கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2013
00:00

கேள்வி: சமீபத்தில், என்னுடைய பிராட்பேண்ட் இணைப்புக்கு நிறுவனம் கொடுத்த மோடத்தினை எடுத்துவிட்டு, டி-லிங்க் நிறுவன வை-பி ரௌட்டரை இணைத்தேன். அதற்கான டெக்னீஷியன் வந்து இணைத்துக் கொடுத்தார். இருந்தாலும், வீட்டினுள் சிக்னல் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பிரச்னை எதில் உள்ளது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.
எஸ். விஜயன், உசிலம்பட்டி.
பதில்:
உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். முதலில், ஓர் ஆசிரியராக இணையத் தொடர்பை, நீங்கள் பயன்படுத்தும் பணிகளுக்காக உங்களுக்கு ஒரு பாராட்டு. இணையத் தொடர்பின் வளர்ச்சியைக் காண்கையில் பிரமிப்பாக இருக்கிறது. குறிப்பாக, உங்கள் ஊரைப் போன்ற கிராமங்களிலும் வை-பி இணைப்பு கிடைத்து நீங்கள் பயன்படுத்தும் பணிகளும் மிகவும் பயன்தருபவையாக இருப்பது இன்னும் சிறப்புக்குரியது. சரி, பிரச்னைக்கு வருவோம். இதில் சிக்கல் ஏதும் இல்லை. வை-பி ரௌட்டரைப் பொறுத்த வரை, அதனை வைத்து இயக்கும் இடமும் மிகவும் முக்கியம். வீட்டின் வெளிச்சுவர் அருகே வைத்திருந்தால், பாதி சிக்னல் வெளியே வீணாகச் செல்லும். அதனால், வீட்டினுள் சிக்னல் வலுவாக இருக்காது. இரும்பு பீரோ போன்றவற்றின் அருகேயும் வைக்க வேண்டாம். அவை ரௌட்டரின் சிக்னலை உடைக்கும். எனவே, வீட்டின் நடுமையமாக, சுற்றி சிக்னலைத் தடை செய்திடும் எதுவும் இல்லாமல் அமைத்துப் பார்க்கவும்.

கேள்வி: ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாகவும், பாதுகாப்பாகவும், தொடர்ந்து பிரச்னை இல்லாமலும் இயங்க என்ன செய்திட வேண்டும் என்பதனைச் சில கட்டளைகளாகத் தரவும்.
என். மஹேஸ்வரி, திண்டுக்கல்.
பதில்:
இது குறித்த கட்டுரைகளைப் படித்துவிட்டு, அதில் விளக்கமாகத் தரும் டிப்ஸ்களைப் படிக்கப் பொறுமை இல்லையோ! சரி, இதோ நீங்கள் கேட்டுள்ள கட்டளைகள். அப்டேட், அப்டேட் - இதுதான் முதல் மந்திரம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சர்வீஸ் பேக் ஆகியவை அன்றாடம் அல்லது எப்போ தெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது கட்டாயம் அவை அப்கிரேட் செய்யப்பட வேண்டும். கம்ப்யூட்டர் வேகமாகச் செயல் பட, தேவையற்ற புரோகிராம்களை, பைல்களை நீக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயங்கும்போது இயக்கப்பட்டு, ராம் மெமரியில் குடி கொள்ளும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். PC Decrapifier, CCleaner, and Malwarebytes AntiMalware என்ற மூன்று புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிந்து அவ்வப்போது இயக் கினால், இவை இந்த வேலைகளை மேற்கொள்ளும். தேவையற்ற பைல்களையும் புரோகிராம்களையும் நீக்கிய பின்னர், அவ்வப்போது ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்திட வேண்டும். இதனால், பைல்கள் சிதறிய நிலையில் சேவ் செய்யப்படுவது தடுக்கப்படும். உங்களிடம் எஸ்.எஸ்.டி. என அழைக்கப்படும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் இருந்தால், அதனை டிபிராக் செய்திடவே கூடாது. பைல்கள் சிதறிய நிலையில் சேவ் செய்வது என்ற பிரச்னை இதில் எழாது. மேலும், இதனை டிபிராக் செய்தால், அதன் வாழ்நாள் பயன்பாடு குறைந்துவிடும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்து கிறேன். இதில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?
கே. சுந்தர ராமன், சோழவந்தான்.
பதில்:
விண்டோஸ் 7 பைல்களை அழிப்பதற்கு எளிய வழிகளைத் தருகிறது. அவற்றை மீண்டும் பெற சற்று சுற்று வழியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அழித்த பைல்களை மீண்டும் பெற, விண் 7 மீண்டும் பெறக் கூடிய பார்மட்களை, அழிக்கப்படும் பைல்களுக்கும் போல்டர்களுக்கும் அளிக்கிறது. நீக்கப்பட்ட டேட்டாவினைப் பெற கீழ்க்கண்டபடி செயல் முறையினை மேற்கொள்ளவும்.
விண்டோஸ் லோகோ பட்டனை இரண்டொரு விநாடிகள் தொடர்ந்து அழுத்தவும். அடுத்து E கீயினை அழுத்தவும். இங்கு E என்பது விண்டோஸ் எக்ஸ்புளோரைக் (windows explorer) குறிக்கும். இந்த கீ அழுத்தப்பட்டவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ திறக்கப்படும். இந்த விண்டோவில் recycle bin என டைப் செய்திடவும். இங்கு Unwanted Files and Folder என்ற போல்டரில் அழிக்கப்பட்ட பைல்களும் போல்டர்களும் இருக்கும். இதனைத் திறந்து நீங்கள் மறுபடியும் பெற விரும்பும் பைல்களைத் தேடிக் காணவும். பின்னர், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனு மீது restore என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மீட்கப்பட்ட பைல், அழிக்கப் படுவதற்கு முன் அது எந்த போல்டரில் இருந்ததோ, அந்த போல்டரில் காணப்படும். அந்த போல்டருக்குச் சென்று, பைல் மீட்கப்பட்டதனை உறுதி செய்திடவும்.

