கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

கேள்வி: வேர்ட் டூல்பார் மற்றும் ரிப்பனில் கர்சர் செல்கையில் காட்டப்படும் ஸ்கிரீன் டிப்ஸ்கள், காட்டப்படாமல் செட் செய்திட முடியுமா?
ஆர். ஜென்ஸி, புதுச்சேரி.
பதில்:
பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும் இந்த டூல் பார்களை ஏன் நிறுத்த எண்ணுகிறீர்கள்? அதற்கான வழி இதோ. எம்.எஸ்.ஆபீஸ் 2007க்கு முந்தைய புரோகிராம்களில் Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show Screen Tips on Toolbars என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதா எனப் பார்த்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றவும். அடுத்து Close என்பதில் கிளிக் செய்து மூடவும்.
வேர்ட் 2007ல் கீழே கொடுக்கப்பட்டிருப்பது போல மாற்றங்களை அமைக்கவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து, டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Popular என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், Screen Tip Style என்ற கீழ் விரி பட்டியலை விரிக்கவும். இதில் Don’t Show ScreenTips என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து மூடவும்.

கேள்வி: கட்டளை வரி போய், பைல் மற்றும் ஐகான் கிளிக் வந்தது. இப்போது திரையைத் தொட்டு இயக்கம் கிடைக்கிறது. இந்த முன்னேற்றத்தில் அடுத்து என்ன வரும்? எண்ணிப் பார்க்க முடிகிறதா?
கா. ஆனந்தி, திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. பெர்சனல் கம்ப்யூட்டர் நல்லதொரு மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 1987 வரையில், டாஸ் கட்டளைப் புள்ளியில் டெக்ஸ்ட் கட்டளைகளை அமைத்து செயல்படுத்தினோம். பின்னர், விண்டோஸ் அறிமுகமாகி, அனைத்தையும் எளிதாகவும், விரைவாகவும் மாற்றியது. இப்போது தொடுதிரை கட்டளை வந்துள்ளது. அடுத்து என்ன?
gesture control எனப்படும் நம் கைகளின் அசைவே கட்டளையாக கம்ப்யூட்டருக்குச் செல்லும். இந்தப் பிரிவில் ஆய்வுகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று லெனோவா நிறுவனத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த மாற்றம் நிகழும். தொடுதல் மற்றும் ஒலி வழி கட்டளை செயல்பாட்டிற்குப் பதிலாக, அசைவின் வழி இயக்கக் கட்டுப்பாடு அமையும்.
டேப்ளட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே உள்ள வேறுபாடு மறையும்.

