கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
00:00

கேள்வி: என்னை அறியாமல், டெஸ்க் டாப்பில் இருந்த ரீசைக்கிள் பின் ஐகானை பைல்களை காலி செய்திடும் முயற்சியில் அழித்துவிட்டேன். இதனை எப்படி மீண்டும் செட் செய்து டெஸ்க்டாப்பில் அமைப்பது?
தி. சுகுமாரன், கோவை.
பதில்:
ரீ சைக்கிள் பின் ஐகான் இல்லை என்பது நம் பணியில் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், எளிதாக மீண்டும் அமைக் கலாம். நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எதனைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் குறிப்பிடவில்லை. நான் கீழே தரும் குறிப்புகள், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றிற்கு பொருந்தும்.
டெஸ்க்டாப் சென்று காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், PERSONALIZE என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது personalization திரை காட்டப்படும். இந்த திரை தரும் வசதிகளைப் பயன்படுத்தி, வால் பேப்பர் ஆகியவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இதன் இடது மேல்புற மூலையில் CHANGE DESKTOP ICONS என்பதனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்திடவும். இது change desktop icons என்ற திரையைத் திறக்கும். இங்கு அடிப்படை இயக்கம் தரும் டெஸ்க்டாப் ஐகான்களைக் காணலாம். ஒவ்வொரு ஐகான் அருகேயும் சிறிய செக் பாக்ஸ் இருக்கும். இங்கு RECYCLE BIN என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். உடன் டெஸ்க் டாப் ஐகான் திரையில் இருப்பதைக் காணலாம்.

கேள்வி: பைல் எக்ஸ்டன்ஷன் என்பது என்ன? இதனை மாற்றக் கூடாது எனக் கூறுகின்றனர். மாற்றினால் என்னவாகும். இந்த எக்ஸ்டன்ஷன் பைலின் எத்தகைய தன்மையைக் குறிக்கிறது?
தி. மருதமுத்து, பொள்ளாச்சி.
பதில்:
கம்ப்யூட்டர் பைல் பெயர்களுடன், பைலின் தன்மை குறித்த கூடுதல் தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்படுவதே பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் ஆகும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் போது, பைலின் தன்மை மற்றும் வடிவமைப்பு குறித்து கூறுகளைக் காட்டும். இதனை அறிந்தே, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எந்த புரோகிராமில் இந்த பைலைத் திறப்பது என்பதனை அறிந்து உடன் திறக்கும். .txt என இருந்தால் அதனை நோட்பேடிலும், doc என இருந்தால் மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலும், exe என இருந்தால் அதனை அப்ளிகேஷன் புரோகிராம் என அறிந்து அந்த வகையிலும் திறக்கும். எனவே இதனை மாற்றி அமைத்தால், அந்த பைலைத் திறக்க முடியாமல் சிஸ்டம் தடுமாறும். இதனாலேயே, இப்போது வந்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த பைல் எக்ஸ்டன்ஷன், பயனாளர்கள் அறியாமல் வைக்கப்பட்டிருக்கும்.
சில வேளைகளில் பைல் எக்ஸ்டன்ஷனை மாற்றி, சிலர் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் தற்போது வேர்ட் புரோகிராமில் .docx என்ற பார்மட்டைத் தருகிறது. அடிப்படையில் இது ஒரு .zip பைல். XML அடிப்படையிலானது. சில விஷயங்கள் இதில் பதியப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இதனை உணர்ந்த சிலர், இந்த பைலில் பதியப்பட்டிருப்பதனை, எக்ஸ்டன்ஷன் மாற்றி பெறுவார்கள். .docx பைல் எக்ஸ்டன்ஷனை .zip என மாற்றி, ஒரு பைலைத் திறக்கும் வகையில் திறந்து பயன்படுத்துவார்கள். சாதாரணமாகப் பயன்படுத்துவோர் இந்த விளையாட்டில் இறங்க வேண்டாம்.

