சட்டமும் தர்மமும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:00

அந்த வீட்டின் பரந்த முற்றத்தில், ஒரு அமைதி நிலவியது. சிவாவின் சித்தப்பா மூர்த்தி மற்றும் ஊரின் முக்கியஸ்தர் ஒருவரும், நடுநாயகமாக வீற்றிருக்க, சிவா ஒருபுறமும், பாபு ஒருபுறமும் நின்றிருந்தனர். சிவாவின் மனைவி விமலாவும், சிவா - பாபுவின் அம்மா காமாட்சியும், சகோதரன் இருவருக்குள்ளும், எந்த பிரச்னையும் வராமல் இருக்க, மனதுக்குள் ஆண்டவனை வேண்டியபடி, நடப்பதை பார்க்கத் தயாராயினர்.
மூர்த்தி, தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்...
""எங்கண்ணன் இறந்து சரியா, இருபது நாள்தான் ஆகுது. காரியங்களும் நல்லபடியாகவே முடிஞ்சிருக்கு. ஆனாலும், இந்த சூழ்நிலையில், சொத்துபத்து பத்தி பேச வேண்டிய நிர்பந்தம் வந்திருப்பது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா, என்ன செய்ய முடியும்? திடீர்ன்னு பாபு வந்ததாலே, இந்த கட்டாயம் ஏற்பட்டிருக்கு. அதற்கு இது நம்ம குடும்ப விஷயமாக இருந்தாலும், இந்த ஊர் பெரியவரையும், ஏன் துணைக்கு அழைச்சுகிட்டு வந்தேன்னா, ஒரு வேளை, நாம தப்பா நடந்துகிட்டா, இவரு அத சுட்டிக்காட்டலாம். இல்ல நாம சுமூகமாக போய்ட்டா இவரு, ஒரு பார்வையாளராகத்தான் இருப்பாரு,'' என்றவாறு, அந்த முதியவரை மூர்த்தி பார்க்க, அதை ஆமோதிப்பது போல் அந்த முக்கியஸ்தர் தலையாட்டினார்.
மீண்டும் தொடர்ந்தார் மூர்த்தி...
""இங்க பாருங்க... ஒரு விஷயத்தை சட்டப்பூர்வமாகவும் பார்க்கலாம்,தர்மப்படியும் பார்க்கலாம். நான் தர்மப்படி போறதுதான் சரி என்பேன். அதுல யாருக்காவது உடன்பாடு இல்லை என்றால், வேறு வழியில்லை.
சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்துதான் ஆகணும். அதுதான் முறை. இதை ஒத்துக்கறீங்களா?''
சித்தப்பா கேட்ட கேள்விக்கு, ""நான் ஒத்துப்பேன் சித்தப்பா. இவன் தான் சட்டம் அது, இதுன்னு பேசறான்,'' என்று தம்பியை சுட்டிக் காட்டினான் சிவா.
""சித்தப்பா... எனக்கு நியாயம் வேணும். அது தர்மப்படி கிடைக்கலேன்னா சட்டப்பூர்வமாக போகத்தான் செய்வேன். நானும், எங்கப்பாவோட புள்ளைதான்,'' பதிலடி கொடுத்தான் பாபு.
""சரி பாபு... மொதல்ல பேசுவோம். நீ ரொம்ப பரபரக்காதே,'' பாபுவை அடக்கிய சித்தப்பா, சிவாவை பார்த்தார்.
""இங்க பாரு சிவா... பாபு இருபது ஆண்டுக்கு பின் வந்திருக்கான். ஒரு வேளை, அவன் இங்கேயே இருந்திருந்தா, அவனுக்கு உங்கப்பா கண்டிப்பா படிப்பு, சாப்பாடுன்னு செலவு செஞ்சிருப்பாரு. ஏதோ போறாத காலம், வீட்ல திருடிட்டு, சொல்லாம கொள்ளாம ஓடிட்டான். வட மாநிலத்தில் எங்கேயோ மனைவி, குழந்தைகளுடன் செட்டில் ஆயிட்டான். இப்ப வந்திருக்கான். நீ தம்பியை நினைச்சு சந்தோஷப்படத்தான் வேணும். ஆனா, ஏன் வெறுப்பா இருக்க?''
