* ஆர்.வெங்கடேஷ், வாடிப்பட்டி: நான் ஒரு ஆசிரியன். கொஞ்சம் கலகலப்பான, நகைச்சுவையுள்ள, அலுவலக காரியங்கள் தெரிந்த, கதை, கவிதை, நாடகம் என, பல துறைகளில் கொஞ்சம் அதிகம் தெரிந்துள்ள காரணத்தால், பல பெண்களுடன் பழக, பேச வாய்ப்பு உள்ளது. ஆனால், என் இல்லாள், என் பழக்கம் மற்றும் அணுகுமுறைகளை தவறான கண்ணோட்டத்துடனே பார்ப்பதால், இல்லத்தில் எப்போதும் மன நிம்மதியின்றி ஓயாத சச்சரவு. இதில், என் குறை அதிகமா அல்லது என் மனைவியின் எண்ணம் தவறானதா? உம் குறை தான் அதிகம். வெளியில் கலகலப்பை ஏற்படுத்துபவர், அதேபோல வீட்டிலும் கலகலப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது! உமக்கு தெரிந்தவற்றை பயன்படுத்தி, உம் இல்லாளை, "எஜுகேட்' செய்ய முடியாதா? ***
* சா.ஹரிஹரசுதன், சிவகாசி : நம்மை விட கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் யாரை பார்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்? இருவரையுமே! மேல் தட்டு, கீழ் மட்டம் இரண்டிலுமுள்ள நல்ல குணங்களை, மனிதாபிமானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், போதும்! ***
*என்.நடராஜன், தூத்துக்குடி : நான் ஒரு ஓட்டுனர். கஷ்டப்பட்டு உழைக்கிறேன். எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி இருந்தும், பத்து ரூபாய் கூட மிஞ்சவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்... தொழிலை மாற்றுங்கள்... சொந்தமாக வண்டி வாங்கி ஓட்ட, வங்கியை நாடுங்கள்! ***
*ஏ.விஜயலெட்சுமி, பழனி: நம் கலாசாரத்தில், வெகுவாக ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே மேம்போக்கான நிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் அடிப்படையில், "நட்பென' அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆண் - பெண் மனங்கள், காதல் என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது? காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேய்ஞ்சது மாதிரி என்று சொல்வர் - கேட்டிருக்கிறீர்களா? அதே நிலையில், நம் சமுதாய அமைப்பு உள்ளது. ஆண்களை கண்டால் ஒளியும் நிலை இப்போது நகரங்களில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக, நமது சமுதாயம் மாறி வருகிறது. காலப் போக்கில் இந்த சமுதாய மறுமலர்ச்சி, கலாசாரத்தை மாற்றும். அப்போது நட்பை, காதலென நினைக்கும் எண்ணங்கள் மறைந்து விடும்! ***
** கே.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்: முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கின்றனரே... இது, எந்த அளவுக்கு உண்மை? எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த அமெரிக்கரான ஆம்ஸ்ட்ராங், சிகை அலங்கார கலைஞருக்கு மகனாக பிறந்து, உலகம் புகழும், "லண்டன் டைம்ஸ்' பத்திரிகைக்கு அதிபரான தாம்சன், தினக் கூலியாக இருந்து, பல கோடிகளுக்கு அதிபரான அம்பானி இவர்களெல்லாம், முயற்சி செய்யாமலா முன்னுக்கு வந்தனர்! ***
*எம்.யாஸ்மின், கருங்கல்பாளையம்: என்னதான் அடங்கிப் போனாலும், என் கணவர், என்னை அடித்து துன்புறுத்துகிறார்... நான் என்ன செய்வது? சம்பாதிக்கிறோம் என்ற திமிர், பெண்களை விட, நமக்கு உடல் வலிமை உள்ளது என்ற ஆணவம் தானே பெரும்பாலான ஆடவரின் இச்செயலுக்கு காரணமாகிறது... சொந்தக் காலில் நிற்க, தேவையான வருமானம் ஈட்ட தொழில் கற்றுக் கொள்ளுங்கள்... சம்பாதிக்க தொடங்குங்கள். அதன்பின், உங்கள் கணவரின் செயலில் முற்றிலும் வித்தியாசத்தைக் காண முடியும்! ***