கேள்வி: நான் தொடர்ந்து வேர்ட் புரோகிராமினை என் அலுவலகப் பணிக்காகப் பயன்படுத்துகிறேன். இதில் சில டூல் பார் பட்டன்கள் நான் விரும்பிய வகையில் அருகருகே அமைக்க விரும்புகிறேன். முடியுமா?
செ.நா. மாணிக்கம், காரைக்குடி.
பதில்:
தாராளமாக மாற்றி அமைக்கலாம். நம் வீடுகளில் பர்னிச்சர்களை இடம் மாற்றி வைப்பது போல இவற்றையும் இடம் மாற்றலாம். முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை, உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங் கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

கேள்வி: நான் இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துகிறேன். என்னுடைய கம்ப்யூட்ட ரில் அவாஸ்ட் என்னும் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இயங்குகிறது. இரண்டு மாதத்திற்கு முன், என் நண்பர் நார்டன் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் பதிந்து வேலை செய்கிறது. ஆனால், இவ்வாறு இரண்டு ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துவது சரியல்ல என்று ஒரு கட்டுரையில் படித்தேன். இப்போது என்ன செய்யலாம்?
எஸ். மஹேந்திரன், விழுப்புரம்.
பதில்
: நீங்கள் படித்தது சரியே. ஒரே நேரத்தில், இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது சரியல்ல. நீங்கள் கூடுதல் பாதுகாப்பு என எண்ணி இரண்டைப் பயன்படுத்துகிறீர்கள். இது கம்ப்யூட்டரில் உள்ள ராம் நினைவகம் மற்றும் சி.பி.யு. திறனை அதிகம் எடுத்துக் கொள்ளும். இது உங்களுக்கு இழப்பே. மேலும் இந்த புரோகிராம்களே, ஒன்றை ஒன்று வைரஸ் என தவறாகக் கணித்து பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எந்த புரோகிராம் உங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கிறதோ, அதனைப் பயன்படுத்தவும். இன்னொன்றினை இயக்காமல் வைத்திருக்கவும். ஏதேனும் ஒரு வைரஸ், இயங்கும் புரோகிராமிற்கு அகப்படாமல் போனால், அதன் இயக்கத்தினை நிறுத்தி வைத்து, பதிந்து மட்டுமே வைத்திருக்கும் புரோகிராமினை இயக்கிப் பார்க்கலாம். ஆனால், இந்த இரண்டு புரோகிராம்களும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி: இன்டர்நெட்டில் சில தளங்கள் நாம் தேடும் தகவலைக் கொண்டிருக்கின்றனவா அல்லது குறிப்பிட்ட தகவல் உள்ளதா என அறிய ஷார்ட் கட் உள்ளதா? வேர்ட் புரோகிராமில் இருப்பது போல தேடும் வசதி உள்ளதா?
டி. ஜாஸ்மின் வசந்தி, புதுச்சேரி.
பதில்:
இணைய தளத்தினைத் திறந்த பின்னர், உங்கள் பிரவுசர் மெனு பார் செல்லுங்கள். அதன் Edit மெனு தேர்ந்தெடுங் கள். அங்கு Find கிளிக் செய்திடுங்கள். அல்லது, கண்ட்ரோல் + எப் அழுத்துங்கள். சிறிய “find” பாக்ஸ் ஒன்று கிடைக்கும். இதில் Find What என்பதனை அடுத்து நீள செவ்வகக் கட்டம் ஒன்று காட்டப்படும். இதில் நீங்கள் தேடும் சொல்லினை டைப் செய்திடவும். அந்த சொல் இணையப் பக்கத்தில் இருந்தால் நீங்கள் நேராக அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
உங்களுக்கு ஒன்று கூடுதல் டிப்ஸ் தரட்டுமா? இதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரரிலும் பயன்படுத்தலாம். அங்கு நீங்கள் தேடும் பைல் உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லையா? இங்கும் கண்ட்ரோல் +எப் அழுத்தி தேடல் கட்டம் பெற்று பைலைத் தேடலாம்.

