கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

கேள்வி: விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். முதலில் வேகமாக பூட் ஆகி நிலைக்கு வந்த சிஸ்டம், இப்போது தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனை எப்படி நிவர்த்திக்கலாம்?
எஸ். சேவுகமூர்த்தி, தேவகோட்டை.
பதில்:
ஏதோ உலா வரும் தேரை நிலைக்குக் கொண்டு வரும் வழி கேட்பது போல் எழுதி உள்ளீர்கள். உங்களைப் போலவே பல வாசகர்கள் இதனை ஒரு குறையாக எழுதி உள்ளார்கள். இதனைச் சரி செய்திட எளிய வழி, டாஸ்க் மானேஜரை திறந்து, ஸ்டார்ட் அப் டேப்பினைக் கிளிக் செய்து, அதில் உள்ள புரோகிராம்களைக் காண்பதுதான். டாஸ்க் மேனேஜர் திறக்க, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, எக்ஸ் கீயையும் சேர்த்து அழுத்த வேண்டியதுதான். பின்னர், கிடைக்கும் விண்டோவில், ஸ்டார்ட் அப் டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். அதில் காட்டப்படும் புரோகிராம்களில், உங்களுக்குத் தேவை இல்லாததின் மேல், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், disable என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இவ்வாறு, தேவையற்ற புரோகிராம்கள், விண்டோஸ் இயங்கத் தொடங்குகையில், இயங்குவதைத் தடை செய்தால், உங்கள் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க தயாராக நிற்கும்.

கேள்வி: புளு ரே டிஸ்க் என அழைக்கப்படுவது எது? வெகு நாட்களாகப் பேசப் பட்டும், அதிக புழக்கத்தில் இல்லையே ஏன்?
ஆர். பிரகாஷ், கோவை.
பதில்:
புளு ரே டிஸ்க் என்பதுவும், சிடி, டிவிடி போல டேட்டா சேமித்து பதிய வைக்கும் ஓர் ஊடகமாகும். சிடியைத் தொடர்ந்து டிவிடி அறிமுகமாகிப் பிரபலம் ஆன பின்னர், டிவிடிக்கும் மேலாக புளு ரே அறிமுகமானது. புளுரே டிஸ்க்கும் டிவிடி மற்றும் சிடி போலவே வடிவில் அதே அளவில் உள்ளது. ஆனால், புளுரே டிஸ்க்கின் ஓர் அடுக்கில், 25 ஜிபி டேட்டா பதியலாம். இதனால், புளுரே டிஸ்க் ஒன்றில், டிவிடியின் அளவைக் காட்டிலும் பத்து மடங்குக்கும் மேலாக டேட்டா பதிந்து வைத்துப் பாதுகாக்கலாம். புளுரே டிஸ்க் அறிமுகமான போது, அதன் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு குறித்து சோனி நிறுவனமும், தோஷிபா நிறுவனமும் போட்டியிட்டன. இதனால், மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த வடிவமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, டிஸ்க்குகளை வெளியிட்ட நிறுவனங்களும், அதனை நிறுத்திக் கொள்ள புளுரே டிஸ்க்குகள் மறைந்துவிட்டன.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். டெஸ்க்டாப்பில் ஐகான் ஒன்றைக் கிளிக் செய்திட முயற்சிக்கையில், ஏதோ செய்திடப் போய், இப்போது அனைத்து ஐகான்களும் ஹைலைட் செய்யப்பட்டு, அவற்றின் மீது செக் மார்க் ஒன்று காட்டப்படுகிறது. இதனை முன்பு போல மாற்ற என்ன செய்திட வேண்டும்? என் நண்பர்களுக்கும் இந்த வழி தெரியவில்லை.
சி.தேவபிரகாசம், மதுரை.
பதில்:
மாறா நிலையில் விண்டோஸ் இயக்கம், ஐகான் லேபிள்களுக்கு ட்ராப் ஷேடோஸ் எனப்படும் ஒன்றை அளிக்கிறது. இதனால் ஐகான் டெக்ஸ்ட் ஒளி ஊடுறுவும் தன்மையுடன் காட்சி அளிக்கிறது. நீங்கள் அறியாமல் செய்த இயக்கத்தினால், ஐகான்கள் அனைத்தையும் ஹை லைட் செய்திருக்கிறீர்கள். இதனால், ஐகான் டெக்ஸ்ட் சுற்றிலும் பார்டர் கட்டம் ஒன்று கிடைத்திருக்கும். சாலிட் பேக் கிரவுண்ட் கலர் என எதனை ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளீர்களோ அல்லது மாறா நிலையில் இந்த கலர் எதுவாக உள்ளதோ, அந்த வண்ணத்தில் இந்த கட்டம் அமைக்கப் பட்டிருக்கும். முன்பு இருந்த படி அமைக்க கீழே இரு வழிகளைத் தருகிறேன்.
1. மை கம்ப்யூட்டரில் (My Computer) ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து Advance டேப் செல்லவும். Performance பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Use drop shadows for icon labels என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்னொரு வழியும் தருகிறேன்.
3. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties செல்லவும்.
4. தொடர்ந்து Desktop என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Web டேப்பில் கிளிக் செய்து Lock desktop Items என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: சர்ச் இஞ்சினில் தேடுகையில், நான் தேடுவது இல்லாமல், வேறு ஏதோ கிடைக்கிறது. நாம் தேடுவது மட்டுமே கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
என். சுகப்பிரியா, பொள்ளாச்சி.
பதில்:
கம்ப்யூட்டர் மலரில், கூகுள் சர்ச் இஞ்சினில் தேடுதலை எளிமையாக்கும் பல வழிகள் தரப்பட்டு வருகின்றன. அவற்றைக் கடைப்பிடிக்கவும். நீங்கள் தேடுவதனை மட்டும் எப்படி தர முடியும்? இஞ்சின் உங்கள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாதே! நீங்கள் தான் அது புரிந்து கொள்ளும் வகையில், உங்கள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் KISS method என்று ஒரு வழியினைக் கூறுவார்கள். இதற்கு Keep It Simple & Specific என்று பொருள். அதாவது, நாம் அமைக்கும் சொற்கள் துல்லியமாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு இஇ என்ற முகவரியில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

