பொங்கல் விழாவினை அடுத்து, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான, நோக்கியா 114, குறைந்த விலை போனாக மக்களிடையே பெயர் பெற்று வருகிறது. இதன் மிகச் சிறப்பான அம்சம் இதன் பேட்டரிதான். ஒருமுறை சார்ஜ் செய்தால், ஏறத்தாழ ஒரு மாத காலம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பேச முடிகிறது. இதில் நோக்கியா பிரவுசர் தரப்பட்டுள்ளது. சமுதாய தளங்களுக்கு அப்லோட் செய்திடும் வகையில், இந்த போனிலேயே போட்டோ எடுக்கலாம். அதற்கான கேமரா கிடைக்கிறது. இதில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இருப்பதால், இதன் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். போனின் செயல்பாட்டினை நிறுத்தாமலேயே, இரண்டு சிம்களையும் மாற்றிக் கொள்ள இயலும். அத்துடன், இதில் ஐந்து சிம் கார்டுகளுக்கான தனி செட்டிங்ஸ் அமைப்பினைத் தனித்தனியே பதிந்து வைத்துப் பயன்படுத்த முடியும்.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.2,549.