கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
00:00

கேள்வி: நான் அண்மையில் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறியுள்ளேன். இதில் காட்டப்படும் கம்ப்யூட்டர் நேரம் தவறாக உள்ளது. இதனை எப்படித் திருத்தி அமைப்பது?
என். எஸ். ராதாகிருஷ்ணன், திருப்பூர்.
பதில்:
இந்தப் பிரச்னை உள்ளதாகப் பலர் கடிதங்களை அனுப்பி உள்ளனர். விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம் என்னவென்று காட்ட, இன்டர்நெட் தொடர்புள்ள “time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், காட்டப்படும் நேரம் தவறாக இருக்கலாம். இதனைச் சரி செய்திட கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் விண்டோஸ் 8 திரையின் கீழாக வலது புறத்தில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்திடவும். ஆப்ஷன்ஸ் மெனு பாப் அப் ஆகி வந்தவுடன், Adjust date/time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் ‘Internet Time’ என்ற டேபில் கிளிக் செய்திடவும். அடுத்து ‘Change settings’ என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த திரைக் காட்சியில் ‘Synchronize with an Internet time server.’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கீழ்விரி மெனு கிடைக்கும். இதில் ‘time.windows.com’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பின்னர், ‘Update now’ என்பதனைத் தேர்ந்தெடுக்க, நேரம் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரை இன்ஸ்டால் செய்கையில், இந்தியாவிற்கேற்றபடி இடம் செட் செய்திருக்க வேண்டும். சிஸ்டம் இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

கேள்வி: கம்ப்யூட்டர் பொறியியல் பிரிவில் Form factor என்பது எதனைக் குறிக்கிறது? ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாகப் பொருள் தருகின்றனர். அன்பு கூர்ந்து விளக்கம் தரவும்.
கா. சிவகுமார், ஐ.டி. மாணவர், சிவகாசி.
பதில்
: பாடப்புத்தகத்தில் விளக்கம் கேட்பது போல உங்கள் கேள்வி உள்ளதால், சற்று நீளமான பதிலையே தருகிறேன். இது கம்ப்யூட்டரில் Form factor என்பது, மதர்போர்ட் ஒன்றின் அம்சங்களைக் குறிக்கிறது. அதன் அளவு, பொதுவான வடிவமைப்பு, வழங்கப்படும் மின் சக்தி, பின்புறமாக அமைக்கப்படும் போர்ட் மற்றும் பிற வடிவமைப்பு சம்பந்தமான அனைத்தும் இந்த இரு சொற்கள் இணைந்து குறிக்கின்றன. பொதுவாக இப்போது புழக்கத்தில் இருக்கும் Form factor அளவு ATX (Advanced Technology eXtended) ஆகும். இதனை 1995ல், இன்டெல் நிறுவனம் வடிவமைத்தது. இன்னும் இதனையே பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. ATX போர்டுகள் அளவில் பெரியவை. நிறைய விரிவாக்க ஸ்லாட்களை அமைக்கலாம். கிராபிக்ஸ் கார்ட் மற்றும் பிற வசதிக்களுக்கான இணைப்பிற்கு இடம் அளிக்கும். microATX மற்றும் Nano/Pico ITX எனப் பிற வகை போர்டுகளும் உள்ளன.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்கத் தொடங்கி விட்டேன். இதற்கான ட்ராப் பாக்ஸ் பதிப்பு எங்கு கிடைக்கும்? இந்த சிஸ்டத்திற்கான ட்ராப் பாக்ஸ் தேவையா?
என். ஜே.லஷ்மி, கோவை.
பதில்:
ட்ராப் பாக்ஸ் பயன்படுத்திப் பழகிய அனைவரும், விண்டோஸ் 8க்கு மாறிய பின்னர், இந்த சிஸ்டத்திற்கேற்ற வகையிலான ட்ராப் பாக்ஸ் எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்தனர். உங்கள் காத்திருப்புக்கு பதில் கிடைத்துவிட்டது. விண்டோஸ் 8க்கான ட்ராப் பாக்ஸ், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது. இதனைப் பதிந்து வைத்து, விண்டோஸ் 8 சிஸ்டம் வழியிலேயே பயன்படுத்தலாம். அதில் உள்ள பைல்களை, உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கலாம். கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களை, எளிதாக ட்ராப் பாக்ஸில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். உங்கள் போட்டோக்களை, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ட்ராப் பாக்ஸ் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
முதலில் http://apps.microsoft.com /windows/ enUS/app/dropbox/78b08472168e496ea8f59601892da4fa என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ட்ராப் பாக்ஸ் பார் விண்டோஸ் 8 பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ஏற்கனவே, எப்படி உங்கள் அக்கவுண்ட்டினப் பயன்படுத்தினீர்களோ, அதே போல இதனையும் பயன்படுத்தலாம். முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்று சிறிய அளவில், ஆனால், அதே வசதிகளுடன் ட்ராப் பாக்ஸ் இருப்பதைக் காணலாம்.