""ம்... நல்லா கேட்டீங்க சித்தப்பா... அவன் இவ்வளவு ஆண்டு கழிச்சி உறவ கொண்டாடணும்ன்னா வந்திருக்கான்? அப்பா இறந்த தகவல் கேட்டு, சொத்த பிரிச்சு வாங்கிட்டு போகல்ல வந்திருக்கான். அப்புறம் பாசமா வரும்?'' ஆத்திரத்தை அடக்கியபடி கேட்டான் சிவா.
பாபுவை பார்த்தார் மூர்த்தி...
""இங்க பாருங்க... ஏன் வீண் பேச்சு... அப்பாவோட சொத்துல சரிபாதிய எனக்கு கேக்கல. அவனே, முக்கால்வாசி எடுத்துக்கட்டும். எனக்கு கணிசமா கொடுக்கணும், அவ்வளவுதான்,'' கறாராக கூறினான் பாபு.
சிரித்தார் மூர்த்தி. ""பாபு, நீ புரியாம பேசற, சொந்தமா சம்பாதிச்Œ உங்கப்பா சொத்துல, உனக்கு சரிபாதி வராதுப்பா. நீ, அம்மா, சிவான்னு மூணா பிரிக்கணும். புரிஞ்சுக்க முதல்ல.''
யோசித்தான் பாபு. ""சரி... மூணா பிரிங்க. நான் என் பங்கை, "டிஸ்போஸ்' செய்துட்டு ஊருக்கு போகணும்,'' என்று அவசரப்பட்டான்.
இந்த வார்த்தைகளால் காயப்பட்ட காமாட்சி, குறுக்கே பேசினாள்...
""ஏண்டா போகணும்ங்கிற... இந்த பக்கம் வந்துருடா. நீங்களாவது சொல்லுங்களேன்,'' என்று தன் மச்சினனிடம் கெஞ்சினாள்.
""அம்மா... நான் கட்டியிருக்கும் பெண், பெங்காலி பொண்ணு, இங்க சரிப்பட்டு வராதும்மா. வேணும்ன்னா அப்பப்ப வர்றேன். புரிஞ்சுக்க,'' அம்மாவை சமாதானப்படுத்தினான் பாபு.
சித்தப்பா, சிவாவிடம் கேட்டார். ""என்னப்பா சொல்ற, மூணா பிரிங்கங்றான்.''
""சித்தப்பா... இவன் சொல்றமாதிரி மூணா பிரிச்சா, அது சட்டப்படி சரியாகத்தான் இருக்கும். ஆனா, குடும்பத்தை விட்டு ஓடிப்போய், தன் கடமையை சரியா செய்யாத இவனுக்கு, சட்டப்படி எல்லாம் நடக்கணுமா? என் கேள்வி இதுதான். பெரியவங்க, அவனுக்கு புத்திமதி சொல்லி, நான் கொடுக்கறத வாங்கச் சொல்லக் கூடாதா? இப்ப சொத்த பிரிச்சு, இவன் பேர்ல, "ரிஜிஸ்டர்' செய்து, அத இவன் அடிமாட்டு விலைக்கு எவன்கிட்டயாவது வித்துட்டு போவான். அத நான் பார்த்துட்டுருக்கணுமா? இல்ல, இவன குடும்பத்தோட இங்க வரச் சொல்லுங்க... ஒரு அஞ்சு வருஷம் இருக்கட்டும். நல்லது கெட்டதுல பங்கெடுத்துக்கட்டும். அப்புறம், அவன் கேக்கறத பார்க்கலாம். ஆனா, திடீர்ன்னு வந்து, இவன் சுருட்டிக்கிட்டு போனா, இத இத்தனை நாள் பாத்துகிட்ட எனக்கென்ன மரியாதை... இல்ல என்ன நியாயம் கிடைக்கும்,'' என்று சிவா கூற...
மறுபடியும் பாபுவை பார்த்தார் மூர்த்தி.
""பாபு நல்லா புரிஞ்சுக்க... அண்ணன் சொல்றபடி செய்ய முடியுமா, இல்ல உன் பழைய பல்லவியை பாடப்போறியா?''
