செப்டம்பர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


செப்., 5: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் நிலை, தேர்வு, தேர்ச்சி சதவீதம் பற்றிய விவரம் அடங்கிய, இணையதளத்தை (www.tnschools.gov.in), முதல்வர் ஜெ., துவக்கினார்.
செப்., 10: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் வன்முறை. போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல்.
செப்., 13: கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்க கோரிய மேல் முறையீட்டு வழக்கில், தடை விதிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு.
செப்., 14: இலங்கையில் ஆஸ்திரேலியா செல்ல முயன்று, நடுக்கடலில் படகு பழுதானதால், 19 நாட்கள் உணவு, குடி நீர் இல்லாமல் தத்தளித்த 65 பேரை, நாகை மீனவர்கள் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் சேர்ப்பு.
செப்., 20: ஸ்ரீரங்கம் மற்றும் பழனி கோவில்களில், "முழுநேர அன்னதான' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
செப்., 27: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு புதிய கட்டடம், முதல்வர் ஜெயலலிதா திறப்பு.
செப்., 29: தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா.
செப்., 30: கிருஷ்ணகிரி தளி அருகே விவசாய நிலத்தில் 800 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த, 3 வயது குழந்தை, 4 மணி நேர போராட்டத்திற்கு பின், உயிருடன் மீட்பு.

இந்தியா

செப்., 7: பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர், 106 மணி நேரம் நடப்பதற்கு பதிலாக, வெறும் 26 மணி நேரமே நடைபெற்றது.
செப்., 8: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மூன்று நாள் பாகிஸ்தான் பயணம்.
செப்., 9: இந்தியாவின் நூறாவது விண்வெளி திட்டம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி., - சி21 என்ற ராக்கெட்டில் பிரான்சின் ஸ்பாட்-6 என்ற செயற்கைக்கோளும், ஜப்பானின் பிராய்டர்ஸ் என்ற செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டது.
செப்., 10: இந்தியா, பாலஸ்தீனத்துக்கு உதவும் வகையில், 54 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது.
செப்., 14: டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு. ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் என புதிய கட்டுப்பாடு அமல்.
செப்., 20: டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பந்த்.
செப்., 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.
செப்., 25: மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்., கட்சியின் அஜித் பவார், துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா.
செப்., 26: தேர்தல் பிரசாரத்தின் போது, விலங்குகள் மற்றும் பறவைகளை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை.
செப்., 29: இந்தியாவின் அதிக எடை கொண்ட (3,400 கிலோ) "ஜி சாட்-10' பிரெஞ்ச் கயானாவில் இருந்து, "ஏரியான்-5' ராக்கெட் மூலம், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

உலகம்

செப்., 9: ஈராக்கில் எட்டு நகரங்களில் நடந்த தொடர் தாக்குதல்களில், 58 பேர் கொல்லப்பட்டனர்.
செப்., 17: பாபுர் என்ற முதல் அணுஆயுதம் தாங்கிய ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்து பார்த்தது. 700 கி.மீ., தூரம் சென்று தாக்கக் கூடியது.
செப்., 28: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, எவரெஸ்ட் சிகர பகுதியான லுக்லா நகரை நோக்கி சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்ததில் பயணம் செய்த 19 பேரும் பலி.

விளையாட்டு


செப். 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்.
செப். 11: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே கோப்பை வென்றார்.
செப். 15: இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு சிறந்த இளம் வீரர் விருது (ஒரு நாள் போட்டி).
செப். 16: நியூசிலாந்துக்கு எதிரான "ஆசிய ஓசியானா குரூப்-1' டேவிஸ் கோப்பை தொடரை இந்தியா (5-0) வென்றது.
* லண்டன் ஒலிம்பிக்கில் பயசுடன் விளையாட மறுத்த மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு 2 ஆண்டு தடை.
* பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து தொடரில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்.
செப். 23: உலக கோப்பை வில்வித்தை தொடரில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு வெள்ளி.
செப். 28: கனடா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பபிதா குமாரி வெண்கலம் வென்றார்.
செப். 29: பெண்கள் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கீதா குமாரிக்கு வெண்கலம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X