கேள்வி: என் அமெரிக்க நண்பர் விண்டோஸ் 8 டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டர் ஒன்றைப் பரிசளித்துள்ளார். உடன் அனுப்பிய கடிதத்தில் “Pen Flicks" என்பதை இன்ஸ்டால் செய்திடுமாறு கூறி உள்ளார். இது எதற்கு? எப்படி இன்ஸ்டால் செய்வது?
சி.ஆர். தியாகராஜன், கோவை.
பதில்:
ஏன், நண்பரிடம் அஞ்சல் வழி கேட்க நாணமா? அல்லது விபரமாக இதனை எழுத முடியாது என்று எண்ணுகிறீர்களா? இதோ உங்கள் கேள்விக்கான பதில்.
பொதுவாகவே, டச் ஸ்கிரீனை நாம் விரும்புவதற்குக் காரணம், நம் விரலசைவில் செயல்பாடுகளை நம்மால் மேற்கொள்வதை நாம் விரும்பி ரசிக்கிறோம் என்பதுதான். சின்ன சின்ன அம்புக்குறி கீகளைத் தேடி அழுத்துவதற்குப் பதிலாக, திரையில் விரல்களால் தேய்த்து பல செயல்களை மேற்கொள்ள முடிகிறதே. இது போல செயல்பாடுகளை மேற்கொள்ளவே “Pen Flicks" நமக்கு உதவுகிறது.
முதலில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கண்ட்ரோல் பேனல் பெறவும். இதில் ‘Classic’ வியூ தேர்ந்தெடுக்கவும். பின்னர், Pen and Input Devices என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Flicks என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Use flicks to perform common actions quickly and easily என்று உள்ள இடத்தில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் உண்டு. the navigation flicks மற்றும் the navigational flicks with editing. நான் இரண்டாவதையே மேற்கொள்ளுமாறு கூறுவேன். ஏனென்றால், இதன் மூலம் காப்பி அண்ட் பேஸ்ட் மிக எளிதாக மேற்கொள்ளலாம். இருப்பினும் உங்களுக்கு எது மிகவும் விருப்பமோ அதனையே தேர்ந்தெடுக்கவும். இதிலேயே அதே
விண்டோவில், இன்னும் சில நுணுக்கமான தொடுதல் வேலைகளுக்கான ஆப்ஷன் கிடைக்கும். அறிந்து தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை, இன்னொரு இடத்தில் ஒட்டிட, கண்ட்ரோல் + வி கீகளைப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, ஒரே ஒருகீ அழுத்தி ஒட்ட முடியுமா?
ஆ. லஷ்மி பிரகாஷ், சிதம்பரம்.
பதில்:
Insert கீயினைப் பயன்படுத்தலாம். நீங்கள் முதலில் வேர்ட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில், இன்ஸெர்ட் கீ, டெக்ஸ்ட் இணைக்கவும், ஏற்கனவே இருப்பவற்றை நீக்கி புதிய டெக்ஸ்ட்டை அமைக்கவும் என இரு வகை வேலைகளுக்குப் பயன்படுகிறது. இதனை overtype mode என அழைக்கின்றனர். இந்த கீயினை நீங்கள் கேட்டுக் கொண்டபடி Ctr+V கீகளுக்கு இணையான கீயாகப் பயன்படுத்தலாம். அப்போது, கிளிப் போர்டில் காப்பி செய்து வைத்த டெக்ஸ்ட், படம் என எதனையேனும் ஒட்டும். இதற்குக் கீழே தந்துள்ளபடி, செட் செய்திடவும்.
Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். இப்போது Options டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இங்கு உள்ள டேப்களில், Edit என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Use INS Key for Paste என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் இணைந்த லேப்டாப் ஒன்று வாங்கினேன். இதில் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும் டைல்ஸ் உள்ளது. ஆனால், சிலவற்றிற்கு இல்லை. இதற்கான டைல் எப்படி உருவாக்குவது?
சி. இந்தரஜித், சென்னை.
பதில்:
பாராட்டுக்கள். புதிய சிஸ்டத்தினை உங்கள் வயப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். பொதுவாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும், ஸ்டார்ட் ஸ்கிரீனில் சிஸ்டம் அதற்கான டைல் ஒன்றை உருவாக்கி வைக்கும். இல்லை எனில் நாம் புதிய டைல் ஒன்றை அதற்கென உருவாக்கலாம். கீழே தந்துள்ள செயல் முறைகளைப் பின்பற்றவும்.
முதலில் ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லவும். இங்கு காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது All apps என்னும் பட்டன் கீழாக வலது புறத்தில் அமையும். இதில் கிளிக் செய்தால், நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேஷன்களின் பட்டியல் காட்டப்படும். இங்கு எந்த அப்ளிகேஷனுக்கு நீங்கள் டைல் ஒன்று உருவாக்க விரும்புகிறீர்களோ, அந்த அப்ளிகேஷனுக்குச் செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு பல ஆப்ஷன்களுடன் பட்டியல் கிடைக்கும். இதில் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இந்த அப்ளிகேஷனை பின் செய்திட ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தவுடன், ஏற்கனவே இருக்கும் அப்ளிகேஷன்களுக்குப் பின்னர், இறுதியாக இதற்கான டைல் உருவாக்கப்படும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் எடிட் செய்வதனால், ஒரு சில பக்கங்களில், சில வரிகள் மட்டும் தனியாக ஒரு பக்கத்தில் கடைசியாக அமைகின்றன. இவற்றை அதற்கு முன் உள்ள பக்கத்திற்குக் கொண்டு வந்து பிரிண்ட் எடுக்க, செட்டிங்ஸ் என்ன செய்திட வேண்டும்?
சி. திருமாவளவன், தாம்பரம்.
பதில்:
இதற்கான தனி செட்டிங்ஸ் இல்லை. பக்க மார்ஜினை சிறிது கீழாக நீட்டிக்கலாம். ஆனால் அது சில வேளைகளில் வேறு வகையான பிரச்னைகளில் கொண்டு விட்டுவிடும். வேர்ட் தொகுப்பிலேயே உள்ள டூலினைப் பயன்படுத்திப் பார்க்கவும். டாகுமெண்ட்டைத் திறந்து, பின்னர் பிரிண்ட் பிரிவியூ செல்லவும். அந்த திரையில் “Shrink to Fit” என்று ஒரு ஐகான் பிரிண்ட் பிரிவியூ ஐகானுக்கு வலது பக்கத்தில் கிடைக்கும்.
இதனைக் கிளிக் செய்தால், நீங்கள் விரும்பும்படி பக்கங்கள் சுருக்கப்படும். சில வேளைகளில் சுருக்க முடியவில்லை என்றால், அதற்கான செய்தி கிடைக்கும். இந்த நிலையில் ஆவணத்தை சேவ் செய்து, மீண்டும், இதே கட்டளையைக் கொடுத்துப் பார்க்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X