""சித்தப்பா... அவன் பேச்சுக்கு தலையாட்ட, அஞ்சு வயது தம்பி இல்ல நான். சுமூகமா வந்தா சரி, இல்ல வக்கீல், கோர்ட் தான். வெள்ளாமை செய்ய முடியாம செய்திடுவேன். இப்ப நான் வந்ததே, அவனுக்கு புடிக்கல சித்தப்பா. நீங்க தலையிட்டு, ஒரு முடிவு சொல்லுங்க நான் கேட்டுக்கறேன்,'' சற்று பணிந்தான் பாபு.
சித்தப்பா யோசித்தார். பின் காமாட்சியிடம்...
""இங்க பாருங்க மதனி... எனக்கு இவங்களும் புள்ளைங்கதான். ஆனா, எப்ப பிரிவினைன்னு வந்திச்சோ... அப்ப உறவெல்லாம் பார்க்க கூடாது. சட்டம் தான் கடைசியிலே ஜெயிக்கும். பேசாம, இருக்கிறதை பட்டியல் போட்ட, மூணா பிரிச்சி, ஒரு பாகத்தை பாபுகிட்ட கொடுக்கிறது தான் நியாயம். மத்தபடி, உங்க குடும்பத்துக்கு, இந்த பாபு, ஒரு துரும்ப கிள்ளி போட்டதில்லேங்கறது எனக்கு தெரியும். யாருக்கு போவுது இந்த சொத்து... ஒரு ரத்த உறவுக்குதான். பேசாம சிவாவை இதுக்கு ஒத்துக்க வைங்க. நான் நாளைக்கு வர்றேன்,'' என்று சொல்லிவிட்டு, அந்த முக்கியஸ்தரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார் மூர்த்தி. பாபுவும் எங்கோ வெளியில் கிளம்ப, சிவாவின் மனைவி விமலா, தோள்பட்டையை வெட்டி தன் எதிர்ப்பை தெரிவிக்க, அம்மாவும், சிவாவும் மட்டும் அங்கிருந்தனர்.
சிவா தலைகுனிந்தவாறே இருந்தான். காமாட்சிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவம் சிவா... நல்ல பிள்ளைதான். குடும்பத்துக்கு பொறுப்பானவனாகவே இருக்கிறவன். தம்பி, வடிவில் ஒரு சோதனை.
""சிவா...'' அம்மா கூப்பிட்டாள். தலை நிமிர்ந்தான் சிவா.
""விட்டு கொடுத்தா, நீ கொறைஞ்சிட மாட்டேப்பா. அப்புறம் உன் இஷ்டம்,'' சொல்லிவிட்டு, தன் அறைக்குள் சென்றாள் காமாட்சி.
மறுநாள் மதியம், மீண்டும் சித்தப்பா வந்தார். அந்த முக்கியஸ்தரும் வந்தார்.
பேசினான் சிவா...
""சித்தப்பா... இதோ, இந்த பேப்பர்ல எங்கப்பாவோட சொத்துகளை லிஸ்ட் போட்டிருக்கேன். நீங்க சொன்னபடி, அதாவது சட்டபடி, இத மூணு பங்கா பிரிச்சிடுங்க. எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனா, இதுவரைக்கும் எந்த கடமையும் செய்யாத பாபு, இனிமேலாவது தன் கடமையை செய்யணும். ஆமாம் சித்தப்பா, அவன், அம்மா பங்கையும் எழுதி வாங்கிக்கட்டும். இருக்கிற மூணு வீட்ல, நான், ஒரு வீட்டுக்கு போய்டறேன். பாபு, அம்மாவ வெச்சு காப்பாத்தணும். முடியாதுன்னு சொல்லிட்டா, அம்மா தனியாகவே இருக்கட்டும். இனி, நான் அம்மாவ கூட இருந்து பாத்துக்கறதா இல்லை. இததப்பா புரிஞ்சிக்கிட்டாலும் பரவாயில்லை. நான் இளிச்சவாயன் மாதிரி, இப்ப பிரிச்” கொடுத்துட்டு, அப்புறம், அம்மா போனவுடனே, மறுபடியும் இவன் வருவான், அதுல பங்கு கேட்பான். நீங்களும் சட்டப்படி சரிம்பீங்க. எதுக்கு தொல்லை... ஒன்று, அம்மாவ இவன் பாத்துக்கணும், இல்ல இங்கேயே தனியா விட்டுடட்டும்.''
சிவா உறுதியாக சொல்ல... விமலாவுக்கு ஒ@ர ஆச்சரியம். "அம்மா அம்மா... என்று உருகுவாரே... இவரா இப்படி பேசுவது?'
