சரித்திர புகழ் பெற்ற, மாவீரன் நெப்போலியன், பிரான்சு நாட்டின் சக்கரவர்த்தியாக விளங்கியவர். கடும் எதிர்ப்புக்கு இடையே, தன் காதலி, ஜோஸ்பினை திருமணம் செய்து கொண்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது, ஜோஸ்பினுக்கு, ஒரு வைர மோதிரத்தை பரிசளித்தார். இந்த மோதிரம், தற்போது பிரான்சில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதை, விரைவில் ஏலம் விட முடிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும், இந்த மோதிரம் ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ்பின் அணிந்திருந்த மோதிரத்தை ஏலம் எடுக்கப் போகும் அதிர்ஷ்டம், யாருக்கு காத்திருக்கிறதோ தெரியவில்லை.
— ஜோல்னா பையன்.