வாஸ்து சாஸ்திரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

பரீக்ஷ்த் என்ற முனிவரின் மகன் ஜனமே ஜயன். அவனிடம், "உன் தகப்பனாரை தட்சன் என்ற பாம்பு கடித்ததால் தான் இறந்தார்...' என்று கலகம் செய்தார் வைசம்பாயனர் என்ற முனிவர்.
இதைக் கேட்ட ஜனமே ஜயன், "இதற்கு என்ன செய்யலாம்?' என்று கேட்டார். "சர்ப்ப யாகம் என்று ஒன்றுள்ளது; அந்த யாகத்தை செய். ஊரிலுள்ள சர்ப்பங்களெல்லாம் அதில் வந்து விழுந்து மடிந்து விடும்...' என்றார் வைசம்பாயனர்.
ஜனமே ஜயனும் அதற்கு ஒப்புக் கொண்டு, சர்ப்ப யாகம் நடத்துவதற்காக பெரிய பந்தல் ஒன்று போட்டான். அப்போது, அங்கு வந்தார் ஒரு ஸ்தபதி. பந்தல் போட்டுள்ள அமைப்பைப் பார்த்து, "இந்தப் பந்தல் எதற்காக போடப்பட்டுள்ளதோ, அந்தக் காரியம் நிறைவு பெறாது...' என்றார்.
"இது வாஸ்துபடி இல்லாததால், நடக்க இருக்கும் காரியம் நடை பெறாது...' என்றார்.
ஆனால், அதை அலட்சியம் செய்து, சர்ப்ப யாகம் செய்தான் ஜனமே ஜயன். அதில், பல சர்ப்பங்கள் வந்து விழுந்து மாண்டன. சர்ப்ப யாகம் நடந்து கொண்டிருந்த போது, அங்கே ஆஸ்தீகர் என்ற முனிவர் வந்தார்.
சர்ப்பங்கள் ஹோம குண்டத்தில் வந்து விழுவதைப் பார்த்த முனிவர், "போதும், யாகத்தை நிறுத்துங்கள்...' என்றார். முனிவர் சொல்லி விட்டதால், ஜனமே ஜயனும் யாகத்தை நிறுத்தி விட்டான். அந்த ஹோமகுண்டத்தில் தட்சனும் வந்து விழ வேண்டிய சமயத்தில், முனிவர் வந்து சொன்னதால் யாகம் நின்று விட்டது.
ஸ்தபதி சொன்னபடி, இந்த யாகம் பூர்த்தியாகவில்லை. காரணம், பந்தல் அமைத்தது வாஸ்துபடி இல்லாதது தான்; இதைத்தான் ஸ்தபதி சொன்னார். அதனால், மனை வாங்கும் போதும், வீடு கட்டும் போதும், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவைகளை அனுசரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மனையும், வீடும் சுபிட்சமாக இருக்கும். சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் ஆலய கோபுரங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிற தெனினும், நம் இந்து கோவில்களின் கோபுரங்கள் வடக்கில் ஒருவிதமாகவும், தெற்கில் மற்றொரு விதமாகவும் அமைந்திருக்கக் காரணம் என்ன?
கோபுர நிர்மாணத்தில் சில சாஸ்திரங்கள் இந்துக்களுக்கு உண்டு. அதில் வட திசைக்கும், தென் திசைக்கும் மாறுபாடு உண்டு. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்வரை பெரும்பாலும் கோபுரங்கள் ஒரே ரீதியில் இருந்தன. கற்கோவில் கட்டத் தொடங்கிய பின், காலத்திற்கேற்ப கற்பனைகள் வளர்ந்தன. சாஸ்திரங்களுக் குப் புறம்பாக அவரவர் ஆசைகளுக்கும், வசதிகளுக் கும் ஏற்ப அவை கட்டப் பட்டன. இந்து சாஸ்திரங் களில் கோபுர அமைப்பு எப்படிப்பட்டது என்பதை அறிய வேண்டும் என்றால், தெற்கே தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலையும், வடக்கே சோமநாதர் கோவிலையும் தான் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- Kumbakonam,இந்தியா
10-மார்ச்-201313:24:27 IST Report Abuse
 வாஸ்துவால் வீடு கட்டுபவர்களை விட அதை வியாபாரமாக்குபவர்கள், போலி வாஸ்து நிபுணர்கள், தொலைகே காட்சியில் வாஸ்து சொல்பவர் அனைவருமே மக்களின் அறியாமையை வியாபாரமாக்குகின்றனர்... உழைப்பே உயர்வு தரும் எனும் உன்னதத்தை உணராத வரை, ஏமாற்றுபவர்கள் தொலை தொடர்பு சாதனங்களை துணை கொண்டு ..மாக்களை ஏமாற்றுகின்றனர்... வாஸ்து, ராசிக்கல், எண்கணிதம் எல்லாமே உழைப்பை கெடுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராதவைகள் ... Jeiyaraamenn kemmbakuuonam
Rate this:
Cancel
chakrapani ramachandran - chennai,இந்தியா
10-மார்ச்-201312:16:10 IST Report Abuse
chakrapani ramachandran "மனை வாங்கும் போதும், வீடு கட்டும் போதும், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவைகளை அனுசரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மனையும், வீடும் சுபிட்சமாக இருக்கும். சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்." அதனால்தான் இந்தியா சிறந்து விளங்குகிறது . அமெரிக்கா பிற்போக்கான நிலையில் இருக்கிறது :)
Rate this:
Cancel
S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
10-மார்ச்-201310:37:40 IST Report Abuse
S.Ravi வாஸ்து படியாக பந்தல் போடததனால் யாகம் பூர்த்தியாகவில்லை, ஆனால் இந்த பந்தலுக்கே மற்ற சர்பங்கள் விழுந்து மாண்டன என்றால் வாஸ்து நல்லது செய்கிறதா இல்லை கெடுதல் செய்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X