இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

முதல் இரவு அறைக்கதவை தட்டியவர்கள்!


நண்பனின் தங்கைக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இளம் பெண்களை, "சைட்' அடித்து, இஷ்டப்படி கிண்டல் செய்தனர். திருமண நாளில் தகராறு வேண்டாம் என்பதால் பொறுத்துக் கொண்டோம்.
அன்று இரவு, முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், அளவுக்கு மீறி உற்சாக பானம் அருந்தியதால், சுயநினைவின்றி, முதலிரவு அறைக்கதவை பலமாக தட்டினர் மாப்பிள்ளையின் நண்பர்கள். "டேய் மாப்ள... வெளியே வாடா... வழக்கம்போல் எங்களோடு சேர்ந்து குடிச்சிட்டு, உள்ளே போடா...' என்று கத்தி கலாட்டா செய்தனர். அதுவரையில் பொறுமையோடு இருந்த நாங்கள், ஆத்திரம் தாங்காமல், கட்டை, கம்புகளால் மாப்பிள்ளையின் நண்பர்களை அடித்து விரட்டினோம்.
திருமணத்திற்கு வரும் நண்பர்கள், நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த கதிதான். திருமணம் என்றாலே, நண்பர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் கலாசாரத்தை நிறுத்தினாலே பாதி பிரச்னை தீரும்.
எஸ்.எம்.ராமகிருஷ்ணன், மதுரை.

சுயமாக வேலை செய்ய குழந்தைகளை பழக்குங்கள்!


ரூமில் தங்கி வேலைப் பார்க்கிறேன். என் ரூமில் டியூப் லைட் எரியவில்லை. எனக்கு கரன்ட் சம்பந்தமாக அரிச்சுவடு கூடத் தெரியாது. சொல்ல வெட்கப்பட்டு, இதை மற்றவர்களிடம் சொல்லவில்லை. பல நாட்களுக்குப் பின், எலக்ட்ரீஷியன் வந்து சரி செய்தார்.
இன்னொரு சமயம், எதிர் வீட்டு அம்மாள், "தம்பி உனக்கு பீஸ் போடத் தெரியுமா?' என்றார். "எனக்குத் தெரியாது...' என்று சொல்வதற்குள் கூனி, குறுகி போய் விட்டேன். சின்ன வயதில் இருந்தே, "அதை தொடாதே ஷாக் அடிக்கும், அங்க போகாதே விழுந்துடுவ...' என்று, பயமுறுத்தி வளர்க்கப்பட்டதால், முப்பது வயதாகியும், கூச்சத்தாலும், பயத்தாலும் எந்த காரியத்தையும் தனியாக செய்ய முடிவதில்லை. எனவே, பெற்றோரே... உங்கள் குழந்தைகளை தைரியமுள்ள, அறிவுள்ள குழந்தைகளாக வளருங்கள். உங்கள் வீடுகளில் தச்சர், எலக்ட்ரீஷியன், பெயின்டர் ஆகியோர் வேலை செய்யும் போது, பிள்ளைகளை பார்க்க விடுங்கள். அவற்றை கூர்ந்து கவனித்து, திரும்ப செய்யுமளவிற்கு, அவர்களை பழக்குங்கள். எல்லாவற்றையும் கற்று வைத்திருந்தால், அவசரத் தேவைகளுக்கு உதவுவதுடன், சுய தொழில் செய்து முன்னேறுவதற்கும் வழி உண்டாகும்.
மு.விஜயகுமார், சென்னை.

நண்பரின் யுக்தி!

அண்மையில், நண்பர் ஒருவர் ஊருக்கு வெளியே புதிதாக அமைந்த லே - அவுட்டில் வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்தார். கிரகப் பிரவேசத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தவிர, அந்த பகுதியைச் சேர்ந்த அஞ்சல் அ<லுவலகத்தில் பணியாற்றும் தபால்காரர், கேஸ் ஏஜென்சியின் கேஸ் டெலிவரி செய்யும் ஆட்கள் போன்றோரையும், என் நண்பர் அழைத்திருந்தார். வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும், விவரம் தெரியாமல் முழிக்கும் போது, நண்பர் அவர்களை அழைத்த காரணத்தை விளக்கினார்.
பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டி குடிபோகும்போது, நமக்கு வரும் தபால்கள், சரியான நேரத்தில் கிடைப்பது மிகவும் அரிது. அதற்கு ஒரு முக்கிய காரணம், வீட்டை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம்தான். தாமதத்தால் பாதிப்பு அடைவது என்னவோ நாம்தான். ஆகவே, அந்த சிரமத்தை போக்க, நண்பர் செய்த யுக்தி தான் அவர்களையும் கிரகப் பிரவேசத்திற்கு அழைத்தது. என்ன, நண்பரின் யுக்தி வரவேற்கத்தக்கதுதானே? நாமும் அதை பின்பற்றலாமா?
தேவதாஸ், மதுரை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
30-ஜன-201301:19:25 IST Report Abuse
GOWSALYA கல்யாண விருந்து உபசாரத்தில் மதுபானத்தை சேர்க்காமல் இருந்தால்,உபசாரம் நடக்காதா?....இப்படி அவமானப் படணுமா?????....வெளி நாடுகளில் எல்லாம் சிறுவர்பள்ளியில் கூட எல்லாவித வேலைகளையும் பழக்குகிறார்கள்,அதனால் ஏற்படும் காயங்களுக்கு ஏற்ற சிகிச்சைகள் எல்லாம் பள்ளியிலே இருக்கிறது.அதேமுறையை நம் நாட்டிலும் செய்யலாம் தானே.நம் நாட்டில் என்ன குறை?.....3/.மிக நல்ல செய்தி.
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
27-ஜன-201315:25:40 IST Report Abuse
Vaal Payyan அடப்பாவிகளா கல்யாணத்திற்கு அழைத்து ... மாப்பிள்ளை சார்பில் மதுபானம் வாங்கி கொடுத்து பின்னர் கம்பு கட்டைகளால் அடித்து விரட்டினீர்கலா... கொடும டா சாமி
Rate this:
Share this comment
Cancel
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
27-ஜன-201312:33:39 IST Report Abuse
B.Vigneshkumar fuse போடுறது எல்லோரும் விவரம் தெரியாம போட்டு தேவையான நேரத்துல fuse கட் ஆகம போய்டபோது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X