இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:00

ஷங்கரை மிரட்டிய கமல்!





ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த, எந்திரன் படம் தான், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே, அதிக பட்ஜெட் படம் என்ற பட்டியலில் இருந்தது. ஆனால், ஐ படத்தை, 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வந்த டைரக்டர் ஷங்கர், கமலின், விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரண்டு போய், ஐ படத்தின் பட்ஜெட்டை, 145 கோடியாக்கி, இன்னும் பிரமாண்டத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா

அசினுக்கு புதிய சிக்கல்!





பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் அசின், தன்னிடம் எந்த கம்பெனி கால்ஷீட் கேட்டாலும், சல்மான்கானிடம் ஒப்புதல் பெற்ற பின்தான், அந்த படத்தில் நடிக்க முடிவு செய்கிறார். ஆனால், இப்படி இன்னொரு நடிகரின் கட்டுப்பாட்டில் அசின் இருப்பதை அறிந்த சில மேல்தட்டு ஹீரோக்கள், அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பதோடு, தங்கள் படங்களுக்கு அசின் தேவையில்லை என்றும் வெளிப்படையாக கூறுகின்றனர். தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்தது போல!
எலீசா

விஜய் படத்தில் வினய்!





மிரட்டல் படத்தை தொடர்ந்து, ஒன்பதுல குரு, இருவர் உள்ளம் படங்களில் நடித்து வரும் வினய், தற்போது விஜய் நடித்து வரும், தலைவா படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். காரணம் கேட்டால், "விஜய் எனக்கு பிடித்தமான நடிகர். அதனால், அவருடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தது. அதனால் தான், இந்த வாய்ப்பை நானே கேட்டு வாங்கி நடிக்கிறேன்...' என்கிறார் வினய்.
சி.பொ.,

படிப்பை தொடரும் காயத்ரி!





18 வயது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த காயத்ரிக்கு, அடுத்து கைவசம், பொன்மாலை பொழுது, மத்தாப்பூ போன்ற படங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டுமே புதுமுக ஹீரோக்கள் படங்கள் என்பதால், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. மேலும், அடுத்து புதிய படங்களும், "புக்'காகவில்லை என்பதால், பெங்களூரு சென்று படிப்பை விட்ட இடத்திலிருந்து, தொடரப் போவதாக கூறுகிறார்.
எலீசா

தங்கை நடிகையின் கதாநாயகி கனவு!





அலெக்ஸ் பாண்டியன் படத்தில், சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் அகான்ஷா பூரி, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரான இவருக்கு, கார்த்தியுடன் டூயட் பாட வேண்டும் என்பது லட்சியமாகவே இருந்ததாம். அந்த நேரம் பார்த்து, தங்கை வேடத்துக்கு கேட்க, வந்த வாய்ப்பை, விட மனசில்லாமல் நடித்துள்ளார். இருப்பினும், "டூயட் பாட வேண்டும் என்ற ஆசையை, விரைவில் நிறைவேற்றுவதற்காக முயற்சி எடுப்பேன்...' என்கிறார் அகான்ஷா பூரி. விதி எப்படியோ, மதி அப்படி!
எலீசா

தொழிலதிபருக்கு தடைபோட்ட ஓவியா!





ஓவியாவை திருமணம் செய்துகொள்ள, ஒரு தொழிலதிபர் தொடர்ந்து துரத்தி வருகிறார். ஆனால், ஓவியாவோ, "சினிமாவில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால், நான் கணக்கு போட்டதில், பத்து சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறேன். அதனால், இன்னும் ஒரு பெருந்தொகையை சினிமாவில் சம்பாதித்த பின், திருமணம் செய்து கொள்வேன்...' என்று, தொழிலதிபரின் ஆசைக்கு தற்காலிக தடை போட்டு வைத்துள்ளார் ஓவியா. தெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம், சீசம் பழம் தின்னம் போக!
எலீசா

இயக்குனர் ருத்ரன் மீது புகார்!





பாலா இயக்கிய, சேது படத்தைப் போன்று, இயக்குனர் ருத்ரன் இயக்கியுள்ள, வெற்றிச் செல்வன் படத்திலும், மனநோயாளிகளின் மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, அவர் நிஜ மன நோயாளிகளை வைத்தே படமாக்கியதாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ருத்ரன், "மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்து எப்படி காட்சியமைக்க முடியும்' என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X