கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

கேள்வி: வேர்ட் 2003 இன்னும் பயன்படுத்துகிறேன். இதன் பைல் மெனு திடீரென சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும், டவுண் ஆரோ கிளிக் செய்தால் மட்டுமே பயன்படுத்திய பைல்கள் கிடைக்கின்றன.
மா. கலையரசி, புதுச்சேரி.
பதில்:
இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு முழுமையும் அமைந்திருக்கும். (வேர்ட், எக்ஸெல்,அவுட்லுக், பவர்பாயிண்ட், பப்ளிஷர்) இதனை நீங்கள் விரும்பும்படி அமைக்க, ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராம், வேர்ட் உட்பட, எதனையேனும் திறக்கவும். “Tools” பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் “Customize” என்பதைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் பல டேப் அடங்கிய விண்டோவில் “Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Always show full menus” என்ற பிரிவில் கிளிக் செய்து பின் “Close” கிளிக் செய்து வெளியே வரவும். இனி அனைத்து ஆபீஸ் தொகுப்பு பிரிவுகளிலும் மெனு முழு மெனுவாகத் தோற்றமளிக்கும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி விட்டேன். (எனக்கு 65 வயதானாலும், புதுமையை எப்போதும் உடனடியாகப் பின்பற்றுபவன் நான்) என் கம்ப்யூட்டர் எப்போதும் என்னிடமே தான் இருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும் இதில் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் அமைத்துச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை. இதற்கு மாற்று உள்ளதா?
இல. சுப்பையா, காரைக்குடி.
பதில்:
தங்களைப் போலவே பலர், கம்ப்யூட்டர் மலருக்குப் பலவித பிரச்னைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எழுதி வருகின்றனர். புதுமைக்கு மாற்றிக் கொண்டால் தானே, நாம் அது தரும் பயன்களை அனுபவிப்பதுடன், இன்றைய இளைஞர்களுடன் இணையாகச் செல்ல முடியும். தங்களின் சிக்கலுக்கு ஒரு தீர்வு உள்ளது. கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.
1.உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, அதில் உங்கள் பாஸ்வேர்டினை உள்ளீடு செய்திடவும்.
2. அடுத்து WinX கீகளை அழுத்தவும். அதாவது, விண்டோஸ் கீயினையும் எக்ஸ் கீயினையும் ஒரு சேர அழுத்தவும்.
3. கிடைக்கும் பாப் அப் மெனுவில், Command Prompt (Admin) என்பதில் கிளிக் செய்திடவும்.
4. கிடைக்கும் கட்டளைப் புள்ளியில் (Command Prompt) Control userpasswords2 என டைப் செய்து என்டர் தட்டவும். (இந்த செயல்பாடு புதியதாகத் தெரியாது. ஏற்கனவே வெளியான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதே நடைமுறையை மேற்கொண்டிருப்பீர்கள்.)
5. அடுத்து கிடைக்கும் User Accounts டயலாக் பாக்ஸில், Users must enter a user name and password to use this computer என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தினை நீக்கவும்.
6.அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். தொடர்ந்து உங்கள் பாஸ்வேர்டினை இருமுறை என்டர் செய்து, தானாகவே அனுமதிக்கும் (automatic signin option) ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும்.
7. தொடர்ந்து கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இனி பாஸ்வேர்ட் சோதனை எதுவும் நடக்காது. நேரடியாக கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிப் பேசுகையிலும், படிக்கையிலும், விஸ்டா, புரோ, விண்டோஸ் 7, ஹோம் பிரிமியம், புரபஷனல் எனக் கேள்விப் படுகிறோம். இப்போதைக்கு, நமக்குப் பயன்படுத்தக் கிடைக்கக் கூடிய, புழக்கத்தில் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பெயர்களை மட்டும் வரிசைப்படுத்த முடியுமா?
சி. கருணாகரன், தூத்துக்குடி.
பதில்:
நல்ல கேள்வி. முற்றிலும் புதிய மாற்றங்களுடன் விண்டோஸ் 8 வந்துள்ள நிலையில், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பெயர்கள், அவற்றின் பல்வேறு பதிப்புகளையும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நான்கு பெரிய பதிப்புகள் இப்போதும் பரவலாகப் புழக்கத்தில் காணப்படுகின்றன. அவை விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.
நீங்கள் கேட்டுள்ளபடி இவற்றின் சில வகைகளின் பெயர்களையும் இங்கு குறிப்பிடுகிறேன். விண்டோஸ் எக்ஸ்பிக்கு(2001, அக்டோபர் 25) நான்கு வகைகள் உண்டு விண்டோஸ் எக்ஸ்பி ஹோம், புரபஷனல், மீடியா சென்டர் மற்றும் டேப்ளட் பிசி. இவற்றிற்கு 32 மற்றும் 64 பிட் வேக சிஸ்டங்களும் உண்டு.
