கவி குஞ்சர பாரதியின் 200வது பிறந்தநாள் விழா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2010
00:00

சென்னை: சென்னையில் கவி குஞ்சர பாரதியின் 200வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 1810ம் ஆண்டு பிறந்த கவி குஞ்சர பாரதி, அவருடைய 12வது வயதிலேயே கீர்த்தனைகளையும் பிரபந்தங்களையும் இயற்றினார். அவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கது மாலிருஞ்சோலை அழக‌ரைப் பற்றி அழகர் குறவஞ்சியாகும். இதைத் தொடர்ந்து அப்போதைய சிவகங்கை மன்னர் அவருக்கு கவி குஞ்சரம் என்ற பட்டத்தை வழங்கி, ஆஸ்தான வித்துவானாக நியமித்தார். பின்னர் அவர் ராமநாதபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் சுப்பிரமணிய பெருமானின் அவதாரத்தை விளக்கும் ஸ்கந்த புராண கீர்த்தனைகளை இயற்றினார். அவர், அடைக்கல மாலை, கயற்கண்ணி மாலை, திருவேங்கட மாலை, பேரின்ப கீர்த்தனைகள் ஆகியவற்றையும் எழுதி உள்ளார்.
கவி குஞ்சர பாரதியின் கொள்ளுப் பேரனான தேவகோட்டை என்.கோபால அய்யரின் சீடர்களான ஜெயந்தி கல்யாணசுந்தரம், ஜெயா ரவி, சுகந்தா காளமேகம், வசுந்தரா ராஜகோபால், கோடீஸ்வர அய்யர் கிருதிகளில் சிறந்து விளங்கும் விஜயலட்சுமி சுப்ரமணியம் ஆகியோருடைய கச்சேரிகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சிக்கான பாடல்களை பேராசிரியர் என்.ரங்கநாதன் தொகுத்திருந்தார்.
டாக்டர் எம்.கே.ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரங்கநாதன் தொகுத்த அழகர் குறவஞ்சி அடங்கிய குறுந்தகட்டை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் வெளியிட்டார். கவி குஞ்சர பாரதியில் உறவினரான ராஜேஸ்வரி மீனாட்சிசுந்தரத்திற்கு கவுர பிரஞச் தூதர் ராஜா கவுசல்யா தேவி பொன்னாடை போர்த்தினார்.
இசை நிகழ்ச்சிகளுக்கு பி.கோவிந்தராவ் வயலின் இசைக்க, என்.கணபதிராமன் மிருதங்கம் வாசித்தார். பி.எஸ்.புருஷோத்தம்- கஞ்சிரா; எஸ்.கணேசன்- தம்புரா.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Y. Ramakrishnan - Bangalore,இந்தியா
26-ஆக-201016:51:45 IST Report Abuse
S.Y. Ramakrishnan Thanks for enlightening with the fact that the two poets are different. The news item does not mention about the object of the programme as to clarify the difference. Thanks once again.
Rate this:
Share this comment
Cancel
sugandhakalamegham - chennai,இந்தியா
24-ஆக-201009:28:04 IST Report Abuse
sugandhakalamegham I regret the mistake . it is Azhagar kuravanji
Rate this:
Share this comment
Cancel
Ranganathan - Tours,பிரான்ஸ்
23-ஆக-201014:58:19 IST Report Abuse
Ranganathan The comments of the readers justify the event ! The main idea was to highlight Kavi Kunjarabharathi 's compositions, mainly from Azhahar kuravanji (not Kuttrala Kuravanji). There were also songs from other collections such as Perinbha kirtahangal and a collection by Pammal Vijayaranga mudliyar. One of the songs sung during the evening was by Madhura kavi Bharathiyar who was kavi Kunjara Bharathi's Guru. These songs were presented by the students of Shri N.Gopala Ayyar (one of KKB's descendants from Deavakottai) and a CD featuring songs by the great poet was also released. After this event, Mrs Vijayalakshmi subramaniam sang songs by Kotiswara Ayyar to highlight the differences in style and grammar of the two great poets. To avoid confusion betwwen KKB and Kotiswara Ayyar - please follow the mudrai Kavi Kunjaram for kavi Kinjara Bharathi and kavi Kunjara dasan for Kotiswara Ayyar. It took me 25 years of research to undertsand the poetic genius of Shri KKB!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X