** சி.பவானி, சென்னை: அரசு பணியிலுள்ள வரனை எதிர்பார்த்து கிடைக்காமல், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவரை மணந்து கொண்டேன். எதிர்பார்த்தது கிடைக்காமல் போய் விட்டது. மனதை எப்படி திருப்திப்படுத்திக் கொள்வது? மனித ஆசைகளுக்கு அளவேது? அரசு பணியிலுள்ள மாப்பிள்ளையே கிடைத்திருந்தால், "அவர் ஆபீசராக இல்லையே... செக்ஷன் ஹெட்டாக இல்லையே... தாசில்தாராக இல்லையே...' என நினைப்பீர்கள். நடந்ததை மறந்து விடுங்கள்; நிகழ்காலம் தான் வாழ்க்கை... அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முயலுங்கள்! ***
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
யாஸ்மின், ஒரு பிரச்சினையின் போது வாக்குவாதம் முற்றிக் கைகலப்பு நேருவது போல் ஆகும் சூழலில் ஒருவர் விட்டுக் கொடுக்கலாம், ஆறப் போடலாம், இரு கை ஓசை சத்தம் தரும், ஒரு கை ஓசை சத்தம் தராது. சில வீடுகளில் பெண் தன் இயலாமையை அழுது புலம்பிக் காட்டுகிறார், ஆண் பெண்ணின் வாயை அடக்க அடித்து வாயை மூடுகிறார். சில இடங்களில் மனைவி கோபத்தைத் தூண்டுமாறு நடந்து பிரச்சினைகள் எல்லை மீறவே கணவர் கை ஓங்குகிறார், எந்தச் சூழலிலும் ஒருவரை ஒருவர் அடிப்பது நியாயமாகாது. விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. மெளனப்போராட்டம் சில நேரங்களில் கை கொடுக்கும். வாழ்க்கை எத்தனை முறை விட்டுக் கொடுத்தோம் என்பதில் இல்லை. அனுசரிப்பதில் தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
அருமையான பதில், ஆண் வர்க்கமே நான் சொல்வதற்குப் போர்க்கொடி தூக்க வேண்டாம். அவசியம் இல்லாமல் மனைவியை அடிக்கும் படுத்தும் ஆண்களுக்கான பதிலடி தான் இது. யாஸ்மின், அவசியமில்லாமல் அடிக்கிறார் என்றால் நீங்கள் கராத்தே வகுப்பில் சேர்ந்து விடுங்கள். வீட்டில் பயிற்சி செய்வது போல முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அடிப்பது போல் செய்து பாருங்கள். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது குத்து அதுவும் கணவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, உங்கள் ஆவேசம், கோபம், வெறி எல்லாம் மாவில் காட்டி மாவு மென்மையாகி சப்பாத்தி புஸு புஸுவென்று வர வேண்டும். இல்லையா, ஆரோக்கியமான உணவு, நீராகாரம் உண்டு விட்டு திடமாக, தெளிவாக அடுத்து அடிக்க வரும் போது ஒத்த அடி. ஏஏ என்று கத்திக் கொண்டே(அடிக்க வரும் முன்பே கத்தி விட வேண்டும், இல்லையென்றால் சுதாரிக்கும் வாய்ப்பு அதிகம்)அடுத்து உங்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு முன் புரூஸ்லீ, ஜாக்கிசான் படங்களைப் பார்ப்பது உதவியா இருக்கும். ஒரு அறைக்குள் கதவைச் சாற்றி விட்டு, அடிப்பீங்களா(மருவாதையோட, புர்சர் அல்லவா) அடிப்பீங்களா என்று கேட்டு அடிங்க. அடுத்து சமைச்சாச்சா? என்று கூட வாய் திறக்க மாட்டார். நாய் கதை தான், துரத்த துரத்த ஓட ஓட, திரும்பிப் பாருங்கள் அது ஓடும், அப்படித் தான். ஒரு முறை அடித்துப் பாருங்கள், இனி அடிக்க பயம் வரும், மனைவி கணவரை அடித்து ஆற்றாமையைத் தீர்க்கலாம்.உடலளவில் பலசாலியான கணவன் தன்னிலும் பலம் குறைந்த மனைவியை அடிப்பது மன்னிக்க முடியாத குற்றம், இது என் நண்பர் சொன்ன கருத்து. அதனால் ஆண் வர்க்கம் குறை கூறப் படையெடுத்தால் அவரையே சாரும்.சம்பாதிப்பது, சுய கெளரவத்துடன் இருப்பது, தன்மானம், சுயத்தை விட்டுக் கொடுக்காமை இவையெல்லாம் முக்கியம். மனைவியை அடிக்கும் கணவர்மாரே உடலளவில் வலு குறைந்ததாக கருதப்படும் மனைவிமார்கள் உள்ளத்தில் பலசாலிகள், பொறுமைசாலிகள், அவர்களின் அன்பைப் பலவீனமாக்கி அடித்தால் பதிலுக்கு அடித்தால் உங்கள் நிலை என்னவாகும் என்று யோசியுங்கள். ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாமல் அன்பில் அடித்துக் கொள்ளலாமே, பேசித் தீர்த்துக் கொள்ளலாமே. மனிதாபிமானத்துடன் சக மனுஷியாகப் பார்க்க வேண்டும். அடிப்பதால் ஹீரோ ஆக முடியாது, ஜீரோவாகவே செய்வீர்கள்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.