கேள்வி: நான் வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் 512 எம்.பி. ராம் நினைவகம் உள்ளது. சிஸ்டத்தில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ளவர்கள் இதில் பெரும்பாலும் கேம்ஸ் விளையாடு கின்றனர். வேர்ட் பயன்படுத்துகின்றனர். ஒரு கேம்ஸ் விளையாட மெமரி போதுமானதாக உள்ளதா என எப்படி அறிவது?
என். தாவூத், காரைக்கால்.
பதில்:
கேம்ஸ் இயங்க எவ்வளவு ராம் மெமரி தேவை என்பது எங்கும் தரப்படாது. எனவே ஓரளவிற்கு ராம் மெமரி உள்ளதா என முதலில் அறிந்து கொள்ளலாம். இதனை அறிய வழி தருகிறேன். இதற்கு கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் (Control, Alt,) பட்டன்களை அழுத்திக் கொண்டு டெலீட் (Delete) பட்டனை ஒரு முறை அழுத்தவும். இவ்வாறு அழுத்தியவுடன் கம்ப்யூட்டரில் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் (Windows Task Manager) திரை கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Performance என்ற டேபைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Physical Memory, Available என்ற பிரிவை நீங்கள் காணலாம். இதில் கிடைக்கும் எண் எத்தனை கிலோபைட் இடம் இன்னும் காலியாக உள்ளது என்று காட்டும். இதனை நீங்கள் எம்பி அளவில் பெற வேண்டுமென்றால் 1000 ஆல் வகுக்க வேண்டும். தோராய மான அளவில் எத்தனை எம்.பி. எனத் தெரிய வரும். இதனைக் கருத்தில் கொண்டு, நீங்கள் விளையாட விரும்பும் கேம்ஸைத் தொடங்கலாம்.

கேள்வி: வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொலைபேசி தொடர்பினை மேற்கொள்கை யில், அந்த நாட்டுக்கான ஐ.எஸ்.டி.டி. குறியீட்டு எண் நினைவில் இல்லை. அல்லது தெரியவில்லை. இதனைக் காட்டும் வகையில் ஏதேனும் அப்ளிகேஷன் உள்ளதா. நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.
பேரா. கி. சண்முகம், திருப்பூர்.
பதில்:
அப்ளிகேஷன் இதற்கென இல்லை. இணைய தளம் ஒன்று இந்தத் தகவல்களைத் தருகிறது. இதன் தள முகவரி http://www.simplecountrycodes.com அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப்பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uday Snow - Coimbatore,இந்தியா
28-பிப்-201311:53:39 IST Report Abuse
Uday Snow டெஸ்க்டாப் ல் இருந்து மை கம்ப்யூட்டர் ப்லோடேர்ரய் பண்ணிட. அது திரும்பவம் எப்படி எடுப்பது?
Rate this:
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
26-பிப்-201317:57:19 IST Report Abuse
Narayanan Gopalan ஒரு சில வாரங்களாக android அமைந்துள்ள கைக்கணினி (t ) உபயகிக்க முயன்று வருகிறேன்.முகநூல் (facebook ) பக்கங்களை படிக்க முயற்ச்சித்தால் தமிழில் பின்னூட்டம் அல்லது உள்ளிடு செய்யப்பட்டுள்ள மற்றவர்களின் செய்திகளைப் படிக்க இயலுவதில்லை .யூனிகோட் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து பார்த்தாலும் பயனில்லை சரியான் தீர்வு ஏதாவது தரமுடியமா? (நண்பர்களின் ipad களில் இந்தத் தொல்லை இல்லை என்?)
Rate this:
Share this comment
Cancel
Balaji - chennai,இந்தியா
26-பிப்-201316:11:08 IST Report Abuse
Balaji நான் உபுண்டு(ubuntu) ஆப்ரேடிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன் இதில் வீடியோ பார்க்க முடிய வில்லை flashplayer பொறுத்த வேண்டுமாம் அதை கமெண்டை பயன்படுத்திதான் பொறுத்த முடயுமாம் உங்களிடம் அதற்கான வழிமுறைகள் இருந்தால் எனக்கு உதவுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X