சொல்லின் செல்வர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

ராமாயணத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பான ஒரு இடம் உண்டு. தான் வைகுண்டம் போகும் போது, ஆஞ்சநேயரை பார்த்து, "நீயும் வைகுண்டம் வருகிறாயா?' என்று கேட்டார் ஸ்ரீராமர்.
அதற்கு, "வைகுண்டத்தில் ராம நாமா உண்டா?' என்றார் ஆஞ்சநேயர். "அதெல்லாம் அங்கு கிடையாது. வைகுண்ட தரிசனம் செய்யலாம்; அவ்வளவு தான்...' என்றார் ராமர்.
"அப்படியானால், ராம நாமா இல்லாத வைகுண்டம் எனக்கு வேண்டாம். நான் பூலோகத்திலேயே இருந்து, எங்கெல்லாம் ராமாயணம் நடக்கிறதோ, அங்கே உட்கார்ந்து ராம நாமாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வைகுண்டம் வரவில்லை...' என்று சொல்லி விட்டார் ஆஞ்சநேயர்.
இப்போதும் கூட, ஆஞ்சநேயர் இல்லாத கோவிலே கிடையாது எனலாம். கிராமங்களில் ராமாயணம் நடைபெறும் இடங்களில், தனியாக ஒரு பலகை போட்டு, அதில் கோலமிட்டு வைப்பதுண்டு.
அந்த பலகையில் அமர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயர், ராமாயணம் கேட்பதாக ஐதீகம். ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்தவர் ஆஞ்சநேயர் தான். ராமாயணம் என்ற முத்து மாலையின் நடுவில் உள்ள மாணிக்கம் போன்றவர் ஆஞ்சநேயர்.
"ராம நாம மேகங் கண்டு' என்றார் ஒரு கவி. அப்படிப்பட்ட ராமாயணம், ஸ்ரீராம நவமி சமயத்தில் எல்லா இடங்களிலும் நடை பெறும். ஆஞ்சநேயரை சொல்லின் செல்வர் என்பதுண்டு. ராம தூதனாக ராவணன் முன் நின்ற போது, "நீ யார்?' என்று ராவணன் கேட்டபோது, "வாலி' என்று ஆரம்பித்ததுமே ராவணன் நடுங்கி விட்டான்.
"அப்படிப்பட்ட வாலியை வதம் செய்த ராம தூதன் நான்...' என்றார் ஆஞ்சநேயர்.
"தூது செல்வார் இயற்கை துங்க வாள் உருவி க்ரோதமாய் கேட்பார் முன் கூறுவன கூறல் வேண்டும்...' என்றுள்ளது. தன் எஜமானைப் பற்றியும், தன்னை பற்றியும் பெருமைப்பட கூற வேண்டும் தூதுவன்.
தன்னை பற்றியும், மிகவும் பெருமையாகப் பேசினார் ஆஞ்சநேயர். சீதையை தேடி இலங்கை சென்று திரும்பும் போது, மற்ற வானர வீரர்கள் மற்றும் ராம, லட்சுமணர், இவருடைய வருகைக்காகவும், இவர் கொண்டு வரும் செய்திக்காகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
வரும்போதே, "கண்டேன் கற்புடைய சீதையை...' என்று சொல்லியபடி வந்தார் ஆஞ்சநேயர். இலங்கையில் சீதையைக் கண்டதையும், சீதை கற்புநெறி தவறாமல் இருப்பதையும், இப்படி சுருக்கமாகச் கூறினார் ஆஞ்சநேயர். அதனால்தான் அவரை சொல்லின் செல்வர் என்றனர்.
ராமாயணத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயப் பிரபாவம் என்று தனியாகவே உள்ளது. அதை தெரிந்து, ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். அசாத்தியமான காரியங்களை வெற்றிகரமாக முடித்த ஆஞ்சநேயர், நம்முடைய குறைகளையும் தீர்த்து வைப்பார்.
***

ஆன்மிக வினா-விடை!

மார்கழி மாதத்தில், வாசலில், சாணத்தில், பறங்கி பூ வைப்பது ஏன்?
மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் கோலம் போட்டு, அதன் நடுவில் சாணம் வைத்து, அதில், பறங்கி பூவை வைப்பது, தமிழர்களின் வழக்கம். மஞ்சள் வண்ணத்தில் பறங்கிப்பூ இருப்பதால், அதை வைக்கும் இல்லங்களில், மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. பூ மலர்ந்திருப்பது போல், வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்பதால், இல்லத்தில் உள்ளோருக்கு ஆரோக்கியம் தரும். கன்னி பெண்கள், இவ்வாறு மார்கழி மாதத்தில் கோலமிட்டு பூ வைத்து வழிபட்டால், நல்ல வாழ்க்கை அமையும் என்பது ஐதிகம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
16-டிச-201217:09:32 IST Report Abuse
Natarajan Iyer இன்றும் ஏழைகள் மற்றும் பாமர மக்கள் வீடுகளுக்கு முன்னாள் வாசலில் கோலமிட்டு பூ வைப்பது,வீட்டு முற்றத்தில் பொங்கல் பொங்குவது நடக்கிறது. அடுக்குமாடியில் வசிப்பவர்கள்தான் அனைத்தையும் மறந்து விட்டார்கள்.
Rate this:
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
16-டிச-201204:37:06 IST Report Abuse
GOWSALYA சகோதரரே,ஆஞ்சநேயப் பிரபாவம் என்று எழுதியுள்ளீர்கள்,ஆனால் அது என்ன என்பதயும் விளக்கமாக தந்தால்,மிக உதவியாக இருக்கும் நன்றி.....வீட்டு வாசலில் கோலமிட்டு பூ வைப்பது,வீட்டு முற்றத்தில் பொங்கல் பொங்குவது என்று எல்லாம் நம்மை விட்டுப் போய் 22 வருஷங்கள் ஆகிவிட்டன என்பதை மிகக் கவலையுடன் தான் சொல்லணும்.....நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X