ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

மொழி, இனம், கலாசாரம், உணவு, போன்ற விஷயங்களில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், பிரிந்து கிடந்தாலும், ஒரு சில நடைமுறைகள், பழக்க வழக்கங்களில், சில நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்.
நம் நாட்டில், முன்னோரை வணங்கி, அவர்களின் ஆசியை பெறும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் அல்லது அவர்கள் இறந்த நாட்களில், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து, படையலிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதேபோல், ஒவ்வொரு மனிதரும், இறப்புக்கு பின், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு தகுந்தாற்போல், சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்வர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதே நடைமுறையும், நம்பிக்கையும், சீனாவிலும் பின்பற்றப்படுகிறது என்பது தான், ஆச்சரியமான விஷயம்.
ஆனால் இதையே, அவர்கள் சற்று வித்தியாசமான முறையில் பின்பற்றுகின்றனர். இறப்புக்கு பின், ஒவ்வொரு மனிதரின் ஆவியும், பாதாள <உலகத்துக்கு செல்கிறது. பூமியில் வாழும்போது, பாவம் செய்தவர்களுக்கு, பாதாள உலகில், மரணக் கடவுள் (நம்ம ஊர் எமன் போன்றவர்) தண்டனை வழங்குகிறார்.
இந்த தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால், மரண கடவுளுக்கு, பணமும், பொருளும் கொடுக்க வேண்டும். பாதாள உலகத்தில் ஏது, பணமும், பொருளும்? இதனால், இறந்தவர்களின் உறவினர்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், தீயை மூட்டி, அதற்குள் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசி எறிகின்றனர்.
இப்படி, தீக்குள் வீசி எறியப்படும் ரூபாய் நோட்டுகளும், பொருட்களும், பாதாள உலகத்தில் உள்ள, ஆவிகளுக்கு போய் சேரும் என்றும், ஆவிகள், அந்த பணத்தை, மரணக் கடவுளுக்கு கொடுத்து, தண்டனையிலிருந்து தப்பிக்கும் என்றும், சீன மக்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, "வாங்கிய கடனை அடைக்க முடியாமல், இறந்தவர்களுக்கு, பாதாள உலகத்தில், கட்டாயம் தண்டனை உண்டு. இந்த கடனை அடைப்பதற்காகவே, இறந்தவர்களுக்காக, தீக்குள், ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசுகிறோம்...' என்கின்றனர்.
சீனாவின் பல பகுதிகளிலும், இந்த விசித்திர நடைமுறை பின்பற்றப்படுகிறது. துவக்கத்தில், உண்மையான ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும், தீக்குள் வீசி எறிந்த சீன மக்கள், இப்போது, ரூபாய் நோட்டு போல அச்சிடப்பட்ட காகிதங்களையும், போலியாக செய்யப்பட்ட பொருட்களையும் வீசி எறியத் துவங்கியுள்ளனர்.
"இறந்த முன்னோரின் ஆவிகளை, சாந்தப்படுத்தி, சந்தோஷமாக வைத்திருந்தால் தான், நாம் சந்தோஷமாக வாழ முடியும். இதனால் தான், கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்...' என்கின்றனர், சீன மக்கள்.
***

எஸ். நேஹாஸ்ரீ

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201303:56:46 IST Report Abuse
vinoth Super
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
14-பிப்-201302:01:12 IST Report Abuse
Jegan நாலாவது மாடி கெடுதலானது என்று மூன்றாவது மாடிக்கு பின் 5 என்றோ 3 a என்றோ எழுதி விடுவார்கள். லிப்டிலும் அப்படியே. மழையில் நனையவும் வெயிலில் செல்லவும் பயப்படுவார்கள். அதனால் தொப்பி, ரெயின்கோட் எல்லாம் கைப்பையிலேயே வைத்திருப்பார்கள். ஒரு ரூபாய்க்கு கூட மெல்லிய ரெயின்கோட் கிடைக்கும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது முன்னே உள்ள HEAD LIGHT -ஐயும் சேர்த்து ரைன்கொட்டால் மூடி விடுவார்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருவர் செல்ல எதுவாக இரண்டு தலை வைத்த ரெயின்கோட் பயன்படுத்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
14-பிப்-201301:54:06 IST Report Abuse
Jegan பணம் மட்டுமல்ல, உடைகள், குதிரை, மற்றும் பல உபயோக பொருட்களையும் தீயில் போடுகிறார்கள். அதற்காகவே காகிதக்கூளில் செயப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. எவற்றை எரிக்க வசதியாக தகர டப்பாக்களும் விற்கப்படுகின்றன. டூப்ளிகேட் பணத்திற்காக அமரிக்க டாலர் போன்று அச்சிடப்பட்ட காகிதங்கள் கிடைக்கின்றன. இவை எல்லாம் நம் ஊர் யாகத்தில் பட்டுத்துணி, உணவு பொருட்கள், நாணயம் போடப்படும் வழக்கத்திலிருந்து புத்த மதம் மூலமாக அவர்கள் கற்றுக்கொண்ட விஷயம். சீனா மட்டுமின்றி சீன கலாசாரத்தை பின் பற்றும் எல்லா நாட்டினரும் இதை செய்கின்றனர். மேலும் அமாவாசை பௌர்ணமி (சிலர் அஷ்டமி ) தினங்களில் தம் முன்னோருக்காக விரதம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். அவர்களுக்கு 7 ராசி இல்லாத எண். 8 ராசியான எண். புத்தாண்டு லீவு முடிந்து எட்டாம் நாள் அலுவலகம் RE - செய்யாமல் ஒரு நாள் சேர்த்து அல்லது குறைத்து லீவு விடுவார்கள். 8 ராசியான எண் என்பதால், சீனாவில் ஒலிம்பிக் நடந்த பொது 8-8-2008 ந்தேதி 8 மணி 8 நிமிடம் 8 வினாடிக்கு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X