வெற்றிலை போட்டால் வாய் வெந்து விடுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

* வேல்குமார் மதுரை: "அல்சர்' என்றால் என்ன?
சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண், "அல்சர்' எனப்படுகிறது. குறித்த நேரத்தில் உணவு அருந்தாதது, புகை மற்றும் குடி பழக்கம், மருத்துவரின் ஆலோசனை இன்றி, தலைவலி, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றால் அல்சர் வருகிறது.
"எச்-பைலோரி' கிருமி தொற்றாலும், அல்சர் ஏற்படுவதாக, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

*பட்டுக்கனி, பொள்ளாச்சி: எப்போதாவது வெற்றிலை, பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்களில் சிலருக்கு, வெற்றிலை போட்ட சில நிமிடங்களிலேயே வாய் வெந்துபோக என்ன காரணம்?
வெற்றிலையில் சேர்க்கப்படும் சுண்ணாம்பு மற்றும் பாக்கில் உள்ள வேதிப் பொருட்கள் தான் இதற்கு காரணம். இதை கவனிக்காமல், தொடர்ந்து வெற்றிலை போட்டு வந்தால், உதடு சவ்வுகள் இறுகி, வாயை எளிதாக திறக்க முடியாத நிலை ஏற்படும். நாளடைவில், உணவுக் குழாய், இரைப்பையில் புற்றுநோய் உண்டாகும் அபாயமும் உள்ளது.

* கங்காதரன், சென்னை: இரைப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி உள்ளதா?
பல்வேறு காரணங்களால் ஏற்படும், இரைப்பை புற்றுநோயில், 10 முதல் 20 சதவீதம் வரை, "எச்-பைலோரி' என்ற பாக்டீரியா தொற்றால் உண்டாகிறது. இதற்கான தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில், பாக்டீரியா தொற்று, ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

* சுப்பிரமணியன், விழுப்புரம்: அஜீரணம் பெரும் பிரச்னையாக உள்ளதே?
அளவிற்கு அதிகமாக உண்பது, உணவுடன், எண்ணெயில் பொரித்த மற்றும் மசாலா கலந்த உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, அடிக்கடி ஓட்டலில் உண்பது போன்றவற்றால், அஜீரணம் ஏற்படுகிறது. 40 வயதை கடந்தவர்கள், இப்பிரச்னைக்கு அதிகம் ஆளாவதற்கு, போதிய உடற்பயிற்சி செய்யாதது தான் காரணம்.

* ஈஸ்வரன், திருநெல்வேலி: தொப்பையை கரைக்க, "வாக்கிங், ஜாகிங்' ஆகியவற்றில், எது "பெஸ்ட்?'
தொப்பையை கரைப்பதற்கு, "ஜாகிங்' தான் சிறந்த வழி. ஆனால், அனைவராலும், "ஜாகிங்' செய்ய முடியாது என்பதால், விரைவான, "வாக்கிங்' மூலமும் தொப்பையை குறைக்கலாம்.
பேராசிரியர் கண்ணன்,
குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறை
சென்னை மருத்துவக் கல்லூரி
98410 16958

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X