பிராட்பேண்ட் பேண்ட்வித் மற்றும் லேடன்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

படிப்படியாக இணையத்துடன் வாழத் தொடங்கிவிட்டோம். வாழ்க்கை முறையை இணையம் கொஞ்சம் கொஞ்ச மாக மாற்றி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் புழக்கத்தில் இருக்கும் சொற்களில் சிலவற்றை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. ஏனென்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு தொழில் நுட்ப சொற்களைக் கூறி விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை நாம் தெளிவாக அறியும் வகையில் தரும் பழக்கம் இவர்களிடம் இல்லை. இந்த தொழில் நுட்ப சொற்கள், ஓர் இணைய இணைப்பு சேவையில் மிக மிக முக்கியமானவை. இணைய சேவை நிறுவனம் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கையில் இவற்றை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

1. பேண்ட்வித் (bandwidth):


உங்கள் கம்ப்யூட்ட ரிலிருந்து அல்லது உங்கள் கம்ப்யூட்டருக்கு அல்லது மொபைல் சாதனங்களுக்கு பரிமாறப்படும் டேட்டாவின் அளவினை இது குறிக்கிறது. இதனை விநாடிக்கு இவ்வளவு கிலோ பிட்ஸ் (kilobits– kbits) என அளக்கின்றனர். சில இணைய சேவை நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்தில் தாங்கள் அளிக்கும் இணைப்பு என்ன வேகத்தில் இருக்கும் என்பதைக் குறிக்கையில் இந்த அளவினைக் குறிப் பிடுவார்கள். சிலர் வேகத்தினை mbit எனவும் அறிவிப்பார்கள். 1mbit என்பது 1000 kbits. இது மக்களைக் குழப்பும் வேலை எனவும் சிலர் குறிப்பிடுவார்கள். ஏனென்றால், நாம் கம்ப்யூட்டரில் தகவல் பதிவதை மெகா பைட்ஸ் (megabytes(MB)) அளவில் கூறுகிறோம். சில வேளைகளில் kilobytes (KB)என்பதனையும் பயன்படுத்துகிறோம். எனவே, இதே அளவில் இணைய சேவை வேகத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், அவர்கள் தரும் அளவினை 8 ஆல் வகுத்து மெகாபைட் அல்லது கிலோ பைட் என்பதில் தெரிந்து கொள்ளலாம்.

2. பிராட்பேண்ட் (Broadband):


உங்களுடைய இணைய தொடர்பில், தகவல்கள் பரிமாறப்படுவது, இந்த குறைந்த பட்ச அளவில் தான். இந்த குறைந்த பட்ச அளவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். அமெரிக்காவில் இது 256 kbits per second, (or 0.25 megabit per second) ஆக உள்ளது. இதுவே சில நாடுகளில் 768 kbit என்று தொடங்கி 30 or 40 mbits வரை செல்கிறது.

3. அப்லோட்/டவுண்லோட் (Upload/Download):


அப்லோட் என்பது உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்கு தகவல் அனுப்பும் செயல்முறையைக் குறிக்கிறது. டவுண்லோட் என்பது இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு இறக்கப்படும் செயல்முறையைக் குறிக்கிறது. இணைய சேவை நிறுவனங்கள், தாங்கள் அதிக வேகத்தில் டவுண்லோட் சேவையினை வழங்குவதாக அறிவிப்பார்கள். இணையத்தில் பொதுவாக, தகவல்கள் டவுண்லோட் செய்வது தான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே தான், இணைய சேவை நிறுவனங்கள் இந்த அளவினை விளம்பரப் படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

4. சிம்மெட்ரிக்/அசிம்மெட்ரிக் (Symmetric/Asymmetric):


இந்த சொற்களை அவ்வளவாக பொதுமக்களுக்கு இணைய சேவை நிறுவனங்கள் அளிக்க மாட்டார்கள். அதிக அளவில் தகவல் பரிமாற்றத்தினை, அதிக பட்ச வேகத்தில் மேற்கொள்ளத் திட்டமிடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த சொற்கள் குறிப்பிடுவதனைக் கையாள்வார்கள். ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்குச் செல்லும் தகவல் வேகமும், தகவல்கள் வந்தடையும் வேகமும், ஒரே வேகத்தில் இருந்தால் அதனை Symmetric இணைய சேவை என அழைக்கின்றனர். மற்ற வாடிக்கை யாளர்களுக்கு, தகவல் பரிமாற்ற வேகம் முன்பு குறிப்பிட்டபடி ஒரே அளவில் இருக்காது. இதனை Asymmetric என அழைக்கின்றனர்.

