விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விண்வெளியை எடுத்த புகைப்படங்களும் நம்மை எப்போதும் வியப்பில் மூழ்கவைக்கும். நம் பூமியை விண்வெளியிலிருந்து பார்த்தால், அதன் தோற்றம் எப்படி இருக்கும்? விண்கற்கள் எந்த உருவில் இருக்கும். தொலைதூரக் கிரகங்கள் விண்வெளியிலிருந்து பார்த்தால், வேறு வகையில் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்குமா? போன்ற கேள்விகளுக் கெல்லாம் விடை தரும் வகையில் இணைய தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இணையப் பக்கத்திற்குச் சென்றால், சென்ற 2012 ஆம் ஆண்டில், விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படங்களில், நூறு சிறந்த போட்டோக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறிய விளக்கத்துடன் காட்டப்படுகின்றன. இந்த விளக்கங்கள் அனைத்தும் நாம் இவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைத் தருகின்றன. சிலவற்றிற்குக் கூடுதல் தகவல்களைத் தரும் வகையில் வேறு இணைய தளங்களுக்கான முகவரி தொடர்புகள் தரப்பட்டுள்ளன. நம் குழந்தைகளுக்குக் காட்டி விளக்கலாம். நாமும் பார்த்து வியக்கலாம். இவற்றைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டிய சரியான முகவரி http://www.space.com/18642100bestspacephotos2012.html.