அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் பெண். என் அக்கா வீட்டுக்காரரின் தம்பியை விரும்புகிறேன். நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவனை விரும்பினேன். ஆனால், அவனிடம் கூறவில்லை.
அவன், ஒருத்தியை விரும்பினான். ஆனால், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் கல்யாணம் நடந்து விட்டது. பிறகு, அவன் பாலிடெக்னிக் படிக்கும் போது, அங்கு ஒரு பெண்ணை விரும்பினான். அதுவும் எனக்கு தெரிந்து, நான் வருந்தினேன். ஆனால், அவனை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால், என்னிடம் மிகவும் நல்லபடியாக பழகுவான்; அனைத்தையும் என்னிடம் கூறுவான்.
என்னிடம், "எவளையும் நான் விரும்பவில்லை; என் நண்பர்கள் பொய் சொல்வர்...' என்று கூறுவான். ஒருநாள் நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, "ஐ லவ் யூ' என்று சொல்ல, அதையே அவன் மனதில் வைத்துக் கொண்டு, என்னிடம் யாரும் இல்லாத சமயம் பேச முயன்றான்.
ஒரு நாள் என்னிடம், "ஐ லவ் யூ' என்றான். பிறகு, "என்னை லவ்வராக நினைத்தாலும் ஓ.கே., அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.,' என்றான். என் அக்காவிற்கு இதில் ரொம்ப இஷ்டம். ஒரு வாரம் கழித்து சம்மதித்தேன்.
ஆனால், நான் சம்மதம் சொல்லுகிற வரைக்கும், அவனிடம் இருந்த ஒரு ஆர்வம் அதன் பிறகு இல்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அழுது கொண்டே இருந்தேன். என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
பிறகு தானாகவே வலிய வந்தான்; பேசினான். அடுத்து நான் கேட்பதற்கு முன்னே, அவன் இரண்டு வாரம் என்னிடம் பேசாமல் இருந்ததற்கு, பல காரணங்கள் உண்டு என்று கூறி, "அதை சொல்ல மாட்டேன்' என்று கூறினான். நானும் விட்டு விட்டேன்.
அவன் உண்மையாக என்னை விரும்புகிறானா, இல்லையா என்று தெரிவதற்காக ஒரு ராங்கால் செய்து, "உன் னுடைய மனைவி பேசுகிறேன்...' என்று (வாய்சை மாற்றி) கூறினேன். அதற்கு அவனும் ரொம்ப டென்ஷனாகி, என்னிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள முயன்றான். ஆனால், முடியவில்லை. எனக்கு ஒரே குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது. அவன் உண்மையில் என்னை விரும்புகிறானா, இல்லையா?
தங்கள் பதிலை எதிர்பார்க்கும்
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. கல்லூரியில் முதலாண்டு படிக்கும் நீ, 9ம் வகுப்பு படிக்கும் போதே, உன் அக்காவின் மைத்துனனை காதலித்ததாக எழுதியிருக்கிறாய்...
அவனோ, ஏற்கனவே ஓரிரண்டு பெண்களிடம், "ஐ லவ் யூ' என்று வழிந்து விட்டு, அவர்கள் எல்லாம் காலா காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானதும், உன் பக்கம் திரும்பியிருக்கிறான்.
அவன் இப்படி மலருக்கு மலர் தாவும் வண்டாக இருந்தாலும், "பரவாயில்லை... என்னையும் தான் முகர்ந்து பாரேன்' என்று கூறுகிற அளவுக்கு முட்டாள்தனமாக அவனைக் காதலிக்கிறாய்.
உனக்கு மானம் காக்கும் மேலாடையில் இருக்க வேண்டிய காதல், அவனைப் பொறுத்த வரையில் மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாகவே இருந்திருக்கிறது என்று நான் சொன்னால் வருத்தப்படக் கூடாது!
நீயே எழுதியிருப்பதுபோல — எதுவுமே கையில் கிடைக்கிற வரையில்தான் ஏக்கமும், தவிப்பும்... கிடைத்த பின், "ப்பூ... இவ்வளவு தானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும்தான்!
மேலும், "நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே., லவ்வராக நினைத்தாலும் ஓ.கே.,' என்று, அவன் கூறியதாக எழுதியிருக்கிறாய். எத்தனை அபத்தமாக இருக்கிறது.
