கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

கேள்வி: என்னுடைய பழைய பேஸ்புக் அக்கவுண்ட்டினை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியுமா? அல்லது புதியதாகத் தொடங்க வேண்டுமா?
கா.சிக்கந்தர், காரக்கால்.
பதில்:
ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றியதற்காக, புதுக்கணக்கு தொடங்க தேவை இல்லை. விண்டோஸ் 8ன் இயக்கம்,அந்த அளவிற்கு உங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. சரி, எப்படி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்டை விண்டோஸ் 8ல் பதிந்து தொடர்வது எனப் பார்க்கலாம். விண்டோஸ் 8ல் காணப்படும் ஒரு புதிய வசதி People hub என்பதாகும். இதன் மூலம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் நேரடியாக உள்ளீடு செய்திடலாம். அது மட்டுமின்றி, உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என தனி டைல் உருவாக்கலாம்.
முதலில் People hub இயக்கத்தினை இயக்குங்கள். Accounts menu காட்டப்படும். Add an account என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், எந்த சோஷியல் நெட்வொர்க் தளம் Select a social network என்பதனைத்தேர்ந்தெடுக்கவும். தற்போது Facebook, Twitter and LinkedIn ஆகிய மூன்று சமூகத் தளங்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன. அடுத்து Connect என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் (Log in to your account) செய்திடவும். தொடர்ந்து “you’re ready to go” என்று ஒரு ஸ்கிரீன் காட்டப்படும். முடிவாக Done என்பதில் கிளிக் செய்திடவும். இதே வழி சென்று மற்ற சோஷியல் தளங்களில் உள்ள அக்கவுண்ட்களையும் செயல்படுத்தலாம்.

கேள்வி: புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, பழைய இன்டர்நெட் இணைப்பினைப் பயன்படுத்துகிறேன். இதில் தற்போதைய ஸ்பீட் எப்படிக் கணக்கிடுவது? வேகமாக இருக்கும் என என் நண்பர்கள் கூறுகின்றனர்.
என். கமலேஷ், திருவண்ணாமலை.
பதில்:
புதிய கம்ப்யூட்டரின் ப்ராசசர், ராம் மெமரி ஆகியவற்றின் செயல்வேக அடிப்படையில், இன்டர்நெட் வேகம் சற்று மாறுபாட்டினை ஏற்படுத்தலாம். மேலும் இமெயில் பார்ப்பது, பேஸ்புக்கில் செய்திகளைப் படிப்பது போன்ற செயல்பாடுகளில், நமக்கு வழங்கப்படும் இணைய அளவு அவ்வளவாக பயன்படுத்தப்பட மாட்டாது. பைல்கள் இறக்கம், பாடல்கள் மற்றும் மூவி இறக்கம் ஆகியவற்றில் தான், இன்டர்நெட் பேண்ட்வித் அதிகம் பயன்படுத்தப்படும்.
இன்டர்நெட் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றில் Speedtest.net என்ற தளம் சிறப்பாக இயங்குகிறது. இன்டர்நெட் இணைப்பு பெற்று, இந்த தளம் சென்றால், அதுவே உங்களுக்கு வழி காட்டும். பின் முடிவில், நீங்கள் இயங்கும் நகரம், அதற்கான மேப், இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் சேவை நிறுவனப் பெயர், அப்லோடிங் மற்றும் டவுண்லோடிங் வேகம் ஆகியவற்றைக் காட்டும்.

