ஆபீஸ் கூடுதல் தொகுப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

இணையத்திற்கான பிரவுசர்களில் கூடுதல் வசதிகளைத் தர ஆட்–ஆன் தொகுப்புகள் இருப்பதைப் போல, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு ஆட் இன் (Addins) தொகுப்புகள் பல உள்ளன.
ஆட் இன் தொகுப்புகள் என்பவை COM  பைல்களே. புரோகிராம் ஒன்றுடன் இணைந்து இயங்குகையில், அதன் இயங்கு திறனை நீட்டிக்கின்றன. இதனால் நம் வேலையும் எளிதாகிறது. இவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே தன் இணைய தளத்தில் வழங்குகிறது. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை மற்ற நிறுவனங்கள் தயாரித்து வழங்கப்பட்டவையே. இவற்றில் பல இலவசமாகவே கிடைக்கின்றன. மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கான ஆட் இன் புரோகிராம்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1: Save as or print to PDF or XPS:  அடோப் நிறுவனம் பி.டி.எப். வடிவக் கோப்பினை உருவாக்கி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனைக் கையாள்வது மிக மிக எளிது என்பதால், இவற்றை உருவாக்கவும் பயன்படுத்தவும் பலரும் விரும்புகின்றனர். இவற்றை படிப்பதற்கான தொகுப்புகள் நிறைய இலவசமாகக் கிடைத்தாலும், பி.டி.எப். பைல்களை உருவாக்கும் வசதிக்கான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைப்பது அரிதாகவே உள்ளன. பிடிஎப் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான ஆட்–இன் தொகுப்பினைத் தந்துள்ளது. இதனை http://www.microsoft.com/ downloads/details.aspx?Family ID=4d9519113e7e4ae6b059 a2e79ed87041&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதன் பெயர் Microsoft 2007 Save as PDF or X  இது மட்டுமின்றி, பி.டி.எப். பைல்களை உருவாக்க மேலும் பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் பிரபலமானவை PDF995, Cute PDFWriter மற்றும்  PrimoPDF ஆகும். இவற்றையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
2: MathType with Word:  வேர்ட் தொகுப்பில் கணக்குப் போடுவதற்கான சூத்திரங்களையும், அதற்கான சிறப்பு அடையாளங்களையும் அமைக்க இந்த MathType என்னும் புரோகிராம் உதவுகிறது. இணைய தளங்கள் அமைத்தலின் போதும் டி.டி.பி. வடிவமைப்பிலும் இந்த புரோகிராமின் செயல்பாடு நம் பணியை எளிமையாக்குகிறது. அறிவியல் துறை சார்ந்த ஆவணங்களை உருவாக்குபவர்கள், கட்டுரைகளை அமைப்பவர்கள் மற்றும் கணக்கியல் சார்ந்த வாக்கியங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவியாக இருக்கும். இதனை http://www.dessci.com/en/products/ mathtype/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். மைக்ரோசாப்ட் நிறுவனமும் Microsoft math என்ற இதே போன்ற புரோகிராம் ஒன்றைத் தருகிறது. வரைபடம் உருவாக்கம், பெரிய அளவிலான கணக்கீடுகள், பதிலிகள் அமைத்து கணக்குப் போடுவது (creating graphs, performs calculations  மற்றும் variables) என்ற அளவில் இந்த புரோகிராம் நன்றாகச் செயல்பட்டு நம் பணியை எளிதாக்குகிறது. இந்த இலவச புரோகிராமினை மைக்ரோசாப்ட் தளத்தில், http://www.microsoft.com/downloads/ details.aspx?FamilyID=030fae9c704f48ca971d56241aefc764&displaylang=en  என்ற முகவரியில் பெறலாம்.
3: Lookeen for Outlook 2003 and 2007: அவுட்லுக் தொகுப்பிற்கான தேடுதல் சாதனமாக இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம். mail, attachments, appointments, tasks, notes, ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் தேடிப் பெற இந்த புரோகிராம் உதவுகிறது. இதனை http://www.lookeen.net/ என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
4: Search Commands:  ஆபீஸ் 2007 தொகுப்பில் கட்டளைகள் எவற்றைப் பயன்படுத்துவது என அறியாமல் இருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு Search Commands  என்னும் இந்த புரோகிராம் நிச்சயம் உதவும். இதனை http://www.officelabs.com/projects/searchcommands/Pages/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராமினைப் பயன்படுத்த, இதனை நம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.இது ஒரு புதிய டேப் ஒன்றை உருவாக்கும். இதில் நாம் கட்டளைகளுக்கான நம் சொற்களை உருவாக்கி அமைத்துப் பின் அவற்றை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
5: MZTools  நீங்கள் விசுவல் பேசிக் புரோகிராம் பயன்படுத்தி, உங்களுக்கான தீர்வுகளை நீங்களே அமைத்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் இந்த MZTools புரோகிராம் உங்களுக்கு நிச்சயம் தேவை. அந்த புரோகிராமிற்கான பல குறியீடுகளை மிக வேகமாகவும், எளிதாகவும் அமைக்க இந்த புரோகிராம் உதவுகிறது. இதனை http://www.mztools.com/v3/ mztools3.aspx  என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X