கேள்வி: பாடல்களைப் பாடுவது எனக்கு நன்றாகக் கை வந்த கலை. ஏற்கனவே பதிவு செய்த எம்.பி.3 பாடல்களில், பாடகர் ஒலியை மட்டும் நீக்கி, நான் அதில் என் பாட்டைப்பதிய என்ன சாப்ட்வேர் இலவசமாகக் கிடைக்கிறது.
சு. இன்பநிலா, விருதுநகர்.
பதில்:
இணையத்தில் சில பாடல்கள், கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இவற்றை டவுண்லோட் செய்து, நீங்கள் உங்கள் இனிமையான குரலைப் பதிவு செய்து ரசிக்கலாம். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

கேள்வி: விண்டோஸ் தீம் என்று அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது என்று சற்று விளக்கவும்.
ஜ. நசீர் அகமது, திருச்சி.
பதில்:
தீம் என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: சோனி டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி, போட்டோக்களை எடுத்து பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றினேன். எல்லாமே டி.எஸ்.சி. எனக் கொடுத்து எண்ணுடன் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் மொத்தமாகப் பெயர் மாற்ற முடியுமா?
ஆர். ஸ்டாலின் தேவகுமார், சென்னை.
பதில்:
மாற்றலாம். எளிய வழி உள்ளது. DSC எனத் தொடங்கி எண்களுடன் போட்டோக்கள் பெயரிடப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா போட்டோக்களை மொத்தமாக மாற்ற வேண்டும் எனில், அவற்றை மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கீழ்விரி மெனு ஒன்று கிடைக்கும் இந்த மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுத்து Bday என்று கொடுக்கவும். இனி அந்த போட்டோக்கள் எல்லாம், Bday(1) Bday(2), Bday (3) என வரிசையாக அமைக்கப்படும். மீண்டும் அந்த போட்டோக்களின் அடிப்படையில், அல்லது இருக்கும் நபர்களின் அடிப்படையில் தனித் தனியே பெயர் கொடுக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் ஒன்றை எனக்கு அலுவலகத்தில் தந்துள்ளனர். அதில் யூசர் அக்கவுண்டில் ஏற்கனவே பயன்படுத்தியவர் தனக்குப் பிடித்த படத்தை வைத்துள்ளார். இதனை எனக்குப் பிடித்த படம் கொண்டு எப்படி அமைப்பது?
என். திருப்பதி, திருப்பூர்.
பதில்:
ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள். அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம். நீங்களும் அதே போல, உங்களுடைய அல்லது உங் களுக்குப் பிடித்த நண்பர், குழந்தையின் படத்தை அமைத்துக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Chinnu - Chennai,இந்தியா
18-பிப்-201310:15:08 IST Report Abuse
Santhosh Chinnu நான் விண்டோஸ் 8 os பயன்படுத்தி வருகிறேன் .. முதலில் shut down செய்யும்போது நன்றாக ஆனது அனால் இப்போது shut down செய்யும் போது திரை மட்டும் உடனே ஆப் ஆகிவிடுகிறது அனால் ப்ரோசெசொர் பேன் மற்றும் மசின் மிகவும் தாமதமாகவே ஆப் ஆகிறது ...இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்களேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X