ஹாய் பட்டூஸ் கொள்ளு பற்றி தெரிந்து கொள்ளலாமா!
"கொள்ளு'வை ஆங்கிலத்தில், "ஹார்ஸ் கிராம்' என்று அழைப்பர். பெயருக்கு ஏற்றாற்போல் குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது. இதில், இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இது உடலில் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்கக்கூடியது. சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கக்கூடியது. இதை ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
மேலும், "கொள்ளை' தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அந்நீரை குடிக்க ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளை பலப்படுத்தும். கண் நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணமாக்கும். பெண்களுக்கு வெள்ளை போக்கை கட்டுப்படுத்தும். கொள்ளும், அரிசியும் கலந்து செய்த கஞ்சியை குடித்தால், நல்ல பசி எடுக்கும். மேலும், கொழுப்பு, ஊளை சதையை குறைக்கும் சக்தி "கொள்ளு'க்கு உண்டு!