தன் தங்கை தெருவில் நடந்து போகும் போது, ஒரு அண்ணனின் பார்வை - அவளுக்குப் பாதுகாப்பாகத் தான் தொடருமே அல்லாது அவளது உடம்பை மேயாது... அது காதலனின் சபலப்பட்ட மனசின் அடையாளம்.
ஒரு அண்ணன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டுமென தெரியுமா?
தங்கையின் படிப்பில் அக்கறையுடையவனாக இருக்க வேண்டும்.
ஆறு வயசு அண்ணன், தன் நாலு வயசு தங்கையின் சுட்டு விரலைப் பிடித்து நடப்பான். அது ஒரு விதமானப் பொறுப்புணர்ச்சி. நாம்தான் நம் தங்கைக்கு எல்லாம் என்கிற நினைப்பு.
காதலன், படிப்பை, "கட்' அடித்து விட்டு, சினிமாவுக்கு வருகிறாயா என்பான். கடற்கரையிலும், பிரவுசிங் சென்ட்டரிலும் சமோசாவும், கோக்கும் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசி, "ஓ.கே., டார்லிங்... நாளைக்கு இதே இடத்துக்கு, இதே நேரத்துக்கு வந்து விடு' என்பான். அப்படி வர முடியாமல் போனால், முறுக்கிக் கொண்டு போவான். இல்லாவிட்டால் இன்னொருத்தியுடன் இழையோ இழை என்று இழைந்து, காதலியை வெறுப்பேற்றுவான்.
அதனால், இப்படி எதற்கும் ஓ.கே., என்கிறவன் ஒன்றுக்கும் பிரயோசனப்பட மாட்டான் என்பதை புரிந்து கொள். உன் அக்காவிற்கு என்ன... தன் தங்கையே தனக்கு ஓரகத்தியாய் வந்து விட்டால் பிரச்னை இல்லையே என்கிற கோணத்தில் பார்ப்பாள். அவளுக்கு ஓரகத்தியாக வேண்டுமென்பதற்காக, ஒரு ஸ்திர புத்தி இல்லாதவனை மணந்து, காலம் முழுக்கத் திண்டாடாதே!
தொலைபேசியில் குரலை மாற்றிப் பேசுவது, சினேகிதிகளிடம், "எனக்கும் ஒரு லவ்வர் இருக்கானாக்கும்...' என்று மார் தட்டிக் கொள்வது, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.
நம் எல்லாருக்குமே இரண்டு மனம் இருக்கிறது கண்ணம்மா... ஒன்று வெளிமனம்; இன்னொன்று ஆழ்மனம்.
வெளிமனம் பல விதமாய் நம் கருத்தையும், கவனத்தையும் திசை திருப்பி, "இது ரொம்ப நல்லாயிருக்கு... இது இல்லையின்னா நான் உயிரோட இருக்க மாட்டேன்' — இப்படி எல்லாம் நினைக்க வைக்கும்; சொல்ல வைக்கும்.
ஆனால், ஆழ் மனம், நமக்கு எது நல்லதோ... அதை மட்டுமே சொல்லும்... "வேண்டாம். இவன் சரிப்பட்டு வர மாட்டான். ஒழுங்காய் படி...' இப்படி இது சொல்வதெல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத - விழுங்க முடியாதக் கசப்பாகத்தான் இருக்கும்.
நீ பயப்படுவதாக எழுதியிருக்கிறாயே... அது, இந்த மனதின் குரலைக் கேட்டுத்தான். கொஞ்சம் காது கொடுத்துக் கேள். அப்புறம் உனக்கு யாருமே ஆலோசனை கூற வேண்டாம். உனக்கு எது நல்லதோ அந்த பாதையில் நீயே நடப்பாய்!
இப்போது நீ படிக்கிற பருவத்தில் இருக்கிறாய்... ஒழுங்காய் அதை கவனி!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanamahadevi Gouthaman - Bangalore ,இந்தியா
15-பிப்-201310:30:01 IST Report Abuse
Kalyanamahadevi Gouthaman மீனவன் சூப்பர் கருத்துகள்.
