இதுதான் உண்மை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

ஜன., 27 - தைப்பூசம்

சித்தர்கள் வாழ்ந்த காலம், ஆன்மிகத்தில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவர்கள் செய்யாத அற்புதங்களே இல்லை. தகரத்தைத் தங்கமாக்கும் மூலிகைகள் கூட, நம் தேசத்து காடுகளில் வளர்ந்து கிடப்பதை அறிந்தனர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை உலகுக்கு உணர்த்த, மருத்துவக் குறிப்புகளை அவர்கள் தந்தனர். போகர் எனும் சித்தர், முருகப்பெருமானின் சிலையை, "நவபாஷாணம்' எனும் மருந்தால் செய்து உலகுக்கு வழங்கினார். "இந்த சிலையில், அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டாலே போதும். மனிதன் நோயின்றி வாழ்வான்...' என்றார். அதனால் தான், பழநியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தைப்பூசத் திருநாள் சிவனுக்குரியது. மார்கழி திருவாதிரை நாளில், "நடராஜர்' எனும் பெயரில், சிவன் தனித்து நடனக்காட்சி அருளுகிறார். தைப்பூசத்தன்று, அம்பிகையுடன் இணைந்து நடனமாடுகிறார். அதனால் தான், தைப்பூசத்தன்று பழநியிலுள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படும். ஆனாலும், மக்கள், மலைக்கோவில் முருகனுக்கு, காவடி எடுத்து, பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்யும் பழக்கம் உருவானது.
சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால், இத்தலத்திற்கு, "சித்தன்வாழ்வு' என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், முருகப் பெருமான் ஞானமாகிய கனியைப் பெற, இங்கு வந்து தங்கியதால், "பழம் நீ' என்றாகி, பழநியாக சுருங்கியது.
நாரதர் கொடுத்த மாங்கனியை, தனக்கு வழங்காமல், விநாயகப் பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப் பெருமான், இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஒரு சாதாரண கனிக்காக, முருகன் கோபிப்பாரா என்ன!
காரணம் அதுவல்ல.
மனிதர்கள், வாழ்வில் இன்பம் - துன்பம் எனும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதே நேரம், இதில் எது வந்தாலும், மனம் தடுமாறக்கூடாது. பரம ஏழைக்கு, ஒரு கோடி கிடைத்தவுடன், அவன் ஆட்டம் போடுகிறான். பெரும் பணக்காரன், ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்ததும், மனம் தளர்ந்து, விபரீத முடிவு எடுக்கிறான். இவ்வாறு இல்லாமல், எந்தச் சூழலிலும், பக்குவமாக செயல்பட வேண்டும். அந்த நல்லறிவே, "பழுத்த கனிக்கு' ஒப்பிடப்படுகிறது. அந்த கனியைத் தரும் ஞானபண்டிதனாக, முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
இன்னொரு தத்துவமும் இதில் உண்டு. தாய், தந்தை, மனைவி, அண்ணன், தம்பி, பிள்ளைகள் என, நாம் காணும் உறவுகள் எல்லாமே மாயை. உயிரோடு இருக்கும் வரை, இவர்களெல்லாம் நம்மேல் பாசம் காட்டும் பாத்திரங்களாக இருக்கின்றனர். உயிர் பிரிந்ததும், அந்த ஆத்மா வேறோர் இடத்தில் பிறவியெடுக்கும். ஏன் இப்படி மாறி மாறி பிறக்க வேண்டும். இந்த உலக இன்பங்களை வெறுத்து, பரம்பொருளான முருகனுடன் கலந்து விட்டால், பசியேது, தூக்கமேது, துக்கமேது! இந்த ஞானத்தை, தன் பக்தனுக்கு அருள்பவராக, முற்றும் துறந்து, வெறும் கோவணத்துடன் பழநியிலே காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னை நாடி வருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவும், ஆண்டிக் கோலம் கொண்டுள்ளதாக கூறுவர். தைப்பூச நன்னாளில், வாழ்க்கையின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வோம். அந்த ஞானபண்டிதனைச் சரணடைவோம். அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவோம்.
***

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜன-201313:20:12 IST Report Abuse
anandhaprasadh கட்டுரைக்கு நன்றி... முருக பக்தன் என்ற முறையில் அனைத்து முருக பக்தர்களின் சார்பாகவும் மீண்டுமொரு முறை நன்றி... ஓம் சரவணா பவ....
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
28-ஜன-201300:02:14 IST Report Abuse
GOWSALYA மிக்க நன்றி சகோதரரே......தைப்பூச நாளைப் பற்றிய விளக்கம் நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X