விண்டோஸ் விஸ்டா (2007, ஜனவரி 30) ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஐந்து வகைகள் உள்ளன. விண்டோஸ் விஸ்டா ஹோம் பேசிக், விஸ்டா ஹோம் பிரிமியம், விஸ்டா பிசினஸ், விஸ்டா என்டர்பிரைஸ் மற்றும் விஸ்டா அல்டிமேட். விண்டோஸ் 7, (2009 அக்டோபர் 22) சிஸ்டத்தில் மூன்று வகைகள் உண்டு. ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட். இவை அனைத்தும் 32 மற்றும் 64 பிட் வேக வித்தியாசத்தில் பதிப்புகள் கிடைக்கின்றன.
அனைவருக்கும் தெரிந்தது, தற்போது வெளியான விண்டோஸ் 8. 2012 அக்டோபர் 26ல் வெளியானது. விண்டோஸ் 8 புரோ என்ற ஒரு வகையும் இதற்கான பதிப்பாக உள்ளது.

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்துப் படிக்கையில், முற்றிலும் வேறான மேக் ஓ.எஸ். எக்ஸ் என்பது குறித்தும் தகவல்கள் கிடைக்கின்றன. இப்படி முற்றிலும் வேறு வேறு வகையில் கம்ப்யூட்டர்களுக்கான சிஸ்டங்கள் எத்தனை உள்ளன?
சி. ஆர். ஜெயமோகன், சென்னை.
பதில்:
இதுவரை இல்லாத பல செயல்பாடுகளைக் கொண்டு, முற்றிலும் மாறான வகையில் விண்டோஸ் 8 வெளியானதால், அனைவரும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எண்ணத் தொடங்கி உள்ளனர். இதோ, நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில். பொதுவான வகையில் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு, முற்றிலும் மாறுபட்ட இயக்கத்தன்மை கொண்ட மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன. உலகின் 90% கம்ப்யூட்டர்களில் இயங்கும், மிகவும் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இரண்டாவது, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய மேக் ஓ.எஸ்.எக்ஸ் சிஸ்டம். பல்வேறு செயல்பாடுகளைத் தனக்குள் அடக்கி இயங்கும் அருமையான, எளிதான சிஸ்டம். மூன்றாவது, கூகுள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதில் லினக்ஸ் சிஸ்டத்தின் அடிப்படையில் உருவானதாக இருந்தாலும், அடிப்படையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு தனித்துவம் கொண்டதாக உள்ளது. அடுத்ததாக, அனைவராலும் பேசப்படுவது லினக்ஸ் என்னும் பெயரில் உள்ள சிஸ்டம். ஓப்பன் சோர்ஸ் என்னும் திறவூற்று செயல் இயக்கங்கள் பலவற்றை இந்த பொதுவான பெயரால் குறிக்கின்றனர். இது ஓப்பன் சோர்ஸ் என்பதால், இதன் குறியீடுகளை யார் வேண்டுமானாலும் பெற்று, தங்களின் தேவைகளுக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இதன் இயக்கத்தில் எளிமையும், இலகுவான தன்மையும் இல்லை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Ananda Krishnan - MANGAF,குவைத்
13-டிச-201222:25:22 IST Report Abuse
N.Ananda Krishnan உங்கள் கம்ப்யூட்டர் மலர் மூலம்,மைக்ரோசாப்ட் EXCELL ,ஆபீஸ் புதிதாக கற்று கொள்ள முழு புத்தகம் வந்து உள்ளதா(.தமிழ் ) வந்து இருந்தால் அதன் விபரம் கூறவும் .
Rate this:
Share this comment
Cancel
N.Ananda Krishnan - MANGAF,குவைத்
13-டிச-201222:17:31 IST Report Abuse
N.Ananda Krishnan புதிதாக கற்று கொள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் அண்ட் எச்செல் சம்பத்தமான புக்ஸ் தினமலர் வெளியீடு செய்து உள்ளீர்களா (தமிழ் மூலம்).இல்லை என்றால் வேறு புத்தகம் வந்து இருந்தால் அதன் விபரம் அறிவிக்கவும்.உங்கள் கேள்வி பதில் எல்லாம் முழு புத்தகமாக வந்து உள்ளதா. வந்து இருந்தால் அதன் விபரம் முழுதாக அறிவிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X