இன்ஜினியரிங் பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

பசுமை போர்த்திய நிலப் பகுதிகள், அபரிமிதமான 'பேக்-வாட்டர்' எனப்படும் கடல் நீர் உள் திரும்பிய நீர் நிலைகள், படகுக் குழாம்கள், உல்லாச படகு வீடுகள் என்று நமக்கு அருகிலுள்ள கேரள மா நிலம் இந்தியாவின் பெருமை மிக்க பகுதியாக திகழ்கிறது. இயற்கையின் வரப்பிரசாதமாக பல்வேறு சிறப்புகள் இந்த மா நிலத்திற்கு உள்ளது. கடவுளின் சொந்த தேசம் (God's own country) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கேரள மா நிலத்தில் சுற்றுலாவிற்கு பஞ்சம் ஏதும் இல்லை. இதனால் தான் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. கேரள மா நில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கழகத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளைப் பயிற்சியாளர்களாகப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:

கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில், எலக்ட்ரிகல் அல்லது மெக்கானிகல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்ப முடித்திருக்க வேண்டும்.

மற்றவை:

கே.டி.டி.சி.,யின் மேற்கண்ட பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் கேரள மா நிலத்தின் எந்தப் பகுதியிலும் மற்றும் சென்னையிலும் பணி புரியத் தயாராக இருக்க வேண்டும். முதல் வருடத்தில் ரூ.10 ஆயிரம், இரண்டாம் வருடத்தில் ரூ.11 ஆயிரம் மற்றும் மூன்றாம் வருடத்தில் ரூ.12 ஆயிரத்து 500 என்று ஸ்டைபண்டுடன் பணி புரிய வேண்டியிருக்கும். இந்த நிபந்தனைகளுக்கு உடன்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தங்கள் ரெஸ்யூமையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு 15.02.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:

Kerala Tourism Development Corporation Ltd.,
Corporate Office, P.B.No.5424,
Mascot Square,
Thiruvananthapuram - 695 033
Kerala

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :

15.02.2013

இணையதள முகவரி :

www.ktdc.com/documents/KTDC&wanted&ad.pdf

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X