"ஆஸ்துமா பாதிப்புடன் பல்சிகிச்சை செய்யலாமா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

எனக்கு பல ஆண்டுகளாக ஆஸ்துமா உள்ளது. சிலவகை உணவு மற்றும் மருந்துகளுக்கு அலர்ஜியும் உள்ளது. எனக்கு கடந்த சில வாரங்களாக பல்வலி இருக்கிறது. நான் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நம் நாட்டில் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. மற்ற எந்த நோயையும் போல, இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தாராளமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிகிச்சை செய்யும்போது, சில பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தினமும் ஆஸ்துமா மாத்திரையை சாப்பிடுபவரானால், பல் சிகிச்சை நாளன்று காலையில் மறக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும். மதிய நேரங்களில் தங்கள் சிகிச்சை நேரம் அமைவது நல்லது.
பல் சிகிச்சை செய்து கொள்ள பயம் உள்ளவர்கள், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தால், ஆஸ்துமா, இருமல், இளைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது இடைவெளி விட்டு, வலி இல்லாமல் குறைந்த நேரத்தில் சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும். நீண்ட நேரம் படுத்தவாக்கில் வைத்து சிகிச்சை செய்யக் கூடாது. இதையும் தாண்டி இருமல் அல்லது இளைப்பு ஏற்பட்டால் உடனடியாக கொடுப்பதற்கு மருந்துகள் கைவசம் வேண்டும். இது போன்ற வழிமுறைகளை நீங்களும், மருத்துவரும் பின்பற்றினால் பயமின்றி சிகிச்சை செய்து கொள்ளலாம்.

எனக்கு முன்பற்கள் கோணலாக உள்ளது. பல்வரிசையும் சீராக இல்லை. இதற்கு கம்பிபோட்டு சரிசெய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறார். பற்களில் கம்பி போடும்போது, பார்ப்பதற்கு வாயில் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருப்பது, எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு வேறு வழி ஏதாவது உள்ளதா?
பற்களில் கம்பி போடும்போது உலோகம் தெரிவதை பலர் விரும்புவதில்லை. குறிப்பாக வேலை நிமித்தமாக பலரை சந்தித்து பேசுபவர்களுக்கு இந்த தோற்றம் சில நேரங்களில் சங்கடம் அளிக்கும். இன்றைய நவீன சிகிச்சை முறையில் இதற்கு தீர்வுகள் கண்டிப்பாக உண்டு. கம்பி போடுவதற்காக பற்களில் பொருத்தப்படும் பிராக்கெட் என்பவை உலோகத்தால் ஆனது. இப்போது அவை செராமிக்கிலும் கிடைக்கிறது.
இவற்றை பற்களில் பொருத்தும்போது, பற்களுக்கும் இவற்றிற்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும். இதனால் உலோகம் தெரிவது போன்ற தோற்றம் இருக்காது. இதற்கு மற்றொரு தீர்வு இந்த உலோகத்தால் ஆன பிராக்கெட்டுகளை பற்களின் உட்புறம் பொருத்தலாம். இதற்கு "லிங்குவல் ஆர்த்தோடான்டிக்ஸ்' என்று பெயர். இந்த முறையிலும் வெளிப்பார்வைக்கு உலோகம் தெரியாமல் இருக்கும். சிகிச்சை காலத்திலும் சுத்தம் செய்யும் முறையிலும் வித்தியாசம் எதுவும் கிடையாது. உங்களுக்கு தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்து அழகான பல்வரிசையை பெறலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X