விளையாட்டு ரசிகர்களுக்கு ஸ்பைஸ் போன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
விளையாட்டு ரசிகர்களுக்கு ஸ்பைஸ் போன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் எம்6 என்ற பெயரில், விளையாட்டினை ரசிக்கும் தன் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்தும் வகையில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. விளையாட்டு செய்திகள் மற்றும் தகவல்களை நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூடப் பெறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. யாஹூ ஸ்போர்ட்ஸ், யாஹூ டென்னிஸ், ஹாயூ பார்முலா 1 ஆகிய விளையாட்டு தொடர்பான தளங்களையும் பேஸ்புக், யாஹூ மற்றும் நிம்பஸ் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களையும் சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக ஆப்பரா மினி வெப் பிரவுசர், வுகிளிப் என்னும் வீடியோ ஷேரிங் அப்ளிகேஷன் ஆகியவையும் பதிந்தே தரப்படுகிறது. இது இரண்டு சிம் கார்டுகளை இயக்கும். கருப்பு வண்ணத்தில், ஆரஞ்ச் அல்லது பச்சை கோடுகளுடன் விளையாட்டு வீரர்களுக்கேயான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் 1000 mAH  திறன் பேட்டரி, 5 மணி நேரம் தொடர்ந்து பேசிட வழி தருகிறது. 2.2 அங்குல வண்ணத்திரை, ஜி.பி.ஆர்.எஸ்., வாப், ஸ்டீரியோ புளுடூத், யு.எஸ்.பி., 1.3 எம்.பி. கேமரா, ரெகார்டிங் திறனுடன் எப்.எம். ரேடியோ மற்றும் 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4,499 எனக் குறியிடப்பட்டுள்ளது.


Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X