அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பழிகோபுரம் - பருகும் காபி ப்ளேஸானது!

பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பழிவாங்கும் பரம்பரையை பற்றி தெரியுமா?
14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மேனியாட்கள். எதையாவது தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் அதை, "மேனியா' என்று சொல்கிறோமே, அந்த வார்த்தையே இவர்களிடம் இருந்து உருவானதுதான். மேனியாட்கள், அடிப் படையில் விவசாயிகள். இவர்களுக்குள் அடிக்கடி நிலத்தகராறு ஆரம்பிக்கும். தொடக்கத்தில் வாய்த்தகராறு, அதன்பின் வாய்க்கால் தகராறாக உருமாறும். இறுதியில், கொலையில் வந்து முடியும். அதன்பின் ஊர் ரெண்டுபடும். கொலை நடந்ததும் ஓடிப்போய் ஊரில் உள்ள தேவாலய மணியை அடிப்பர். இதுதான் அறிவிப்பு.
அதாவது பழிவாங்கும் படலம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். அந்த ஊரில் நிறைய கோபுரங்கள் இருக்கும். கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் ஒட்டுமொத்தமாய் தாங்கள் கட்டி வைத்த கோபுரங்களில் ஒளிந்து கொள்வர். கோபுரங்கள் என்பது மிகவும் குறுகலான, உயரமான கல்கட்டடங்கள். அதன்பின் வழி மிக குறுகலாக இருக்கும். பதுங்கு குழிகள், உணவுக் கிடங்கு, ஆயுதக் குவியல், குறைவான ஜன்னல்கள் என்று எல்லாமே இருக்கும். எதிரிகள் அருகில் வந்தால் ஜன்னல் வழியாக தாக்குவர். குறுகலான நுழைவு வாயில் என்பதால் எதிரியால் உள்ளே நுழைய முடியாது. அதனால் வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பழிவாங்கும் படலம் அமைதியாகும். ஒளிந்திருப்பவர்களின் நண்பர்கள், உறவினர்கள் அவர்களின் நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் அதில் வரும் தானியங் களை கொண்டு கோபுர வாசிகளுக்கு உணவு கொடுப்பர். ஒளிந்திருப்பவர்கள் எப்போது வெளியே வருவர் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காத்திருப்பர். வெளியே வந்தால் பழிக்குப்பழி வாங்குவர். உள்ளே போனவர்கள் வருடக் கணக்கில் வெளியே வராமல் இருப்பர். சம்பந்தப்பட்டவர்கள் இறந்து போவதும் உண்டு. அப்படி இறக்கும் போது, பழிக்குப்பழி வாங்கும் வஞ்சம் அடுத்த தலைமுறைக்கு கை மாற்றப்படும். தலைமுறை கடந்து பழிவாங்கிய சம்பவங்களும் உண்டு. தொடர்ந்து பழிக்குப்பழி வாங்கிய காரணத்தால், பல விவசாய குடும்பங்கள் அழிந்து விட இப்போது, அந்த கோபுரங்கள் எல்லாம் எகிப்தில் காபி ஷாப்களாக மாற்றப்பட்டு விட்டன.

பச்சைப்பால் விற்பது தவறா......?

