அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

அன்புள்ள சகோதரிக்கு —
நான் 33 வயது பெண். 17 வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவும் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாய் பாசம் வைத்து இருப்பதாலும், இவ்வளவு நாள் என் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர்.
எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கிறார்.
என் கணவருக்கு, நான் வெளியில் நின்றாலோ, மற்ற ஆண்களிடம் பேசினாலோ பொறுக்காது. அவரும் நன்றாகத் தான் இருப்பார்.
இப்போது அவர் வயது, 38 ஆகிறது. நானும் கட்டுப்பாடு மிகுந்த சூழ்நிலையில் வளர்ந்ததால், அவரின் சந்தேக குணத்தை புரிந்து," அட்ஜஸ்' செய்து கொண்டேன்; பொறுமையாக இருந்தேன்.
என் மூத்த பையன் என் அருகில் உட்கார்ந்தாலோ, என் மடியில் படுத்துக் கொண்டாலோ, என் கணவர் முகம் மாறி, "பெரிய பையன் ஆகிவிட்டான்... கொஞ்சம் தள்ளியே இரு...' என்கிறார். இது போல் நடந்து கொள்வதால், அவர் மீது எனக்கு மிகவும் வெறுப்பு வருகிறது.
நான் என்ன மேடம் செய்வேன். எல்லாவற்றையும் புரிய வைத்து அவரை திருத்திய எனக்கு, இதை எப்படி புரிய வைப்பேன். பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை ஒதுக்க முடியுமா? மற்றபடி என் பையனிடம் அவர் மிகவும் பிரியமாக இருக்கிறார். இவ்வளவு பெரிய பையனையும் தூக்கி கொஞ்சுவார். எனக்கு தாங்கள் தான் நல்ல பதில் தர வேண்டும்!
இப்படிக்கு,
— அன்பு சகோதரி.


அன்பு சகோதரி —
உன் கடிதம் கண்டேன். அன்பு மகனைக் கொஞ்சினால் - கணவனுக்குப் பொறாமை... உன் எழுத்துகளில் உன் வருத்தம் தெரிகிறது.
உனக்கு வெகு சீக்கிரமே கல்யாணமாகி விட்டதாக எழுதியிருக்கிறாய்... 16 வயதில் பிள்ளை இருந்தாலும் - கணவன், மனைவி இருவருமே, இன்னும் நடு வயதில் தான் இருக்கிறீர்கள்...
ஒரு குழந்தைக்குத் தந்தையாகி விட்டாலும் - ஏன் - சிறுவயதிலேயே குடும்ப பாரத்தைத் தன் தோளில் சுமந்தாலும், உன் கணவரே இன்னமும் குழந்தைதான் என்பதைப் புரிந்துகொள் சகோதரி.
சாதாரணமாகவே, குழந்தை பிறந்தவுடன், ஒரு பெண், தன் கணவனை விடவும், தான் பெற்ற குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறாள். ஆதலால், இந்த பிரச்னை, குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல் குழந்தை இருக்கும்போது, இரண்டாவதைக் கொஞ்சினால், மூத்தது காரணமில்லாமல் அழும். விழுந்து புரண்டு, தன் எதிர்ப்பைக் காண்பிக்கும். அருகில் யாருமில்லை என்றால் சின்னதைக் கிள்ளி விட்டு ஓடும்.
இந்த அளவு இல்லை என்றாலும், ஓரளவுக்கு தாலி கட்டினப் புருஷனிடம் இந்த, "சவலைக் குழந்தை'த்தனத்தைப் பார்க்கலாம். இதுபோன்ற சமயங்களில் நீ, உன் கணவனையும் ஒரு குழந்தை போல அருகில் இழுத்து மடியில் போட்டுக் கொள்ளலாம். திடீரென இப்படியொரு வழக்கத்தை ஆரம்பிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
நம் நாட்டில் - கணவன், மனைவி, குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து விளையாடுவதோ, ஒருவரையொருவர் அன்புடன் அணைப்பதோ, செல்லமாய் கன்னத்தில், நெற்றியில் முத்தமிடுவதோ, தட்டிக் கொடுப்பதோ கிடையாது.
குழந்தைகள் முன் - அப்பா, அம்மா சிரித்துப் பேசுவதோ, தொடுவதோ கிடையாது. கோபம் வந்தால், குழந்தைகளுக்கு எதிரில் புருஷனும், மனைவியும் சண்டை போட்டு, அடித்து உதைத்துக் கொள்கிறோமே தவிர, அன்பையும், பாசத்தையும், என்னவோ தப்பு காரியம் செய்வது போல, ஒளித்து ஒளித்து வைத்துப் பரிமாறிக் கொள்கிறோம்; இந்த நிலை மாற வேண்டும்.
