கடலோரக் காவல் படை பணி வாய்ப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

இந்திய நாட்டின் நீர் தொடர்புடைய தேசிய கொள்கையை சிறப்புற செயல்படுத்த இதற்கான சிறப்புப் படை ஒன்று தேவை என்பது 1977ல் உணரப்பட்டது. இதன் விளைவாகத்தான் இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இப்படை நிறுவப்பட்டது முதல் இன்று வரை மிகவும் சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்திரிக் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவைகள்:






இந்தியக் கடலோரக் காவல் படையின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.1991க்குப் பின்னரும் 31.07.1995க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பைப் படித்து முடித்துவிட்டு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உயரம் குறைந்த பட்சம் 157 செ,மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவளவு குறைந்த பட்சம் 5 செ.மி., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்து வரிடம் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இந்த நிலைக்கு முன்னர் பற்கள் மற்றும் காதுகளை உரிய விதத்தில் சுத்தம் செய்துவிட்டே செல்ல வேண்டும்.

இதர தகவல்கள்:






இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற வெவ்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் எதிர்கொள்ளலாம். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தியக் கடலோரக் காவல் படையின் யாந்திரிக் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :






14.02.2013

இணையதள முகவரி:






http://indiancoastguard.nic.in/Indiancoastguard/Jobs/VTK_02_2012/yantrik%202002%202013.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X