கேள்வி: எனக்குப் பல ஆண்டுகளாக ஹாட்மெயில் அக்கவுண்ட் உள்ளது. இதனை அவுட்லுக் தளத்திற்கு மாற்ற இருப்பதாக செய்திகள் மற்றும் மின் அஞ்சல்கள் கிடைக்கின்றன. எப்படி மாற்றிக் கொள்வது என்பதனைத் தயவு செய்து விளக்கவும்.
எஸ்.கே. சிதம்பரம், கோவை.
பதில்:
இந்த விஷயத்தில் நீங்கள் தனியான ஆள் இல்லை. உங்களைப் போல பல்லாயிரங்கோடி மக்கள் இருக்கிறார்கள். இது குறித்து இதே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ள விரிவான கட்டுரையைப் படிக்கவும். என்றாலும், நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கான பதிலைத் தருகிறேன்.
ஹாட்மெயில் அக்கவுண்ட் நுழைந்து, ‘Options’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு ‘Manage Your Account’ என்று ஒரு தலைப்பு கிடைக்கும். இதன் முதல் லிங்க்கான ‘View and edit your personal information என்பதில் கிளிக் செய்திடவும். புதிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் இடது பக்கத்தில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் ‘Options’ என்ற இரண்டாவது பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இனி கிடைக்கும் புதிய பக்கத்தில் கீழாகச் செல்லவும். அங்கு ‘Additional Options’ என்று கிடைக்கும். இதில் ‘Close Account’ என்று உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது இதனை உறுதி செய்திட ஒரு செய்தி காட்டப்படும். அதில், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் மூடிட இருப்பதாகவும், அதனை இனி மேல் பயன்படுத்த முடியாது எனவும், உங்களுக்கு சம்மதமா? என்று காட்டப்படும். இதன் பின்னர் காட்டப்படும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து Yes என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி உங்கள் ஹாட் மெயில் அக்கவுண்ட் மூடப்பட்டு, அவுட்லுக் தளத்தில் இணைக்கப் படும். ஹாட்மெயில் இனி கனவில் மட்டுமே இருக்கும். ஒரு கூடுதல் டிப்ஸ் தரட்டுமா? நீங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக ஹாட்மெயில் அக்க வுண்ட் பக்கமே போகாமல் இருந்திருந்தால், அது முடக்கப்பட்டிருக்கும். அதனை மீண்டும் இயக்க முடியாது.

கேள்வி: வைட் ஏரியா நெட்வொர்க் என்பது, லோக்கல் ஏரியா நெட்வொர்க் ஆகாதா? அதன் சிறப்பும், வித்தியாசமும் என்ன?
கே. ஆர். சாருமதி, சிவகாசி.
பதில்:
அருமையான கேள்வி. பல வாசர்கள் தங்களின் இணையம் குறித்த கேள்விகளில் இது குறித்த குழப்பமான தகவல்களையே தந்துள்ளனர். இதோ விளக்குகிறேன். (LAN– Local Area Network) என்பதைப் போல் அல்லாமல், Wide Area Network என்பது நாடு, பூகோள எல்லை, நாடுகள் என்ற வரையறை, ஏன் கண்டம் விட்டு கண்டம் கூட தகவல்களைக் கொண்டு செல்லும் ஒரு கட்டமைப்பாகும். மிகப் பெரிய நிறுவனங்கள், உலகளாவிய தங்களின் அலுவலகங்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இந்த கட்ட மைப்பை ஏற்படுத்தி பயன்படுத்துகின்றன. LAN மற்றும் WAN ஆகியவற்றிற் கிடையேயான அடிப்படை வேறுபாடு அதன் இயக்க எல்லைகள் தான். கட்டமைப்பு அமைக்க அதிகம் செலவாகும். உலகின் மிகப் பெரிய கட்டமைப்பு நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் இணையமாகும். ஆனால் அதனை Wide Area Network என அழைப்பதில்லை.

கேள்வி: புதிய லேப்டாப் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். விண் 7 இயங்குகிறது. இதில் உள்ள பேட்டரி சீக்கிரம் தன் திறனை இழப்பது போல் உள்ளது. இதன் செயல்பாடு சரியா என எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
டி.ரஞ்சித் குமார், சென்னை.
பதில்:
லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப்பதில்லை என்பது வியப்புக்குரியது. இந்த வசதியினைப் பயன் படுத்தி சோதனையை மேற்கொண்டால், லேப்டாப் கம்ப்யூட்டரில் மின்சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். எப்படி இந்த மின்சக்தி செலவினை ட்யூன் செய்திடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த முதலில் Windows > Search Box எனச் செல்லவும். பின்னர் சர்ச் பாக்ஸில் “cmd” என டைப் செய்திடவும். இங்கு உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து powercfg energy output \FilePath\Energy_Report.html என டைப் செய்திடவும். இதில் FilePath என்பது, நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கும் எச்.டி. எம்.எல். ரிப்போர்ட் எங்கு சேவ் செய்யப்பட உள்ளது என்பதனைக் குறிப்பிட வேண்டிய இடமாகும். இந்த சோதனை நடத்தப்படுகையில், வேறு எந்த புரோகிராமும் இயக்கத்தில் இருக்கக் கூடாது. கிடைக்கும் ரிப்போர்ட்டில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் எப்படி, பேட்டரியின் மின்சக்தியினைச் செலவளிக்கிறது என்பதனையும், வேறு சில பரிந்துரைகளையும் தரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X