அம்மாவுக்கு மகனிடம் பாசம் அதிகமாக இருப்பதும், அப்பாவுக்கு மகளிடம் அன்பு அபரிமிதமாக இருப்பதும், வெகு இயல்பானது. பெரும்பாலும் இப்படி எதிரெதிர் பாலில்தான் ஈர்ப்பும், பிரியமும் இருக்கும்; இது தவறும் இல்லை.
ஆனால், உன் கணவன் என்கிற குழந்தையை, மூலையில் நிற்க வைத்து, உன் பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சாதே. முதலில் கணவனை கலகலப்பாக்கு! தனிமை கிடைக்கும்போது அவரிடம் எடுத்துச் சொல்:
இன்னும் எத்தனை நாளைக்கு நம் பிள்ளை, இப்படி குழந்தையாக இருக்கப் போகிறான்... கல்லூரிப் படிப்பு, புது சினேகம் எல்லாம் வந்து விட்டால் - வீட்டுப் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டான். எனக்கு மட்டுமா அவன் குழந்தை... உங்களுக்கும் தானே... இப்போது அவனை விரட்டினால், விரட்டுகிறவர் பேரில்தான் வெறுப்பு வரும்... அதனால், அவனிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ள முயற்சியுங்கள். வளர்ந்து விட்டானே தவிர, மனசளவில் அவனும், உங்களைப்போல ஒரு குழந்தை தான். இதுபோன்ற மென்மையான வார்த்தைகளும், அன்பான அரவணைப்பும் கண்டிப்பாய் பலனளிக்கும் சகோதரி.
என் வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
18-பிப்-201316:04:59 IST Report Abuse
Skv இது ரொம்பவே காமன். பல வீட்லேயும் இருக்கு , எங்கம்மா வீட்லே எல்லாம் யாருமே திட்டி பேசவே அனுமதிக்க மாட்டாக், இந்த அனாகரீகமெல்லாம் சினிமாலேந்து வரதுதான். மூனுமணியில முடியும் சினிமாலே என்னவெல்லாமோ காட்டுராக. ஒரு பாட்டு பாடிமுடிக்கரதுக்குள்ளேயே அந்த குழ்ந்தை தொட்டில்லேந்து வளைந்து பெர்சாகி காரோட்டும் காதல் பண்ணும் பிள்ளைகுட்டியும் பெத்துக்கும் , அம்புட்டும் கற்பனை அவ்ளோதான் , ரியல்ல நாமெல்லாம் தான் பாக்குரோமே நம்ம பிள்ளைங்க வளந்து ஆளாவதற்கு 20 + வருஷம் ஆவுதே. நமக்கு திருமணம் பொது 20 + வயசு. நம்ம பிள்ளைக 20+ ஆவும்போது நாம் 40+ ஆயிற்றோமே, அஞ்சு வயது வரை ஆசையா கொஞ்சலாம். பிறகு ட்ரீட் தெம் லைக் க்ரோனப் , பிள்ளைங்களே விரும்பாதுங்க
Rate this:
Cancel
VIVEK - sivakasi,இந்தியா
18-பிப்-201312:25:30 IST Report Abuse
VIVEK நல்லா அழகா சொன்னிங்க சகுந்தலா மேடம்
Rate this:
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
18-பிப்-201308:37:29 IST Report Abuse
LOTUS பாசத்தையும் பந்தத்தையும் வோவொரு சூழ்நிலை வாய்க்கும் போதும் பெண்ணுக்கு சொல்லிகொடுக்கும் அதே தாய் தான் மகனுக்கும் சூழ்நிலையை சொல்லி தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசானே தாய் தான்.. பிறகு தான் தந்தையிடம் இருந்து மற்றவற்றை குழந்தை புரிந்து கொள்ளும். அயல் நாட்டில் 3 to 5 வயதிலேயே தனிமை போதிக்க படுகிறது. இங்கு பெண்ணுக்கு 18 ஆணுக்கு 20 வயது வரை துணை தேவை என போதிக்கபடுகிறது. இது இங்குள்ள கலாச்சாரம். பிரச்சனையை சொல்லி அதற்கு பதிலையும் சொல்லவைத்து பக்குவ படுத்தினால் எங்கும் ஏன்டா எல்லையிலும் விரிசல் விழாது. ஒருஒரு மில்லிமீட்டர் அளவிலும் பக்குவம் தேவை ஒரு தாய்க்கு. புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்து பெண்ணே . உன் வீட்டின் மறக்க முடியாத ஒரு அம்சமாக இருப்பாய் கால காலத்திற்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X