எல்லைக் காவல் படையில் பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

இந்தியாவில் 1960களின் பாதி வரை நாட்டின் எல்லைப் பகுதிகளை அந்தந்த மாநிலத்தின் காவல் படையே செய்து வந்தது. ஆனால் 1965ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போதுதான் இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு பிரத்யேகமான சிறப்புப் பயிற்சிகள் பெற்ற படை ஒன்று தேவை என்பது உணரப்பட்டது. இதன் விளைவாக எல்லைக் காவல் படை என்ற பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் நிறுவப்பட்டது. துவங்கிய நாள் முதல் இன்று வரை இந்தப் படை சிறப்புடன் பணியாற்றி வருகிறது. இந்தப் படையில் உள்ள 430 தலைமைக்காவலர் (ரேடியோ ஆபரேட்டர்) பணி இடங்களை எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான சிறப்புப் பணி நியமனமாக செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






பி.எஸ்.எப்.,பின் ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.02.2013 அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் உச்ச பட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., டிப்ளமோவை ரேடியோ அண்டு டி.வி., அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேறு என்ன தேவை:






எல்லைக் காவல் படையின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவை. விண்ணப்பதாரரின் உயரம் ஆண்களாக இருந்தால் குறைந்த பட்சம் 168 செ.மி.,யும், பெண்களாக இருந்தால் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டரை உரிய மைத்திற்கேற்றபடி எடுத்து அனுப்ப வேண்டும். நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வதையும், உரிய இணைப்புகளை சேர்த்து அனுப்புவதையும் உறுதி செய்யவும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :






28.02.2013

இணையதள முகவரி :






http://bsf.nic.in/doc/recruitment/r25.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X