கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:00

கேள்வி: 2012 ஆம் ஆண்டு முடியப்போகிறது. டிஜிட்டல் சந்தையில், இந்த ஆண்டு வெளியாகி மக்களைச் சென்றடைந்த சிறந்த பொருட்களாக, வசதிகளாக எதனை நீங்கள் மதிக்கிறீர்கள்?
டி. எஸ். மார்த்தாண்டன், தென்காசி.
பதில்:
பயன் அடிப்படையில் எனக்குத் தெரிந்தவற்றை நான் சொல்கிறேன். மற்றவர்களின் கண்ணோட்டத்தில், வேறு சிலவும் இருக்கலாம். முதலாவதாக, விண்டோஸ் 8. மைக்ரோசாப்ட், விண்டோஸ் 95க்குப் பின்னர், நம் டிஜிட்டல் அனுபவத்தில், முழுமையான மாற்றம் தரும் வகையில் கொண்டு வந்த மாபெரும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். நெடுங்காலமாக, விண்டோஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு இது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், அடுத்தடுத்து புதிய வசதிகளை நாடுபவர்களுக்கு இது நிச்சயம் ஒரு சிறந்த உருவாக்கமாகவே இருக்கும். இரண்டாவதாக, ஆப்பிள் ஐபேட் (thirdgen). இதனை இங்கு கூறுவதற்குக் காரணம், டேப்ளட் சந்தையில் இது ஏற்படுத்திய தாக்கம் தான். மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிக ரெசல்யூசன் கொண்ட ரெடினா டிஸ்பிளே கொண்ட முதல் சாதனம் இதுதான் என்பதுவும் இதன் சிறப்பிற்குக் காரணம்.
அடுத்ததாக, இன்டெல் ஐவி பிரிட்ஜ் சிபியு. இது கிடைத்ததன் மூலம், லேப்டாப் 8 மணி நேர பேட்டரி சாத்தியமாயிற்று. மின்சக்தி அடிப்படையில் புதிய செயல் திறனை இந்த சிபியு சாத்தியமாக்கியது. 2012ல் விலை மலிவான பல டேப்ளட்கள் வந்தன. அவற்றில் மிகச் சிறந்த செயல் திறனைத் தந்தது கூகுள் நெக்சஸ் 7 ஆண்ட்ராய்ட் டேப்ளட் ஆகும். அந்த வகையில் இது சிறப்பானது. இறுதியாக நான் மதிப்பது, ஆப்பிள் ஐபேட் மினி டேப்ளட். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மிகச் சிறிய டேப்ளட் சாதனைத்தைப் பயன்படுத்துவதே ஒரு சந்தோஷம் தரும் அனுபவமாகும். இதற்கு முன் வந்த ஐபேட் சாதனங்களைக் காட்டிலும், அதிக ரெசல்யூசன் கொண்ட டிஸ்பிளே இதன் சிறப்பிற்குக் காரணம். ரெடினா இல்லை என்பது ஒரு குறை.
இதனுடைய விலை மட்டும் இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்தால், 2012ன் டிஜிட்டல் சாதனங்களில், முதல் இடத்தில் வைத்துக் கொண்டாடி இருக்கலாம். இந்த பட்டியலில் இன்னும் சில சாதனங்கள், வசதிகள் இருக்கலாம். அவை எனக்குப் பழக்கம்
இல்லாமல் இருக்கலாம்.

கேள்வி: மின்னஞ்சல்களுக்கு நான் யாஹூ பயன்படுத்துகிறேன். என் யூசர் ஐ.டி. நிரப்பியவுடன், என் பாஸ்வேர்ட் தானாக, அதற்கான கட்டத்தில் காட்டப்படுகிறது. என்ன செய்தாலும், இந்த நிலை நீடிக்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?
டி.எஸ். ஹம்ஸா மோனி, கோவை.
