2012 தந்த பயனுள்ள பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:00

பிரவுசர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருவதில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அறிமுகப்படுத்தியதுடன், மற்றவர்களும், அதே போல தயாரித்து வழங்க அனுமதி அளித்தது மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசராகும். சென்ற 2012ல், பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வந்த சில பயனுள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.
டிசம்பர் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்தது collusion என்னும் புரோகிராம். இது பாதுகாப்பு தரும் புரோகிராம் ஆகும். எந்த இணைய தளங்கள், நாம் இணையத்தில் உலா வரும் வழிகளைக் கண்காணிக்கின்றன என்று நமக்குத் தெரிவிக்கும் பணியினை இது மேற்கொள்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்கள், எவ்வாறு ட்ரேக்கர்களுக்கும்
நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. https://addons.mozilla.org/firefox/addon/collusion/?src=externaldenblog என்னும் முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
நவம்பரில் கிடைத்த புரோகிராம்களில் சிறப்பானது URL Fixer என்பதாகும். நாம் அட்ரஸ் பாரில், இணைய முகவரிகளை டைப் செய்திடுகையில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், உடனே அந்த பிழைகளை இது திருத்தி அமைக்கும். எடுத்துக்காட்டாக google.con என டைப் செய்தால், அதனை google.com என அமைக்கும். https://addons.mozilla.org/firefox/addon/urlfixer/?src=externaldenblog என்ற முகவரியில் உள்ள தளம் இதனைத் தருகிறது.
அக்டோபரில் வந்தவற்றில் நான் பரிந்துரைப்பது PearlTrees என்னும் புரோகிராம். புதிய இந்த சோஷியல் லைப்ரரியில், நாம் விரும்புவதைச் சேர்த்து, வகைப்படுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கு பிரியமானவற்றை உங்கள் விரல் நுனிகளில் வைத்து மகிழ முடிகிறது. https://addons.mozilla.org/firefox/addon/pearltrees/?src=externaldenblog என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
செப்டம்பரில் https://addons.mozilla.org/firefox/addon/twitbin/?src=externaldenblog என்ற முகவரியிலிருந்து கிடைக்கப் பெற்ற TwitBin என்னும் புரோகிராம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ட்விட்டர் தளத்தில் நாம் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல்கள், செய்திகள் மற்றும் பிறவற்றை மொத்தமாக இணைத்துப் பார்க்க உதவுகிறது. ஆகஸ்ட் மாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் சிறந்தது Memonic Web Clipper. இதன் மூலம், இணையப் பக்கம் ஒன்றில், உங்களுக்குப் பிடித்த பகுதிகளை மட்டும், தனித்தனியே தேர்ந்தெடுத்து, மொத்தமாக நாம் விரும்பும் இடத்தில் பதிந்து, சேவ் செய்திட உதவுகிறது. கிடைக்கும் தளம் https://addons. mozilla.org/firefox/addon/memonicwebclipper/?srcexternaldenblog.
ஜூலை மாதத்தின் சிறந்த புரோகிராம் 365 scores Notifier. இது விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ள புரோகிராம். எல்லா ஸ்கோர், அப்டேட் மற்றும் விளையாட்டு வீரர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேர்த்து வைக்க உதவுகிறது. https://addons.mozilla.org /firefox/addon/365scoresnotifier/?src=externaldenblog என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.
பயர்பாக்ஸ் ஏற்கனவே Do Not Track என்னும் வசதியினைக் கொண்டுள்ளது. இது நீங்கள் செல்லும் இணையதளத்திடம், உங்களின் ஆன் லைன் செயல்பாடுகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறது. ஆனால், ஜுனில் தரப்பட்ட Do Not Track Plus என்னும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம், இந்த வகையில் இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. இதன் மூலம், என்ன வகையான ட்ரேக்கிங் தொழில் நுட்ப வழிகளை, இணைய தளங்கள் கையாள்கின்றன என்று நீங்கள் பார்க்கலாம். தெரிந்து கொண்டு அவற்றைத் தடுக்கலாம்.
இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://addons.mozilla.org /enUS/firefox/addon/donottrackplus/?src=externaldenblog.
பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து, அதன் கட்டமைப்பு குறித்து, மறைத்து தரப்படும் சில தகவல்கள் குறித்து அறிந்து கொண்டு, உங்கள் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்ல வேண்டுமா? மே மாதம் வெளியான Cheevos for Firefox என்னும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் உங்களுக்கு இந்த வகையில் உதவும். இதனைப் பெற https://addons.mozilla.org/ enUS/ firefox/addon/cheevos/?src=externaldenblog என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
ஏப்ரலில் வெளியான Tab Badge என்னும் புரோகிராம் மூலம், நாம் பல தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஏதேனும் ஒரு தளத்தில் உள்ள இணையப் பக்கத்தில், புதியதாக ஒன்று சேர்க்கப்பட்டால், அந்த டேப்பின் வழி சுட்டிக் காட்டும். இதனைப் பெற https://addons.mozilla.org/firefox/addon/tabbadge/?src=externaldenblog என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
மார்ச் மாதம் கிடைக்கப் பெற்ற புரோகிராம்களில், Fabtabs என்பது பயர்பாக்ஸ் பிரியர்களிடையே மிகப் பிரசித்தி பெற்றதாகும். இது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தினை நன்கு ஆய்வு செய்து, அதில் பயன்படுத்தப்பட்ட நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கான டேப்பை அந்த வண்ணத்தில் அமைக்கிறது. இதன் மூலம் டேப்கள் வண்ணமயமாகக் காட்சி அளிப்பது மட்டுமின்றி, வண்ணத்தின் துணையுடன், மிக எளிதாக தளங்களுக்கிடையே நாம் சென்று வர முடிகிறது. இந்த புரோகிராம் https://addons. mozilla.org/firefox/addon/fabtabs?src=externaldenblog என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.
பிப்ரவரியில் வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் AllinOne Sidebar. இணையதள விண்டோக்களை, சைட் பார் பேனலாக அமைத்துத் தருகிறது. இதன் மூலம் பல விண்டோக்களினால் ஏற்படும் குழப்பத்தினைத் தீர்க்க முடிகிறது. இதனை https://addons.mozilla.org/firefox/addon/allinonesidebar/?src=externaldenblo என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
ஜனவரியில் வெளியான அதிக பயனுள்ள எக்ஸ்டன்ஷன், நம் பாஸ்வேர்ட்களை, முறைப் படுத்தும் ஒரு சீரிய புரோகிராம் ஆகும். இதன் பெயர் LastPass Password Manager. இது நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை, சீராக நினைவில் வைத்து நமக்குத் தருகிறது. இதன் மூலம் இணைய தளங்களைப் பார்வையிடுவது எளிதானதாகவும், பாதுகாப்பு மிகுந்ததாகவும் அமைகிறது. எத்தனை பாஸ்வேர்ட்களைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது? என்று அலுத்துக் கொள்பவர்களின் உற்ற தோழன் இந்த புரோகிராம். இதனை https://addons.mozilla.org/firefox/addon/lastpasspasswordmanager/?src=externaldenblog என்ற முகவரியில் பெறலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X