தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

1921ல் தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் நிறுவப்பட்ட 'நாடார் வங்கி'தான் பின் நாட்களில் தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி என்று பெயர் பெற்றது. தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியான தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி நம் அனைவராலும் டி.எம்.பி., என்று அறியப்படுகிறது. பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் துறையைச் சார்ந்த முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை வங்கிகளுக்கு சவாலான சேவைகளைத் தருவதில் இந்த வங்கி புகழ் பெறுகிறது.
சிறந்த தனியார் துறை வங்கிக்கான விருதையும் இந்த வங்கி பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பாகும். நாடு முழுவதும் கிளைகள், நவீனமய சேவைகள், மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கியில் உதவி மேலாளர் பதவியில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள் என்னென்ன:

டி.எம்.பி.,யின் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.12.2012 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். காமர்ஸ், நிர்வாகவியல், கணிதம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.

மற்ற விபரங்கள்:

தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கியின் அஸிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை Tamilnad Mercantile Bank Ltd., என்ற பெயரில் தூத்துக்குடி அல்லது திரு நெல்வேலியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இந்தப் பதவிக்கான தேர்ச்சி முறை இருக்கும் என்று தெரிகிறது.
விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து விண்ணப்பித்த 5 நாட்களுக்கு உள்ளும், அதிகபட்சம் 25.02.2013க்கு உள்ளும் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.

முகவரி:

The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.,
357 V.E. Road,
Thoothukudi - 628002

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :

20.02.2013

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :

25.02.2013

இணையதள முகவரி:

http://career.tmb.in/jobinfo.htm?job_num&AM1301

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X