அளப்பவாயன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

""நான் எங்கே இருக்கிறேன்? இன்னும் சாக வில்லையா?'' என்று அவர்களைக் கேட்டேன்.
அவர்களில் ஒருவர், ""வணிகர்களாகிய நாங்கள் இந்தப் பாலைவனச் சோலையில் தங்கி இருந்தோம். நீங்கள் பாலைவனத்தில் மயங்கி விழுந்ததைப் பார்த்தோம். உங்களை இங்கே தூக்கி வந்தோம்,'' என்றார்.
அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும் தந்தனர். நான் பழைய வலிமையை பெற்றேன்.
""என்னை அவர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றனர். நாங்கள் ஒரு நகரத்தை அடைந்தோம். அவர் களுக்கு நன்றி சொல்லி விட்டு, அங்கிருந்து புறப் பட்டேன்!'' என்றான் இளைஞன்.
அவன் சொன்னதை அவர்கள் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து அவர், ""ஒருமுறை என்னைப் பெரிய புலி ஒன்று துரத்தியது. அதை எதிர்த்துத் தாக்க என்னிடம் சிறு கத்தியும் இல்லை,'' என்று அளந்தான்.
""புலி உங்களைத் துரத்தியதா? எப்படி அதனிடமிருந்து தப்பித்தீர்கள்? சொல்லுங்கள்,'' என்று அவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
""பயணத்தில் நான் ஆப்பிரிக்கக் காட்டிற்குச் சென்றேன். அப்படி ஒரு அடர்ந்த காட்டை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வானளாவ உயர்ந்து அப்படியே வானத்தை மூடி இருந்தது. பகல் நேரத்திலும் கதிரவன் ஒளி சிறிதும் உள்ளே வர வழி யில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.
நான் அந்த அடர்ந்த காட்டிற்குள் வேடிக்கை பார்த்தபடியே சென்றேன். என் அருகே புலியின் உறுமல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பதினாறு அடி வேங்கைப் புலி ஒன்று என்னையே முறைத்துப் பார்த்தபடி நின்றது.
எனக்கும், அதற்கும் பத்தடி தொலைவுதான் இருந்தது.
அஞ்சி நடுங்கிய நான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன். புலியும் என்னைத் துரத்தத் தொடங்கியது.
எனக்கு எப்படித்தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. புலியை விட வேகமாக ஓடத் தொடங்கினேன்.
புலியும் என்னை விடாமல் துரத்தியது.
நீண்ட தொலைவு ஓடியதால் களைப்படைந்தேன். எனக்கும், புலிக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.
நான் மலையின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். அதன் உச்சியை அடைந்தேன். கீழே பள்ளம் தெரிந்தது. விழுந்தால் எலும்பும் கிடைக்காது என்பதைப் புரிந்துக் கொண்டேன்.
அங்கிருந்து நூறு அடி தொலைவில் இன்னொரு மலை இருந்தது. புலியிடம் இருந்து தப்பிக்க அந்த மலையை நோக்கித் தாவினேன். ஒரே தாவலில் அந்த மலையை அடைந்தேன்.
மலை உச்சிக்கு வந்த புலி என்னைத் தேடியது. நான் இன்னொரு மலையில் இருப்பதைப் பார்த்தது. அவ்வளவு தொலைவு தாண்ட முடியாது என்பதை அறிந்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றது. புலியிடம் இருந்து தப்பித்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்,'' என்று அளந்தான்.
""புலியிடம் இருந்து தப்பிக்க நூறு அடி தொலைவா தாண்டினீர்கள்? ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கா? என்னால் நம்ப முடியவில்லை,'' என்று வியப்புடன் கேட்டார் ஒருவர்.
""நீங்கள் மட்டுமல்ல... யாருமே நம்ப மாட்டார்கள்,'' என்றான் இளைஞன்.
அங்கிருந்த இன்னொருவர், ""நீங்கள் சொன்ன எதையுமே என்னால் நம்ப முடிய வில்லை,'' என்றார்.
கோபமடைந்த அவன், ""உங்களை நம்ப வைக்க நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். உங்கள் கண் எதிரில் செய்து காட்டுகிறேன்,'' என்றான்.
""இந்த ஊரை அடுத்து இருபதடி வாய்க்கால் ஒன்று உள்ளது. அதைத் தாண்டிக் காட்டுங்கள். நீங்கள் நூறடி தாண்டியதையும், மற்றதையும் நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.
மற்றவர்களும், ""நீங்கள் அந்த வாய்க்காலைத் தாண்டிக் காட்டுங்கள்,'' என்றனர்.
""நூறடி தாண்டிய என்னால் இருபதடி தாண்ட முடியாதா? இப்போது நான் பசியோடு இருக்கிறேன். நான் ஆற்றங்கரைக்குச் சென்று சாப்பிட்டு விட்டு மாலை வருகிறேன். நாம் அனைவரும் அந்த வாய்க்காலுக்குச் செல்வோம். உங்கள் கண் எதிரிலேயே அந்த வாய்க்காலைத் தாண்டிக் காட்டுகிறேன். நீங்களும் சென்று சாப்பிட்டு விட்டு அங்கே வந்து விடுங்கள்,'' என்றான்.
அதன்படியே அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அங்கே வந்தனர். நீண்ட நேரம் அவனுக்காகக் காத்திருந்தனர். அவன் வரும் அறிகுறியே தெரியவில்லை.
இதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர் களிடம், ""அவன் அண்டப்புளுகன். இங்கே வந்தால் தன் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதை அறிந்து, ஊரைவிட்டே ஓடி இருப்பான். அவன் இங்கே வர மாட்டான். அவனுக்காகக் காத்திருப்பது வீண்,'' என்றார்.
அவர் பேச்சை நம்பாத அவர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர். இருட்டத் தொடங்கியும், அவன் வரவில்லை.
அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அவன் அண்டப்புளுகன் என்பது. அண்டப்புளுகளின் பேச்சை உண்மை என்று நம்பினோமே, என்று அவர்கள் வருந்தி சென்றனர்.
முற்றும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X