"என்னது புதுப் பிரச்னை? அம்மாவ அழைச்சிக்கிட்டும் போக முடியாது. மனைவி நிவேதா தேவியும் இங்க வரமாட்டா. இப்ப அம்மாவ கண்டுக்காம போறது சரியா இருக்காதே. பாவம் நமக்கு, "சப்போர்ட்' வேற செஞ்சவங்க...' என்று குழம்பினான் பாபு.
சித்தப்பா மூர்த்தியோ சற்று மிரண்டார். சிவா பேசியதிலும் நியாயம் இருந்ததை புரிந்து கொண்டார். சொத்தில் பங்கு கேட்கும் போது, கடமையிலயும் பங்கு கொடுப்பதுதானே நியாயம்? ஆனால், இந்த சொத்திற்காக அம்மாவை வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு சிவா போவான் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த முக்கியஸ்தரும், வாய் திறந்து, சிவா சொல்வது சரி என்றார். காமாட்சியோ, தன் நிலை உணர்ந்து வாடிப் போனாள். "ஓடிப்போய் வந்தவன், குடும்பத்தை விட, சொத்தை பறித்துக் கொண்டு போவதில் குறியாய் இருக்கிறான். மூத்தவனோ, அது பிடிக்காமல், அவனை பழிவாங்க, தன்னை பணயம் வைக்கிறான். இவர்களின் மனதில், தாய்க்கென்று தனி இடம் ஏன் இல்லை?' காமாட்சியால் கண்ணீர் துளிகளை அடக்க முடியவில்லை. மூர்த்தியை அழைத்தாள். ""இங்க பாருங்க... பாபுவுக்கு, சிவா சளைச்சவன் இல்லை. அவன் சொல்றதும் சரிதான். இருக்கிறதை மூணா பிரிங்க. பாபு, அவன் வழியில் போகட்டும். சிவாவையும் நான் கட்டாயப்படுத்தல. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும், நான் தனியா இருந்துக்கறேன். இதுக்கு மேல, இந்த பிரச்னையை பேச வேண்டாம்,'' விரக்தியுடன் உள்ளே எழுந்து சென்றாள் காமாட்சி. "அம்மா...' என்று சிவாவுக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டான். பாபு புரியாமல் நின்றான். மூர்த்தி சில நிமிடங்கள் கண் மூடி சிந்தித்தார்.
""என்னப்பா சிவா இது தான் உன் முடிவா?''
""ஆமாம் சித்தப்பா... ஒரு குடும்பத்துல நாலு பசங்க இருந்தா, அவங்கள எப்படி அம்மா சமமா பாவிக்கறாங்களோ, அது மாதிரி, அம்மாவையும், அந்த நாலு பேரும் சமமா பாவிக்கணும். இல்ல, அப்படி இருக்கிறவனுக்கு, ஒரு அங்கீகாரத்தை அம்மாவும், மத்தவங்களும் தரணும்.
""அம்மாவை சரியா கவனிக்க முடியாதபடி நோய், பணம், இடம், பொண்டாட்டி குணம் இப்படி எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். அத சொல்லி தட்டிக்கழிக்கிறதா, ஒரு மகனுக்கு அழகு? எந்த காரணமாக இருந்தாலும், பொண்டாட்டி புள்ளைங்களை ஒருத்தன் பாத்துக்கல. அதே மாதிரி, அம்மாவையும் கவனிக்கணும். அதான் மகனோட கடமை. இந்த பாபுவை பொறுத்தவரைக்கும், இருபது ஆண்டுகளாக எங்கேயோ போய்ட்டான். இப்ப வந்து சொத்துரிமை கொண்டாடறான். எங்கம்மா என்ன சொல்லணும்...
""டேய்... உன் கடமையை நீ செய்யலை. இவன் தான் செஞ்சான். இவன் சொல்றபடி கேள் என்றால், அது நியாயம் சித்தப்பா. ஆனா, எங்கம்மா, தம் பசங்க சண்டை போட்டுக்க கூடாது. பாபு மன” வருத்தப்படக் கூடாதுன்னு, சொத்தை சமமா பிரிக்கிறாங்க. என்னை விட்டுக் கொடுக்க சொல்றாங்க. ஏன்னா, நான் இளகின மனசுக்காரன்.
