நவம்பர் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
நவம்பர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


நவ., 2: சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.
நவ., 14: குடும்பத்துடன் சிவகங்கை மாணவர் அணி செயலர் கதிரேசன், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.
நவ., 19: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, பள்ளி வாகனங்கள் வேலைநிறுத்தம்.
நவ., 20: திண்டுக்கல் - பழனி இடையே புதிய அகலப் பாதையில், ரயில் பயணம் தொடங்கப் பட்டது.
நவ., 22: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட, 675 புதிய பஸ்களை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
நவ., 26: ஆண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த, நடிகை சோனா மீது நடவடிக்கை கோரி, எழும்பூர் கோர்ட்டில் மனு.
நவ., 29: காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் அறிவுரைப்படி தமிழக - கர்நாடக முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.
நவ., 30: திருப்பாசேத்தி எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கு குற்றவாளிகள், பிரபு மற்றும் பாரதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

இந்தியா

நவ., 5: இரோம் சானு சர்மிளா என்பவர், மணிப்பூரில் அமலில் உள்ள "ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் -1958'யை கைவிட வலியுறுத்தி 12 ஆண்டுகால உண்ணாவிரதத்தை முடித்தார்.
நவ., 4: சார்க் நாடுகளின் 6வது சபாநாயகர்கள் மாநாடு இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதில் சபாநாயகர் மீரா குமார் பங்கேற்பு.
நவ., 6: காங்., கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரமணிய சுவாமி கொடுத்த மனு தள்ளுபடி.
* மகாத்மா காந்தி பேரன் சாந்தி காந்தி, அமெரிக்க மாகாண தேர்தலில் வெற்றி.
நவ., 11: ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் இந்தியா வந்தார். இரு நாடுகளுக்கிடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நவ., 14: மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி, மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை.
நவ., 15: கம்போடியாவில் நடந்த கிழக்கு ஆசியா மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.
நவ., 19: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சூரியனார் கோவிலில், சாத் பூஜை கொண்டாட்டத்தின்தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததில், 18 பேர் பலி.
நவ., 23: எதிரிகளின் ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் திறன் பெற்ற, இந்தியாவின் சூப்பர்சானிக் ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை.
நவ., 25: கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பா.ஜ., எம்.பி., ராம் ஜெத்மலானி, "சஸ்பெண்ட்' .

உலகம்


நவ., 8: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 44 பேர் பலி.
நவ., 12: இந்தியா - மாலத்தீவு இடையே கூட்டு ராணுவ பயிற்சி முகாம், பெல்காமில் 12 நாள் நடந்தது.
நவ., 15: அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் வெற்றிக்குப் பின், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம்.
நவ., 19: இந்திராகாந்தி சர்வதேச அமைதி விருதுக்கு லைபீரியாவின் பெண் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தேர்வு.
நவ., 21: ஐ.நா., சபையில் நடந்த மரணதண்டனை ஒழிப்பு தீர்மானம் தொடர்பான ஓட்டளிப்பில், இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பு.
நவ., 25: வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள ஜவளி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 137 பேர் பலி.

விளையாட்டு


நவ. 4: பரிபாஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிசில் இந்தியாவின் மகேஷ் பூபதி, போபண்ணா ஜோடி சாம்பியன்.
நவ. 18: "சுல்தான் ஜோகர்' கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெள்ளி.
நவ. 24: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில், இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி தோல்வி.
நவ. 25: "சூப்பர் சீரிஸ்' ஹாக்கி தொடரில், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X