நேரமில்லையா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

வேதங்கள், பகவானால் படைக்கப்பட்டது என்பர். எல்லா தர்ம சாஸ்திரங்களும், வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. தர்மாத்மிகமான காரியம் எதைச் செய்தாலும் இந்த தர்மம், வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்பர். "ஆம்' என்றால், அதைச் செய்யலாம்; "இல்லை' என்றால், அதைச் செய்யக் கூடாது. ஏன் செய்யக் கூடாது என்று கேள்வி கேட்ப தில்லை.
அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருக்கும் போது, தர்மபுத்திரருக்கு தர்மங்களைச் சொன்னார். இந்த தர்மங்கள் எல்லாம் வேதத் தில் சொல்லப்பட்டவை என்பதால் மகாபாரதத்துக்கு, ஐந்தாம் வேதம் என்றே பெயர் வைத்தனர். இதில் சொல்லப்பட்ட தர்மங்களை
யெல்லாம் இந்தக் காலத்தில் அனுசரிப்பது சுலபமல்ல.
அந்த காலத்து மக்களின் வாழ்க்கை முறை வேறு; இந்த காலத்து வாழ்க்கை முறை வேறு. அந்த காலத்தில் ஸ்நானம், சந்தியோபாசனம், ஜெபதபம், வழிபாடு என்றெல் லாம் நிதானமாகவும், நியமத் தோடும் செய்து வந்தனர். இந்த காலம் அப்படியல்ல. மனதை அடக்கி, ஒரு மணி நேரமாவது ஜபம், தியானம் செய்ய முடிவதில்லை.
நூத்தியெட்டு காயத்ரி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு நேரமில்லையே என்றால், குறைந்தது, 33 செய்தால் போதும். அதற்கும் நேரமில்லாவிட்டால், 15 செய்தால் போதும் என்று சலுகையளித்தனர். அதற்கும் நேரமில்லையே என்றால் என்ன செய்வது?
புராணங்களைப் படித்து, "அடடா... பகவானுடைய லீலா விநோதங்கள் எப்படியெல்லாம் இருக்கிறது...' என்று நினைத்துகூடப் பார்ப் பதில்லையே! ரயிலிலோ, பஸ்சிலோ போகும் போது ஸ்தோத்திரம், புராணம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கே சிலர் வெட்கப்படுவதுண்டு. ஏதாவது ஒரு நாவல், அதுவும் ஆங்கில நாவலாக இருந்து விட்டால், இவர்களின் அந்தஸ்தே உயர்ந்து விட்ட மாதிரி ஒரு எண்ணம்.
அமெரிக்காவிலுள்ள நீர்வீழ்ச்சியையும், அரேபியாவிலுள்ள பாலைவனங் களைப் பற்றியும் பெருமையாகப் பேசுவர். நம் நாட்டிலும், நம் ஊர்களிலும் உள்ள ÷க்ஷத்திரங்களையும், ஆலயங் களையும் பற்றிப் பேசுவதே இல்லை. இவர்கள் அவற்றை பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். சிலர், அந்த வழியாக போயிருந்தாலும் கூட, அவற்றை பற்றித் தெரிந்து கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
ஒரு இடத்துக்குப் போனால், அங்கே உள்ள பிரமாண்டமான கட்டடத்தையும், சிலைகளையும் சுற்றி பார்ப்பர். நல்ல சாப்பாடு எந்த ஓட்டலில் கிடைக்கும் என்று விசாரிப்பர். இங்கே முக்கியமான கோவில் உள்ளதா, என்ன கோவில், எப்போது சுவாமி தரிசனம் செய்யலாம் என்று விசாரிப்பது அபூர்வம். அதற்குள் நேரமாகி விடுகிறது; ஊருக்குக் கிளம்பி விடுவர். நல்ல காரியங்களுக்கு நேரமிருப்பதில்லை; உல்லாசப் பொழுதுபோக்குக்கு நேரமிருக்கிறது; என்ன ஆச்சரியம்!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


* ஒரு மனிதன் நல்லவனா, தீயவனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினாலே, பெரும்பாலும் அவன் நடத்தையும், அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டுவிடும். பேசாமல் கழுத்தறுப்பவர்களைத்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
***

- வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
13-பிப்-201317:11:14 IST Report Abuse
mrsethuraman  அவனருளால் அவன் தாழ் பணிந்து" என்று சொல்லுவார்கள். இறைவன் அருள் இருந்தால் தான் ஒருவனுக்கு பக்தி ஏற்படும்.அது இன்று மிக மிக அரிதாகவே இருக்கிறது. பக்தி என்ற பெயரில் இன்றைக்கு இருபதெல்லாம் வெறும் பொழுது போக்கு அம்சங்களே
Rate this:
Share this comment
Cancel
Kavi - Udumalpet,இந்தியா
13-பிப்-201313:15:00 IST Report Abuse
Kavi கோவிலுக்கு போறதே கேவலம்னு நினைக்கற இல்லையா தலைமுறை.. பணம் பணம் என்று போகும் முந்தய தலைமுறை.. IT and Beauty nu போகற பெண்கள் இதில் எங்கு கடவுள்.. கோவிலுக்கு போனால் சாமிய பருக.. கடவுள் இருகரோ இல்லையோ சிற்பம் கலை இருக்கும்.. உங்க மனம் நிம்மதியா இருக்கும்.. உங்க குழந்தைக்கும் சொல்லிகொடுக ..
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
10-பிப்-201304:28:49 IST Report Abuse
.Dr.A.Joseph அக்கறைக்கு இக்கரை பச்சை.பணத்தை நோக்கி ஓடும்போது.......................பக்தியாவது,பந்தமாவது. நிறைந்த அன்புடன்.....................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X