பதில்:
பாஸ்வேர்ட் காட்டப்படுவதற்கான காரணம், எப்போதோ, நீங்கள் save my password அல்லது remember passwords கிளிக் செய்திருப்பீர்கள். அதனால், உங்கள் வெப் பிரவுசரில், நீங்கள் தந்த பாஸ்வேர்ட் சேவ் செய்யப்பட்டிருக்கும். கவலைப்பட வேண்டாம். இதனை நீக்குவது எளிதுதான். சில பிரவுசர்கள், நீங்கள் தந்துள்ள அனைத்து பாஸ்வேர்ட்களையும் நீக்கும்; சில குறிப்பிட்ட யூசர் நேமிற்கான பாஸ்வேர்டை மட்டும் நீக்கும். கீழே அனைத்து பிரவுசர்களிலும், இதனை செட் செய்வது எப்படி எனத் தருகிறேன்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பேவரிட்ஸ் ஸ்டார் அடுத்து உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்து “Internet Options.” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் general டேப் பிரிவில், பிரவுசிங் ஹிஸ்டரி கீழாக “delete” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து அனைத்து டிக் அடையாளங்களை நீக்கவும். “passwords” என்பதில் மட்டும் டிக் அடையாளம் இருக்கட்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை பாஸ்வேர்டை நினைவில் கொள்ளவா எனக் கேட்டு சிறிய விண்டோ வருகையில் “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.
2. கூகுள் குரோம்: புக்மார்க் ஸ்டார் அருகே உள்ள நெட்டு பாரில் customize and control Google chrome கிளிக் செய்திடவும். அடுத்து “settings” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து “advanced settings…” என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், “Managed Saved Passwords.” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு யாஹூ வெப் முகவரியைக் கண்டு, அதன் அருகே உள்ள X அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இதனால், சேவ் செய்யப்பட்ட தகவல் அழிக்கப்படும். அடுத்த முறை, பாஸ்வேர்டை சேவ் செய்திடவா என்ற கேள்விக்கு “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.
3. மொஸில்லா பயர்பாக்ஸ்: இடது புறம் மேலாக உள்ள பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் options menu வில் கிளிக் செய்து, பின்னர் “Options” என்பதில் கிளிக் செய்க. கிடைக்கும் டேப்பில், “Saved Passwords” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு யாஹூ தள இடத்தைக் கண்டு, அதில் “remove” என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் என்பதில் கிளிக் செய்து வெளியே வரவும். அடுத்து பாஸ்வேர்டை நினைவில் கொள்ளவா என்ற கட்டம் கிடைக்கையில், “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் மொபைல் போனைப் பயன்படுத்துகிறேன். இதில் குறிப்பிட்ட எண்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களைத் தடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?
தி.நிர்மல் குமார், சென்னை.
பதில்:
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் play.google.com என்ற இணைய தளம் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோர் சென்றவுடன், அங்கு “SMS blocker” என்பதைத் தேடவும். அல்லது இந்த முயற்சிகளுக்குப் பதிலாக நேராக https://play.google. com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
கூகுள் பிளே ஸ்டோரில், “SMS blocker” நிறைய காட்டப்படும். ஆனால், நான் பயன்படுத்திய வகையில் Optinnno mobitech என்ற நிறுவனத்தின் புரோகிராம் நன்றாகச் செயல்படுகிறது. மேலும் இது இலவசம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், அந்த அப்ளிகேஷனைத் திறந்து, app preferences page செல்லவும். இங்கு SMS blocking மற்றும் Spam auto blocking ஆகியவற்றை On நிலையில் அமைக்கவும். Country code என்பதில், அதில் காட்டப்படும் இந்தியாவிற்கான குறியீட்டு எண்ணை அமைக்கவும்.
இந்நிலையில், அப்ளிகேஷன் இயங்கத் தொடங்கி, எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கும்போது, அவற்றைக் கண்காணிக்கும். ஸ்பேம் மெசேஜ் கிடைக்கும்போது, அவற்றை உங்களுக்குக் காட்டி இதுஸ்பேம் தானா என்று கேட்டு, தடை செய்வதனை உங்கள் விருப்பத்திற்கு விட்டுவிடும்.
அடுத்தபடியாக, குறிப்பிட்ட எண்ணிலிருந்து கிடைக்கும் மெசேஜ்களை, இன்பாக்ஸில் நுழையவிடாமல் தடுக்கும் வகையில் செட் செய்திடலாம். இந்த அப்ளிகேஷனில் “Block” டேப் செல்லவும். அடுத்து “Add New” கிளிக் செய்திடவும். இங்கு மூன்று வகையில் போன் எண்ணை அமைக்கலாம். நீங்களாக எண்ணைத் தரலாம், இன் பாக்ஸிலிருந்து எண்ணைச் சுட்டிக்
காட்டலாம் மற்றும் ஸ்பேம் பாக்ஸிலிருந்து எண்ணைச் சுட்டிக் காட்டலாம். இவை தவிர “Filter” என்று ஒரு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனில், ஸ்பேம் மெயில்களில் உள்ள செய்திகளில் சில சொற்கள் இருந்தால், அவற்றை ஒதுக்குமாறு, சொற்களை செட் செய்திடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X