கேள்வி: ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த செல்லினம் மென்பொருள் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரையைப் படித்து, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினேன். ஆண்ட்ராய்ட் சாதனங்களில் தமிழைக் கையாளுவது போல, ஆப்பிள் போன்களிலும், ஐபேட் சாதனத்திலும் நேரடியாகத் தமிழை டைப் செய்திட முடியவில்லையே ஏன்?
ஆ. சுனில் குமார், கோவை.
பதில்:
இரண்டு கட்டுரைகளையும் படித்து விட்டு, நீங்கள் கொண்டிருக்கும் சந்தேகம் கொண்ட கடிதங்கள், தொலைபேசி வழி கேள்விகளை கம்ப்யூட்டர் மலர் பெற்றுள்ளது. நீங்கள் கூறுவது சரியே. ஐபேட் மற்றும் ஐபோன்களில் செல்லினம் இயங்குகையில், மற்ற புரோகிராம்களில் நேரடியாகத் தமிழ் உள்ளீடு செய்திட இடம் தருவது இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆப்பிள் நிறுவனம் இதனை அனுமதிக்கவில்லை என இதனை வடிவமைத்த முத்து நெடுமாறன் நமக்கு பதில் அளித்துள்ளார். நேரடியாக அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், செல்லினத்தை இணைக்க ஆப்பிள் நிறுவனத்தை வற்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். எனவே வரிகளை, செல்லினத்தில் டைப் செய்து, காப்பி செய்து ஒட்டித்தான் இப்போதைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டெக்ஸ்ட் டைப் செய்து, அதனை இமெயில் அப்ளிகேஷனுக்குக் கொண்டு செல்ல இண்டிக் நோட் என்று ஒரு அப்ளிகேஷன் இவரால் வடிவமைக்கப்பட்டு ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஆனால், இதனை கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.
செல்லினத்தின் ஆண்ட்ராய்ட் பதிப்பு, வெளியான இரண்டு வாரத்தில், உங்களையும் சேர்த்து, பத்தாயிரம் பேருக்கு மேலானவர்களால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி: நான் மொஸில்லா பிரவுசர் மற்றும் தேடலுக்கு கூகுள் தேடல் இஞ்சின் பயன்படுத்தி வந்தேன். திடீரென நான் தேடல் பயன்படுத்த முயற்சிக்கையில், மை ஸ்டார்ட் சர்ச் என்னும் திரை கிடைக்கிறது. இது எதனால் ஏற்பட்டது? கூகுள் தேடல் சாதனம் கிடைக்காதா?
டி.ஏ.வசந்த், பெங்களூரு.
பதில்:
சில புரோகிராம்கள், இலவச டூல் பார்கள் அல்லது சர்ச் புரவைடர்களுடன் வருகின்றன. இவை, நம் பிரவுசர் வழியாக, நம் சர்ச் இஞ்சினை மாறா நிலைக்கு மாற்றிவிடுகின்றன. எனவே தான், நாம் எதனையும் தேட முயற்சிக்கையில், நாம் அறியாமல் பதியப்பட்ட தேடல் இஞ்சின் எழுந்து நிற்கிறது. அல்லது தானாகவே தேடத் தொடங்குகிறது. இதனை மாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில், சர்ச் பாக்ஸின் இடது புறம் உள்ள, ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு “Manage Search Engines" என்பதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் திரை மெனுவில், உங்களுக்கு விருப்பமில்லாத சர்ச் இஞ்சின்களை நீக்கலாம். நீங்கள் விரும்பும் கூகுள் சர்ச் இஞ்சினை, மாறா நிலையில் இருக்குமாறு அமைக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X