கேள்வி: யு.ஆர்.எல். மற்றும் கம்ப்யூட்டருக்கான கட்டளை வரிகளில் ஏன் இரண்டு வகையான சாய்வு கோடுகள், முன்புறமாக, பின்புறமாக (Forward slash backslash) எனப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதப்படுகிறதே ஏன்?
சா.நிர்மலா, மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. முன்னோக்கி மற்றும் பின்னோக்கி என இரண்டு வகையான ஸ்லாஷ் கோடுகளைப் பயன்படுத்துகிறோம். இதில் நிச்சயம் ஓர் அடிப்படை செயல் வேறுபாடு உள்ளது. முன்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, கட்டளையில் நீங்கள் சிஸ்டம் இல்லாமல் வெளியே சிலவற்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள் தருகிறது. எடுத்துக் காட்டு, இணைய தள முகவரிகள். பின்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, அந்த கட்டளை மூலம் நீங்கள், உங்கள் சிஸ்டத்தில் உள்ள ஒன்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள். ஒரு ட்ரைவ் அல்லது பைல் ஒன்றைக் குறிப்பிடுகையில், இந்த வகை சாய்வு கோட்டினை அமைக்கிறோம்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு தேவை எனப் பல வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். இதனால், மைக்ரோசாப்ட் இதற்கென பேட்ச் பைல் எதனையாவது தரும் என எதிர்பார்க்கிறீர்களா? நான் ஆசையுடன் காத்திருக்கிறேன்.
எஸ். டி. இளங்கோ, திருப்பூர்.
பதில்:
ஸ்டார்ட் மெனு போனது போனதுதான். இனி மேல் அதனைத் திரும்ப தரும் எண்ணமெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இல்லை. உங்களுக்கு அது கட்டாயம் தேவை என்ற ஆசை இருந்தால், தர்ட் பார்ட்டி தரும் ஸ்டார்ட் மெனு பயன்பாட்டு புரோகிராம்களைப் பயன்படுத்துங்கள். இந்த வகையில் ஆறு அல்லது ஏழு புரோகிராம்கள் குறித்து படித்துள்ளேன். டவுண்லோட் செய்து பயன்படுத்தியும் பார்த்துள்ளேன். அவற்றில் இரண்டு புரோகிராம்கள் மிக நன்றாக, எந்தவித இடையூறும் இன்றிஇயங்குகின்றன. ஒன்றின் பெயர் classicshell. இது கிடைக்கும் இணையதள முகவரி http://classicshell.sourceforge.net. இது முற்றிலும் இலவசம். இன்னொன்று start8 என்பதாகும். கிடைக்கும் தள முகவரி:http://www.stardock. com/products /start8/download.asp. இது பழகிப் பார்க்க, சோதனை செய்திட சில நாட்களுக்கு மட்டும் இலவசமாகக் கிடைக்கும். காலம் முடிந்தவுடன் கட்டணம் 4.99 டாலர் செலுத்த வேண்டும்.

கேள்வி: என் புதிய கம்ப்யூட்டருடன் வழக்கம் போல பல கேம்ஸ் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இவற்றை வேண்டாம் என நீக்க விரும்பினால், எங்கு என்ன கட்டளை கொடுக்க வேண்டும். இதனால் சிஸ்டம் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுமா?
டி.சிவப்பிரகாஷ், நாகர்கோவில்.
பதில்
: நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் என்ன பதிப்பு எனக் கூறவில்லையே! விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என நினைக்கிறேன். இதனுடன் தரப்பட்டுள்ள கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டத்திற்குப் பாதிப்பு ஏற்படாது. Start>Control Panel செல்லவும். பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் “Turn Windows Features On or Off” என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் உள்ள “Games” என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும். பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம். என்ன இருந்தாலும் கேம்ஸ் இல்லாத ஒரு கம்ப்யூட்டரா என்று உங்கள் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் சண்டைக்கு வரலாம். எதற்கும் அவர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

கேள்வி: டெக்ஸ்ட் எடிட்டிங் செய்கையில் நாம் கட், டெலீட், பேக் ஸ்பேஸ் என ஒரே மாதிரியான கட்டளைகளைப் பயன்படுத்துகிறோம். இவை செயல்படுவதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?
கே. கண்ணபிரான், ஹோசூர்.
பதில்:
இந்த கட்டளைகள் எல்லாம் ஒரே மாதிரியான செயல்பாட்டினை மேற்கொள்வது போல் தெரியும். விளைவுகள் ஏறத்தாழ சமமாக இருந்தாலும், இவை செயல்படுவதில் சின்ன சின்ன வித்தியாசம் இருக்கிறது. சற்று விளக்கமாகப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட் (Cut Ctrl+x) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது.
அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace)பயன்படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்துவிடுகிறது. இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X