""அந்த பாபு குடும்பத்த விட்டு போனவன். பாசம் இல்லாதவன். அவன கெஞ்சி பலனில்லை. ஆனாலும், அவனுக்கு சேர வேண்டியது சேரணும். அதுல மட்டும் தாய்ப்பாசம். தாய்ப்பாசத்துல இப்படி ஒரு ஏற்ற இறக்கம் வரும்போது, மகன் பாசத்துலயும் வரும் சித்தப்பா. ஒரு வேளை ,எங்கம்மாவே என் பக்கம் இருந்து தர்மப்படி நியாயம் பேசியிருந்தா, சொத்துல அவன் கேட்டத சட்டப்படி விட்டுக் கொடுத்திருப்பேன் நான். எல்லாரும், சட்டம் பக்கம் இருக்கும் போது, நானும் அதுபக்கமே இருந்துட்டு போறேன். முடிஞ்சா, பாபு, எங்கம்மாவ கூட்டிக்கிட்டு போகட்டும். அவன் கூட இருந்து எங்கம்மா பாக்கட்டும், என் அருமை புரியும். இல்ல, இங்க தனியா இருக்கட்டும். இதுதான் என் முடிவு சித்தப்பா,'' மூச்சிறைக்க பேசிவிட்டு நிறுத்தினான் சிவா. சித்தப்பாவால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை.
பாபுவாலும், அம்மா நிலைக்கு ஒரு முடிவு சொல்ல முடியவில்லை. தன்னால் பார்த்துக் கொள்ள முடியாத பட்சத்தில், இங்கேயே அம்மாவையும், சிவாவையும் பிரித்து வைப்பது பாவம் அல்லவா என்று தோன்றியது. மறுநாள் தன் முடிவை சொல்வதாக கூறினான் பாபு.
நீண்ட நேரம் யோசித்து, அன்றிரவு தன் அண்ணனுக்கு, ஒரு கடிதம் எழுதினான். அதை சிவாவின் பார்வையில் மட்டும் படும்படி வைத்தான். அந்த வீட்டை விட்டு சொல்லாமல் கிளம்பினான் பாபு.
அந்த கடிதத்தில்...
அன்புள்ள சிவா...
நான் நன்கு யோசித்தேன். ஆனால், நீ அம்மாவை பங்கு போடுவாய் என்று, நான் எதிர்பார்க்கவில்லை. அது நியாயம் தான். ஆனால், உன் மனதில் உள்ள நல்ல குணத்தை அழித்து, இந்த வழியில் உன்னை யோசிக்க வைத்தது, என் குற்றம் தான்; உணர்கிறேன். எனக்கு சொத்து மீது ஆசையிருந்தது உண்மைதான். ஆனால், அதை அம்மாவை பலியாக்கி வாங்குவதில் விருப்பமில்லை. அம்மாவிற்கு, என் கடமையை இதுவரை நான் செய்யவில்லை. இனிமேலும், செய்ய முடியுமென்று தோன்றவில்லை. எனவே, நான் போகிறேன். நீயாக பார்த்து, சொத்தில் ஏதாவது கொடு. பின், எப்போதாவது வருகிறேன். எனக்காக நீ ஒரு உதவி செய். அம்மா பாவம். உன்னைப் பற்றி இப்போது தவறாக நினைத்திருப்பாள். அதுவும் நீயாகவே செய்யாத குற்றத்திற்கு. எனக்கு அதிர்ச்சி கொடுக்கவே, அப்படி பேசியதாக என்று அம்மாவிடம் சொல்லிவிடு. நீயும் பழைய மாதிரியே இரு. மாற வேண்டாம். பிறகு பார்க்கலாம்.
இப்படிக்கு
உன் திருந்திய தம்பி.
***

கீதா சீனிவாசன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-மார்ச்-201303:16:21 IST Report Abuse
GOWSALYA அம்மா கீதா ,கதை எனப்பார்க்க நன்றாக இருக்கிறது......ஆனால், இந்தக்காலத்தில் சொத்துக்காக பெற்ற தாயையே கொல்கிறார்கள்,அதில அண்ணன் ,தம்பி என்ன வேறா??????...அதுதான் சந்தேகம்?????...ஆனால், இக்கதையைப் பார்த்தாவது எல்லோரும் திருந்தணும் .............திருந்துவார்களா????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X