5. லேடன்சி (latency):


இதனை இணைய சேவை நிறுவனங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், இதனைத் தெரிந்து கொள்வது நல்லது. இந்த சொல், உங்கள் கம்ப்யூட்டர், இணையத்தில் ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள சர்வர் ஒன்றைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினைக் குறிக்கிறது. இது நமக்குச் சேவை தரும் நிறுவனத்தின் கட்டமைப்பு, நாம் தொடர்பு கொள்ளும் சர்வரின் திறன், நாம் பயன்படுத்தும் இணைய தொடர்பு வகை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும்.
இதனை எப்படி அறிந்து அல்லது அளந்து கொள்வது? இது மில்லி செகண்ட்ஸ் (ms or milliseconds) என்ற அலகில் அளக்கப்படுகிறது. உங்கள் இணைப்பின் இந்த வகை திறனை அறிந்து கொள்ள, கம்ப்யூட்டரில் கமாண்ட் ப்ராம்ப்ட் திறக்கவும். இதற்கு Windows Key + R அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில் cmd.exe என டைப் செய்து என்டர் தட்டவும். கருப்பு வண்ணத்தில் டாஸ் இயக்க கட்டம் கிடைக்கும். அதில் ட்ரைவ் எழுத்துடன், அருகில் கட்டளைப் புள்ளி ஒன்று துடித்துக் கொண்டிருக்கும். இந்த இடத்தில் ping www.dinamalar.com என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ஒரு வரி காட்டப்படும். அதில் நேரம் குறிப்பிடப்பட்டு அதன் அருகே ட்ண் என இருக்கும். இத்தனை மில்லி செகண்ட் நேரத்தில், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான சர்வரை உங்கள் கம்ப்யூட்டரால் அடைய முடிகிறது என இணைய இணைப்பின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். இது 100ms வரை இருந்தால், அதனை மிகக் குறைவான திறன் எனலாம். 100>200 ms ஆக இருந்தால் அதனை சராசரியான வேகத்திறன் எனலாம். 200 ms க்கு மேலாக எனில், அது சிறப்பான வேகம் எனக் கொள்ளலாம்.
லேடன்சி எனப்படும் இந்த இணைப்பு வேகத்திறன் நமக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், சில வேளைகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக, இணைய தளத்திற்கு நாம் தகவல்களை அனுப்பியாக வேண்டும். இல்லை எனில், நம் தகவல் பரிமாற்றம் முறிந்து போய், மறுபடியும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ட்ரெய்ன் டிக்கட் போன்றவற்றை இணையம் வழி பெற முயற்சிக்கையில் வேகம் குறைவது சிக்கலை ஏற்படுத்தும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Narayanan - Chennai,இந்தியா
18-பிப்-201311:58:44 IST Report Abuse
Hari Narayanan latency //இது 100ms வரை இருந்தால், அதனை மிகக் குறைவான திறன் எனலாம். 100>200 ms ஆக இருந்தால் அதனை சராசரியான வேகத்திறன் எனலாம். 200 ms க்கு மேலாக எனில், அது சிறப்பான வேகம் எனக் கொள்ளலாம். // Please dont confuse user, It should be if < 100ms good server, if between 100 to 200 average server, if above 200ms means some problem, not good... HOPE I AM CORRECT...
Rate this:
Share this comment
Cancel
சு. கோவிந்தசாமி - Cincinnati,யூ.எஸ்.ஏ
18-பிப்-201309:54:26 IST Report Abuse
சு. கோவிந்தசாமி ஐயா இன்றைய கம்ப்யூட்டர் மலரில் பிராட்பேண்ட் பேண்ட்வித் மற்றும்/ லேடன்சி பகுதியில் “இந்த இடத்தில் ping www.dinamalar.com என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ஒரு வரி காட்டப்படும். அதில் நேரம் குறிப்பிடப்பட்டு அதன் அருகே ட்ண் என இருக்கும்”. என்று உள்ளது. அடிக்கடி இது போல் பான்ட் குழப்பம் நிகழ்கிறது. கோவிந்தஸ்வாமி
Rate this:
Share this comment
Cancel
சு. கோவிந்தசாமி - Cincinnati,யூ.எஸ்.ஏ
18-பிப்-201309:33:54 IST Report Abuse
சு. கோவிந்தசாமி ஐயா Quote இத்தனை மில்லி செகண்ட் நேரத்தில், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான சர்வரை உங்கள் கம்ப்யூட்டரால் அடைய முடிகிறது என இணைய இணைப்பின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். இது 100ms வரை இருந்தால், அதனை மிகக் குறைவான திறன் எனலாம். 100>200 ms ஆக இருந்தால் அதனை சராசரியான வேகத்திறன் எனலாம். 200 ms க்கு மேலாக எனில், அது சிறப்பான வேகம் எனக் கொள்ளலாம். unquote நேரம் அதிகமானால் வேகம் குறைவு என்பது தான் சரி. கோவிநதஸ்வாமி. மதுரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X