இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

கிளி போல மனைவி இருந்தாலும்...

என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, "அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.
ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், நாளைடைவில் மனம் மாறி, இப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. "அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன். சம்மதம் என்றால் வீட்டில் இரு. இல்லையெனில், விவாகரத்து செய்து கொள்வோம்...' என்று மிரட்டும் அளவுக்கு நிலமை முற்றி விட்டது.
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இன்றி, வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வேலைக்காரி போல, ஒரே வீட்டில் இருக்கிறாள் தோழி. ஆண்களின் மனம் குரங்கு போன்றது. எனவே, எதைப் பேசினாலும் யோசித்து பேசுங்கள் பெண்களே!
திவ்யா சுரேந்தர், மதுரை.

ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!

"நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.
"உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. "முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.
குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். "எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.
அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.
"இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து @பா@னாம்.
— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.

இன்று பேச மாட்டேன்

என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.
ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன். "கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் இருக்காரு...' என்றான்.
இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.
"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும், இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம், வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.
— பரந்தாமன், செய்யாறு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramachandran n - madurai,இந்தியா
18-டிச-201211:25:30 IST Report Abuse
ramachandran n மௌன விரதத்திற்கு சம்பளம் கொடுப்பாங்களா பாஸ் ?
Rate this:
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
17-டிச-201209:25:37 IST Report Abuse
srinivasan sulochana 1) மௌனவிரதம் பற்ரிய கடிதம் நன்றாக உள்ளது. வாசகர் ராமன் அவர்களின் ஆலோசனையுடன் அது முழுமை பெறுகிறது. மிகவும் உபயோகமான விஷயங்கள். முயற்சிக்க நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Suresh kumar - chennai,இந்தியா
16-டிச-201223:20:25 IST Report Abuse
Suresh kumar இந்த வாரம் இடம் பெற்ற அனைத்து பகுதிகளும், சிறப்பாக இருந்தது. குறிப்பாக பரிசு கடிதங்கள் கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வார வாரம் புது வாசனை தரும் வாரமலர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X