கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நேரடியாக Shutdown and Restart டைல்ஸ்களை அமைத்துப் பயன்படுத்த முடியுமா? இந்த டைல்ஸ்களில் கிளிக் செய்தால், அதற்கான செயல்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தே. நீரஜா, தாம்பரம்.
பதில்:
இதற்கான ஓர் எளிய வழி, ஸ்டார்ட் மெனுவில், C:\ProgramData\Microsoft\ Windows\Start Menu\Programs என்பதில், shutdown.exe கட்டளைக்கு ஷார்ட்கட் ஏற்படுத்துவது தான். முதலில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், New Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஷார்ட்கட் எது என்பதனைக் இங்கு கொடுத்துள்ளபடி c:\windows\system32\shutdown.exe/s/t0 என அமைக்கவும். பின்னர் Next கிளிக் செய்திடவும். அடுத்து இந்த ஷார்ட்கட் வழிக்கான பெயரை Shutdown என அமைத்து Finish கிளிக் செய்திடவும். அடுத்து ஷார்ட் கட்டில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change Icon என்பதில் கிளிக் செய்திடவும். ஐகான் எதுவும் இல்லை எனச் செய்தி வந்தால், அதனை புறக்கணிக்கவும். இப்போது ஐகானுக்கான %SystemRoot%\system32\SHELL 32.dll என்ற பைல் திறக்கப்படும். இங்கு Shutdown ஐகானத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து main properties dialog boxல் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது இருக்கின்ற ஷார்ட்கட் ஐ காப்பி செய்து, அதனை Reboot என மறு பெயரிடவும். பின்னர் இதன் Properties மாற்ற வேண்டும். கட்டளை வரி C:\Windows\System32\shutdown.exe/r/t0 என இருக்கும் வகையில் மாற்றம் இருக்க வேண்டும். அதன் பின்னர், அதற்கேற்ற ஐகான் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதே போல ஹைபர்னேட், ஸ்லீப் போன்றவற்றிற்கும் தனித்தனி ஐகான்களை அமைக்கலாம். அவற்றிற்கான கட்டளை வரிகளைக் கீழே காணலாம்.
Hibernate Computer rundll32.exe powrProf.dll,SetSuspendState
Sleep Computer rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0

கேள்வி: ஆப் (App) என்பதற்கும் விட்ஜெட் (Widget) என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? விட்ஜெட் இயங்குகையில், அதிக பேட்டரி சக்தி மற்றும் ராம் மெமரியைப் பயன்படுத்துமா? சில அப்ளிகேஷன் களை நான் நீக்கிய பின்னரும் ஏன் திரும்ப திரும்ப வருகின்றன? நான் ஆண்ட்ராய்ட் சாதனங்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த கேள்வி கேட்கிறேன்.
எஸ். ஷர்மிளா, புதுச்சேரி.
பதில்:
உங்களுடைய நீண்ட கடிதம் ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்பது போன்ற மனப்பாங்கினைக் காட்டுகிறது. இது மிக அருமையான கேள்வி. இந்த சந்தேகம் பலரின் மனதில் நிச்சயம் இருக்கும். இதோ வித்தியாசத்தினைப் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, சீதேஷ்ண நிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும். உங்களுடைய கேள்வியில் அடிப்படைக்கு வருவோம். விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். இதனால், அதனை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்து நீங்கள் அது தரும் தகவலைப் பெறலாம். இந்த தகவலுக்காக, நீங்கள் ஓர் அப்ளிகேஷனத் திறக்க வேண்டியதில்லை. பல வேளைகளில், இந்த விட்ஜெட்கள், அவற்றை நீங்கள் டேப் செய்திடும் வரை, மினிமைஸ் செய்யப்பட்டே இருக்கும். மிகப் பிரபலமான விட்ஜெட் குறிப்பிட வேண்டும் என்றால், நேரம் காட்டும் கடிகாரம் மற்றும் சீதோஷ்ண நிலை காட்டும் விட்ஜெட் ஆகியவற்றைக் கூறலாம். இவற்றை டேப் செய்தால் மட்டுமே கூடுதல் தகவல்களைத் தரும்.
ஆனால், ஓர் அப்ளிகேஷன் என்பது, அதன் தகவல்களைப் பெற வேண்டும் எனில், அதனை டேப் செய்திட வேண்டியதிருக்கும். இனி, உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். விட்ஜெட்டுகள் சற்று கூடுதலான மெமரி மற்றும் பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும். ஏனென்றால், நீங்கள் போனை எடுத்த வுடனேயே, ஸ்கிரீன் உயிர் பெற்று, அதன் தகவல்கள் காட்டப்படுகின்றன. ஆனால், அப்ளிகேஷன்கள், நீங்கள் அவற்றைத் திறக்கும் போதுதான், பேட்டரி, ராம் மெமரி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இறுதியாக, நீங்கள் நீக்கிய பின்னும், ஓர் அப்ளிகேஷன் இயக்கத்திற்கு வருவதற்குக் காரணம், அவை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுதான். எனவே, இவை தாமாக இயக்கத்திற்குத் தயாராக இருக்கின்றன.

