்தில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதே ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட Apple Desktop Bus Mouse II மவுஸ் புதிய வடிவமைப்பினைக் கொண்டிருந்தது.
1995: ஸ்குரோல் வீல் கொண்ட மவுஸ் ஒன்றினை, முதல் முதலாக, மவுஸ் சிஸ்டம்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டது.
1996: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்குரோல் வீல் கொண்ட மவுஸின் பயன்பாட்டினைப் பிரபலபடுத்தியது. இதற்கெனவே இன்டெல்லி மவுஸ் எக்ஸ்புளோரரை வெளியிட்டது. இரண்டு மவுஸ் பட்டன்களுக்கிடையே, சிறிய ரப்பர் கலந்த பிளாஸ்டிக் உருளையை அமைத்து இந்த மவுஸ் உருவானது. நடுவில் இருந்த உருளை, ஸ்குரோல் செய்திடவும், பட்டன் போல கிளிக் செய்திடவும் என இரண்டு செயல்பாடுகளையும் மேற்கொண்டது.
1998: சிறிய சாசர் கோப்பையைப் போன்ற தோற்றத்தில், ஆப்பிள் நிறுவனம் “hockey puck” மவுஸைக் கொண்டு வந்தது. இந்த மவுஸ் தான் முதன் முதலில், யு.எஸ்.பி. யில் இயங்கும் வரையறைகளுடன் தோற்றுவிக்கப்பட்டது.
1999: எஜிலண்ட் (Agilent) என்ற நிறுவனம் முதல் ஆப்டிகல் சென்சார் கொண்ட மவுஸ் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டது. இதுவே, பின்னர், மைக்ரோசாப்ட், லாஜிடெக், ஆப்பிள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு, பல நுணுக்கங்களுடன் வெளியானது.
2000: ஆப்பிள் நிறுவனத்தின் Pro Mouse வெளியானது. ஆப்டிகல் ட்ரேக்கிங் சென்சார் தொழில் நுட்பம் கொண்டு வெளியான முதல் மவுஸ் இதுவே. இதனுடைய வடிவமைப்பு சற்று வித்தியாசமாக நீண்ட சதுரமாக இருந்தது.
2003: ஆப்பிள் தன் முதல் வயர்லெஸ் மவுஸைக் கொண்டு வந்தது. Apple Wireless Mouse என இதனை அழைத்தது.
2004: லாஜிடெக், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்திய மவுஸ், ஆப்டிகல் ட்ரேக் செய்வதற்கு லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தியது. இந்த வகையில் இதுவே (MX 1000) முதல் மவுஸாகும். எல்.இ.டி. அடிப்படையில் இயங்கிய மவுஸைக் காட்டிலும், லேசர் இயக்க மவுஸ் மிகவும் துல்லியமாக இயங்கியது.
2005: ஒரே பட்டனுடன் தன் மவுஸினை முன்பு வெளியிட்ட ஆப்பிள், இப்போது Mighty Mouse என்ற பெயரில், நான்கு பட்டன் கொண்ட மவுஸை வெளியிட்டது. இதில் இரண்டு பட்டன்கள் கெபாசிடிவ் சென்சார் கொண்டு இயங்குவதாக அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அதில் இருக்கும் சின்ன ஸ்பீக்கர் வழியாக ஒலியினைக் கேட்கலாம்.
2006: வயர்லெஸ் மைட்டி மவுஸ் (Wireless Mighty Mouse) என்ற பெயரில், ஆப்பிள் நிறுவனம் புளுடூத் வயர்லெஸ் மவுஸ் ஒன்றைக் கொண்டு வந்தது.
2008: லாஜிடெக் (ஸ்விஸ்) நிறுவனம் மவுஸ் விற்பனையை 1982ல் தொடங்கி, இந்த ஆண்டில் தன் நூறு கோடியாவது மவுஸை விற்பனை செய்தது.
டப்லஸ் கார்ல் எங்கல்பார்ட் (Douglas Carl Engelbart): 87 வயதாகும் இவர் ஓர் அமெரிக்க விஞ்ஞானி. மனிதனையும் கம்ப்யூட்டரையும் இணைக்கும் பிரிவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டவர். மனித அறிவுத்திறனை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய்வுத் திட்டத்தின் ஒரு சிறிய கண்டுபிடிப்பு தான் மவுஸ் என்கிறார் இவர்.
இதற்கு மவுஸ் என ஏன் பெயர் வந்தது? என்ற கேள்விக்கு எலி போன்ற தோற்றத்துடன் இருந்ததால், வேறு பெயர் இதற்குப் பொருத்தமாக அப்போது தோன்றவில்லை என்கிறார். மவுஸின் இடத்தை வேறு எந்த தொழில் நுட்பமும் நிரப்பாது என்பதில் உறுதியாக உள்ளார். மேலும் தகவல்களுக்கு http://dougengelbart.org/ என்ற இணைய தளத்தைக் காணவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X