செம்டம்பர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2010
00:00

தமிழகம்செப்., 8: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தனது தமிழக சுற்றுப்பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கினார்.


செப்., 10: வதந்தியால் விபரீதம்: செப்.10ல், வடகிழக்கு டில்லி கஜூரி காஸ் பகுதியிலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், தரையில் இருந்த மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியர் அலறி அடித்து கொண்டு ஓடியதில், நெரிசலில் சிக்கி ஐந்து மாணவியர் பலியாயினர். இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பெற்றோரும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


செப்., 13: இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற பெங்களூருவை சேர்ந்த சிறுமி அபிராமி, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
செப்., 15: சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
செப்., 17: ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை ராணுவம் சிறை பிடித்து சென்றது.

செப்., 22: பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்த பிரச்னையில் கோவை பிரிக்கால் துணைத்தலைவர் ராய் ஜார்ஜ் என்பவரை தொழிலாளர்கள் தாக்கியதில் அவர் மரணமடைந்தார்.
செப்., 24: திருவண்ணாமலை பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி.
செப்., 25: சென்னையில் இரட்டைக்கொலை: சென்னை அசோக் நகர் போஸ்டல் குடியிருப்பில் விஜயா என்பவர் வசித்து வந்தார். இவரும், இவரது மகன் சூரஜ்ஜும் செப். 25ல் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.அதைத்தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செப்.29 : விஜயகாந்த் உண்ணாவிரதம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து டில்லியில் செப்.29ல், தே.மு.தி.க, சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
செப்., 30: திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல்.
* தமிழகத்தில் டைனோசர் சேலம் பெரியார் பல்கலை., நடத்திய ஆய்வில், அரியலூரில் டைனோசரின் முட்டைபடிவங்கள், எலும்புக்கூடுகள் செப்., 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டன.


இந்தியா


செப்., 2: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சொத்து விவரங்களை கேட்கலாம் என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு.
* அதிர்ச்சி மரணம்: செப்.2ல், ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு சென்று கொண்டிருந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் ரெட்டி உட்பட அவருடன் பயணம் செய்த ஐந்து பேரும் பலியாயினர்.


* ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத் அரசு விதித்த தடையை அம்மாநில ஐகோர்ட் நீக்கியது.
செப்., 7: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 2011ம் ஆண்டுமுதல் பத்தாம் வகுப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.
செப்., 8: சிறையில் இருந்த சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தின் நிசாம் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதி.


* ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் வேலை நிறுத்தம்.
செப்., 11: லக்னோவில் கன்ஷிராம் நினைவுச்சின்னம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
* பஞ்சாபின் அட்டாரியில் பாகிஸ்தான் வீசிய மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்ததால் பரபரப்பு.


செப்., 14: உ.பி.,யின் ராம்பூரில் வெள்ளப்பகுதியை பார்வையிட சென்ற போது சமாஜ்வாடி எம்.பி.,யான நடிகை ஜெயப்பிரதாவின் மாட்டுவண்டி வெள்ளத்தில் சிக்கியது. அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.


செப்., 15: குஜராத் முதல்வர் மோடி அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவராக நியமனம்.


* பஞ்சாபில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பயணம் செய்த ரயில் மீது லூதியானா அருகே கல்வீசி தாக்குதல்.


செப்., 20: லோக்சபா மற்றும் சட்டசபைதேர்தல்களில் போட்டியிட்டு செலவு கணக்கு காட்டாத 3,275 பேருக்கு தேர்தலில் போட்டியிட மூன்றாண்டு தடைவிதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு


செப்., 23: ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஆறு குறு செயற்கைக்கோள்களுடன் ஓசியன்சாட்-2 ஏவுகணை விண்ணில் பறந்தது.


செப்., 24: சந்திரனில் தண்ணீர் இருப்பது குறித்து சந்திரயான் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு.


செப்., 26: ஏர் இந்தியா பைலட்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்தனர்.
* காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.


செப்., 29: ஒட்டோவோ குட்ரோச்சியை பிடிக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு.


செப்., 30: சர்வதேச அணுசக்தி கழக இயக்குனர் முகமது எல் பரேடிக்கு இந்திரா அமைதி விருது.'


உலகம்


செப்., 1: அமெரிக்காவில் வசித்து வரும் பேஷன் டிசைனர் ஆனந்த் ஜானுக்கு கற்பழிப்பு வழக்கில் 59 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
செப்., 13: அமெரிக்கா வழங்கிய நிதியுதவியை முறைகேடாக, ராணுவத்தை பலப்படுத்த செலவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் ஒப்புதல்.
செப்., 24: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அணு ஆயுத பரவலை தடை செய்ய இயற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு.


செப்., 26: ஜூரிச் படவிழாவில் கலந்துகொள்ள வந்த ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி 32 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது.


* அமெரிக்காவின் சமோவா தீவில் ஏற்பட்ட சுனாமியில் 190 பேர் பலி.


விளையாட்டு


செப்., 7: இரண்டாவது இந்தியர்: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, கத்தார் வீரர் மைக் ரசலை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்று அசத்தினார். இதன் மூலம் 139 ஆண்டு கால வரலாற்றில் இந்த தொடரில் பட்டம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்பு இந்தியாவின் கீத் சேத்தி மட்டும் ஐந்து முறைபட்டம் வென்று இருந்தார்.


செப். 8: கார்ப்பரேட் டிராபி கிரிக்கெட் தொடரில் யுவராஜ் தலைமையிலான ஏர் இந்தியா அணி கோப்பை வென்றது. ரூ. 1 கோடி பரிசு பெற்றது


செப். 9: பெங்களூரு விமான நிலையத்தில் கேமராமேனை முகத்தில் தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், சர்ச்சைக்கு உள்ளானார்.


செப். 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி இரண்டாவது இடம் பெற்றது.

செப். 11: இலங்கை முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, முதன் முறையாக ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றியது. இப்பெருமை 24 மணி நேரம் மட்டுமே நீடித்தது.
செப். 12: முதல் பதக்கம்: இத்தாலியின் மிலன் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் சிங்(75 கி.கி., மிடில் வெயிட்), உஸ்பெகிஸ்தானின் அப்பாஸ் அடோவிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் வெண்கலம் வென்று சாதித்தார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த வீரர் என்ற பெருமை பெற்றார்.


* இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முன்னாள் தலைவர் ராஜ்சிங் துங்கார்புர்(73) மரணம்.


செப்., 13: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரட்டையர் பைனலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் லூயி ஜோடி.


செப். 14 : முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன். இதன் மூலம் இலங்கை மண்ணில் இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில் 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வென்றது.


* யு.எஸ்., ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் சாம்பியன். செப். 15: யு.எஸ்., ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் சாம்பியன்.
செப். 23: டென்மார்க்கில் நடந்த உலக மல்யுத்த சாம்பயின்ஷிப் தொடரில் இந்திய வீரர் ரமேஷ் குமார் வெண்கலம் வென்றார்.


செப். 29: சர்வதேச குத்துச் சண்டை ரேங்கிங் பட்டியலில் இந்தியாவின் விஜேந்தர் சிங் (75 கி.கி.,) "நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X