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201313:59:38 IST Report Abuse
praven.dr@gmail.com Okay, it can be very easy to say those three words "I love you", but if he says it when you are not expecting it, or if he says it first, he wants to tell you that he really cares about you. If he only says I love you when he wants to be physically intimate with you, or if you always say it first, and he only says it in reply, because that is what you expect, he may not really care deeply. He may not even need to say the words, because he knows you know how he feels about you, but just has to say it anyway. If your boyfri asks about your past, your dreams, your desires (not just sexual), your wants, your needs, how you feel inspired, what you love, or anything about you that relates to your thoughts intimately as an individual, you can be very sure that he wants what is best for you. This is a very good indication he loves you.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201309:32:18 IST Report Abuse
Ganapathy Kannan "நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவனை விரும்பினேன். நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, "ஐ லவ் யூ' என்று சொல்ல, அதையே அவன் மனதில் வைத்துக் கொண்டு, என்னிடம் யாரும் இல்லாத சமயம் பேச முயன்றான். ஒரு நாள் என்னிடம், "ஐ லவ் யூ' என்றான். பிறகு, "என்னை லவ்வராக நினைத்தாலும் ஓ.கே., அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.,' என்றான்."நம் பெண்குழந்தைகள் எந்த வழியில் செல்கிறார்கள். எதாவது அவர்கள் சிந்தனையில் நல்லது எது, கெட்டது எது என்று தோன்றுகிறதா என்ற சந்தேகம் இதைப் படிக்கும்போது ஏற்படுகிறது. பெண்களுக்கு இயல்பாகவே, தன்னை நெருங்கும் ஆணின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கும் சூட்சும புத்தி உண்டு. அப்படி இருந்தும், இதைப் போன்று குழப்பமடையும் நிலைக்கும் செல்கிறார்கள். நம் இளைஞர்களின் மனங்களை, கல்வியைத் தவிர மற்ற உபயோகமில்லாத, போலி மயக்க நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய எண்ணங்களை வளர்ப்பதில், நமது திரைப்படங்களும், ஊடகங்களும், விளம்பரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு வகையில் இன்றைய இளைஞர்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. இந்தவயதில் கல்வியில் முன்னேறி நல்ல நிலையை அடைதல் என்ற அவர்கள் நோக்கத்தை நெருங்க விடாமல், அவர்கள் மனதைக் குழப்பி, பல்வேறு திசைகளிலும் இழுத்துச் சிதறடிக்க, எத்தனை எத்தனை காரணங்கள் அவர்கள் முன்னே உள்ளன. திரைப்படம் அதில் மிக முக்கிய இடத்தில் உள்ளது. நிழலை, நிஜமாக நம்பி, தம் நிஜ வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் எத்தனையோ பேர். ஒரு காலத்தில், சினிமாக் காதலர்கள், தடித்தடியாக சிவாஜி கணேசன்களாகவும், ஜெமினிக் கணேசன்களாகவும், சரோஜாதேவிகளாகவும், தேவிகாக்களாகவும் இருப்பார்கள். அந்தக்காதலை, பள்ளிக்கூடத்திற்கு அழைத்துவந்து, பள்ளிசெல்லும் பிஞ்சுப் பிள்ளைகளை, காதலர்களாக்கி, முட்டாள்களாக்கி, காதல் மடையைத் திசை திருப்பி விட்டவர்கள் இந்த்த் திரைப்பட இயக்குநர்கள். புரியாத வயதில், தெரியாததை நம்பி, அதன்வழியே செல்ல ஆரம்பிக்கிறார்கள் இந்தக்குழந்தைகள். முடிவு, மொத்தக்குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சீர்கேடு. இதுபோன்ற குழப்ப நிலையில் உள்ள ஆண்களையும், பெண்களையும் ஒரு சமுதாயம் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தால், தெளிவு எங்கிருந்து கிடைக்கும். விலங்குகளின் கையில் எளிதாகச் சிக்கும் இரையாக, இங்கு பெண்கள் மாறினால், எப்படி இவர்கள் துணிவாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது. பெற்றோர்கள் தங்கள் ஆண் பெண் குழந்தைகளை பயமுறுத்தி வளர்க்காமல், அவரவர்கள் என்னவெல்லாம் பிரச்சினைகளை, மற்ற ஆண் மற்றும் பெண்களால் சந்திக்க நேரிடும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். ஆண்குழந்தைகளுக்கு, பிற பெண்களை மதிக்கும் பழக்கத்தையும், இளமையிலிருந்தே பழகிக் கொடுக்க வேண்டும். தன் குடும்பத்தில், பெண்பிள்ளைகளை மதித்து வளரும் ஆண், சமுதாயத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, பிற பெண்களை மதிப்பதுடன், அவர்களுடன் நேர்மையான முறையில் பழகுவான். இரை தேடும புலியின் குணம் அவனிடத்தில் பெருமளவு குறைந்திருக்கும். -அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_taboola.asp, line 340