கேள்வி: நான் ஐபேட் பயன்படுத்தி வருகிறேன். இதில் யு ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட எந்த மாதிரி அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. ஏதேனும் தனி அப்ளிகேஷன் உள்ளதா?
சி. ஏ.நிவேதிதா, கோவை.
பதில்:
இணையம் முழுவதும் வீடீயோக்கள் நிறைய உள்ளன. ஆனால், உங்கள் ஐபேடில் எந்த நேரமும் இணைய இணைப்பு இல்லாததால், வீடியோவினை டவுண்லோட் செய்து பார்க்க எண்ணுகிறீர்கள். யுட்யூப் தளத்திலிருந்து, நேராக, ஐ ட்யூன்ஸ் செல்லாமல், அவற்றின் வீடியோக்களை ஐபேடில் தரவிறக்கம் செய்திடலாம்.
இதற்கு ஆப்பிள் ஸ்டோரில் (App Store) அப்ளிகேஷன் ஒன்று கிடைக்கிறது. ஐபேடில், ஆப்பிள் ஸ்டோர் செல்லவும். அதன் தேடல் கட்டத்தில் Video Downloader Super Lite என டைப் செய்து தேடவும். இங்கு கட்டணம் செலுத்தி மற்றும் இலவசமாகப் பெறக் கூடிய அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இலவச அப்ளிகேஷனை டவுண்லோட் செய்திடவும்.
இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதன் ஐகானத் தேடி இயக்கவும். இளஞ்சிகப்பு நிறத்தில், கீழாகப்பார்க்கும் அம்புக்குறி கொண்ட ஐகானாக இது இருக்கும். இயக்கியவுடன், மாறா நிலையில் இது யுட்யூப் தளம் செல்லும். இங்கு நீங்கள் விரும்பும் வீடியோவினைத் தேடிப் பெறவும். நீங்கள் விரும்பிய வீடியோ கிடைத்தவுடன், இதனை டேப் செய்திடவும். வீடியோ மெமரிக்கு இழுக்கப்பட்டு இயக்கப்படும். உடன் ஒரு பாப் அப் பாக்ஸ், ‘Save to memory’ என்ற சிகப்பு பட்டனுடன் கிடைக்கும். இதனை டேப் செய்தால், வீடியோ டவுண்லோட் ஆகும். இந்த வீடியோவினை, நீங்கள் ஐபேட் வீடியோ அப்ளிகேஷன் மூலமாகப் பார்க்க முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலமாகத்தான் பார்க்க முடியும்.

கேள்வி: என் நண்பன் எனக்கு அனுப்பிய எக்ஸெல் ஒர்க்ஷீட் மிக நீளமாக உள்ளது. அதனைப் பிரிண்ட் செய்கையில், அடுத்தடுத்த பக்கங்களில், முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு அச்சாகவில்லை. தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்தின் மேலாகவும் தெரிய என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?
சி.ஸ்வாமிநாதன், காரைக்கால்.
பதில்:
இது மிகவும் எளிதுதான். இதற்குக் கட்டளை அல்லது பார்முலா தேவையில்லை.
1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின் Print Titles என்ற விண்டோவில் Rows To Repeat At Top text box என்று இருப்பதில் இறுதியாகக் காணப்படும் பாக்ஸினைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் சிறிய நீளமான செவ்வக வடிவ பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த வரிசையில் உள்ளதை டைட்டில் ஆக அனைத்து பக்கங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டும். பின் பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் உள்ள லேபிள் பெயர்கள் அனைத்து பக்கங்களிலும் அச்சாகும்.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் எக்ஸ்புளோரரை இதில் இயக்குகையில், கார்ட் ரீடர் போன்ற காலியாக உள்ள ட்ரைவ்கள் காட்டப்படுவதில்லை. எங்கு பிரச்னை என யாருக்கும் தெரியவில்லை. விண்டோஸ் 7 இப்படிப்பட்ட ட்ரைவ்களைக் காட்டாதா?
கே.சுந்தரம் பிரான்சிஸ், காரைக்கால்.
பதில்:
உண்மை தான். இந்தப் பிரச்னையைப் பலர் எங்களுக்கு எழுதி உள்ளனர். மாறா நிலையில், விண்டோஸ் 7, காலியாகவுள்ள ட்ரைவ்களைத் தன் விண்டோஸ் எக்ஸ் புளோரரில் காட்டுவதில்லை. இதற்கான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை. மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும். உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும். இதன் முன்னால் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின்னர், Apply மற்றும் OK பட்டன் களைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், எனக்கு ரூபாய் மதிப்பின் முன் கீண். எனக் கிடைக்க வேண்டும். இதற்கு எந்த விண்டோவில் சென்று செட் செய்திட வேண்டும்?
என்.சிவதாஸ், சென்னை.
பதில்:
முதலில் இதனை அமைக்க வேண்டிய ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X