ஓரியண்டல் பாங்கில் ஆபிசர் பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1943ல் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் துவங்கப்பட்டது. பின்னர் இது வங்கி தேசியமயமாக்கலின் போது அரசுடமை வங்கியாக்கப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு பல்வேறு கிளைகள் இருப்பதுடன் ஒரு
முன்னோடி பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி., என்ற பெயரால் இந்த வங்கி அனைவராலும் அழைக்கப்படுகிறது.
இந்த வங்கியில் எச்.ஆர்.டி., அதிகாரிகள் 13, இந்தி அதிகாரி 12, லா ஆபிசர் 19 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸின் எச்.ஆர்.டி., மற்றும் இந்தி அதிகாரி/ராஜ்பாஷா அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எச்.ஆர்.டி., அதிகாரிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பையும், இதன் பின்னர் நிர்வாகவியல்/இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், எச்.ஆர்.டி., சோசியல் ஒர்க், லேபர் லா ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
எம்.பி.ஏ., படிப்பை எச்.ஆர்.டி., சிறப்புப் படிப்பாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியில் ஆங்கிலப் பாடம் உள்ளிட்ட முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது சமஸ்கிருதத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட முது நிலைப் பட்டப் படிப்புடன் பட்டப் படிப்பு வரை இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளுடன் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்திய சிறப்பு அதிகாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவி வாரியாக மொத்த மதிப்பெண்கள் மாறுபடுகின்றன என்பதால் இணையதளத்திலிருந்து அதனை அறியவும்.

இதர விபரங்கள்:






ஓ.பி.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை கோர் வங்கி முறையிலோ அல்லது நெப்ட் முறையிலோ செலுத்த முடியும். ஓ.பி.சி.,யின் இதர பிரிவுகளுக்கு ரூ.400/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவிகள் குறித்த விபரங்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் பதிய இறுதி நாள் :






26.02.2013

இணையதள முகவரி:





www.obcindia.co.in/obcnew/upload/recuritmentResult/Recruitment_specialist_officers_2012_13.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X