நமது நாட்டில் பால் விற்பது என்றால் அது பச்சைப் பால் விற்பதைத்தான் குறிக்கும். காய்ச்சிய பால் எங்கும் விற்கப்படுவதில்லை. கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் பயணத்தின் போது அவசரத் தேவைக்காக காய்ச்சிய பாலை டீக் கடைகளிலும், ஓட்டல்களிலும் வாங்குவர். இந்த இரண்டு இடங்களில்தான் காய்ச்சிய பால் கிடைக்கும். மற்ற இடங்கள் எல்லாவற்றிலும் பச்சைப் பால்தான். ஆனால், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காய்ச்சிய பால்தான் கிடைக்கும். அங்கு பச்சைப்பால் விற்பது குற்றம். மீறி விற்றால் சிறை தண்டனை.
ஜேம்ஸ் ஸ்டூவர்ட், ஷரோன் பால்மர், விக்டோரியா புளோச் ஆகியோரை பச்சைப் பால் விற்றதற்காக சிறையில் தள்ளி, பல கொடுமைகளை செய்துள்ளது கலிபோர்னியா மாகாண அரசு. ஜேம்ஸ் ஸ்டூவர்ட் என்பவர், "ராவேசம் புட்ஸ்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் "பெர்மா கல்சர்' என்ற முறையில் விவசாயம் செய்து வருகிறார். புத்தம் புது காய்கறிகள், பழங்கள், உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதுதான் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் என்ற கொள்கையை பரப்பி வருபவர். இந்த கொள்கைகளை கொண்ட அவருடைய வாடிக்கையாளர்கள் விருப்பப் பட்டுத்தான் பச்சைப் பாலை வாங்கி குடித்தனர். இவரிடம் பச்சை பால் வாங்குவதற்கு அங்கு கடும் போட்டியே நிலவும். பச்சைப்பால் குடிப்பவர்கள் அங்கு தனி அமைப்பையே உருவாக்கி இருக்கின்றனர். பச்சைப் பால் மருத்துவ குணமுள்ளது. அதை குடிப்பதால், பல நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. அக்கி போன்ற நோய்க்கு இணையான, "லைமி' என்ற நோய் பச்சைப் பாலை குடித்தால், குணமாகிவிடும் என்று அமெரிக்காவில் நம்பப்படுகிறது. இந்த சூழலில்தான் பச்சைப்பால் விற்பனை செய்வது குற்றம் என்று சொல்லி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பச்சைப் பால் விற்பது குற்றமா? குற்றம் இல்லையா? என்பதைக் காட்டிலும் அதை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிரான விஷயம் என்பதில்தான் பிரச்னையே தொடங்கியது. இந்த நிறுவனங்கள், "பச்சைப் பாலில் உள்ள பல பாக்டீரியாக்கள், பாலை உண்பவர்களுக்கு நோயை தரலாம்' என்று கூறி பதப்படுத்தப்பட்ட பாலை மட்டுமே விற்க வேண்டும் என்கிற சட்டத்தை உருவாக்கி வைத்துள்ளன. பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களின் வணிக நலனுக்கு மாறாக நடக்கும் எதையும் பொறுத்துக் கொள்வதில்லை என்ற எண்ணம்தான், பச்சைப் பால் விற்றவர்கள் மீது கொடூர நடவடிக்கைக்கு காரணமாகி விட்டது. பச்சைப் பால் பிரச்னை அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் பச்சைப் பால் விற்பனை களைகட்டிக் கொண்டிருக்கிறது.

அதையும் ஞாபகத்தில் வையுங்கள்!

ஒரிசாவை ஒடிசாங்கறாய்ங்க, பெங்களூரை பெங்களூருங்கறாய்ங்க... இப்படி பழைய பெயர்கள் மாறுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு இரண்டையும் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 25 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதில், அதிகபட்சமாக, கேரளாவில் 17 நகரங்களின் பெயர்களையும், பஞ்சாபில் 4 நகரங்களின் பெயர்களையும், ஒடிசா, மத்திய பிரதேசத்தில் தலா 2 நகரங்களின் பெயர்களையும் மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கண்ணனூர் என்ற பெயர் கண்ணூர் என்றும், தேவிகோலம் என்ற பெயர் தேவிகுளம் என்றும், ஆல்வாய் என்ற பெயர் அலுவா என்றும் மாற்றப்பட்டு உள்ளன. இப்படி அந்த மாநிலத்தில் 17 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. அதே சமயம், மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலை, போஜ்பால் என்று மாற்றுமாறு யோசனை தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த யோசனையை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, "எலுமிச்சை ரவை' உப்புமா செய்முறை நேரம்!
தேவையான பொருட்கள்: ரவை- ஒரு கப், எலுமிச்சம் பழம்-ஒன்று, பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, முட்டைக் கோஸ்)-கால் கப், பச்சை, மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழியவும். ரவையை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, துருவிய இஞ்சி சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் வறுத்த ரவையை சேர்த்து லேசாகக் கிளறி, நன்கு வேக விடவும். வெந்த பிறகு, எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
என்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X