"நமசிவாய' என்று சொல்வோமே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

மார்ச் 10 - சிவராத்திரி

"நமசிவாய' அல்லது "சிவாயநம' என்ற மந்திரங்கள் சிவனுக்குரியவை. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, ஐந்தெழுத்து உடையவை. இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
நமசிவாய என்று சொன்னால், வாழும் காலத்தில் செல்வவளம், தேவையான வசதிகள் பெறலாம். சிவாயநம என்று ஓதினால், வாழ்வுக்கு பின், மோட்சத்தை பெறலாம். வெறுமனே, சிவாயநம என்று சொன்னால் போதுமா அல்லது அத்துடன் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?
சிவபுராணத்தில் ஒரு கதை உண்டு.
சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அவருக்கு, நெய், பால் அபிஷேகம் மிகவும் பிடித்தமானது. பூர்வத்தில் வாழ்ந்த பூஷ்ணன் என்பவனும், அவனது மனைவி சுமதியும், தங்கள் இறுதிக் காலத்தை முடித்து, தேவலோகத்தில் வாழும் சிறப்பைப் பெற்றனர். சொர்க்கத்தில் இருந்த தேவர்களை விட, இவர்கள் அதிக பிரகாசமான முகத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் இருந்தனர். இதைக் கண்ட தேவலோகப் பெண் ஒருத்தி, சுமதியிடம், "நீயும், உன் கணவனும் எங்களை விட அதிக மகிழ்வுடனும், பிரகாசமாகவும் இருக்கக் காரணம் என்ன?' என்று கேட்டாள்.
அதற்கு பதிலளித்த சுமதி, "இதொன்றும் பிரமாதமில்லை. என் கணவர், அரச பதவியில் இருந்தவர். எங்களுக்கு இருந்த வசதிக்கேற்ப, சிவபெருமானுக்கு உகந்த யாகங்களைச் செய்தோம். அது மட்டுமில்லாமல், சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகமும், பால் அபிஷேகமும் தவறாமல் செய்வோம். இந்த அபிஷேகத்தின் விளைவாக, நாங்கள் இத்தகைய நிலையை பெற்றோம்...' என்றாள். சிவராத்திரி விரதம் மிகவும் எளிமையானது.
காலையில் நீராடிவிட்டு, நமசிவாய அல்லது சிவாயநம என ஓதியபடியே இருக்க வேண்டும்; சாப்பிடக் கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் சிவாலயத்திற்கு, வில்வ இலை கொண்டு செல்ல வேண்டும். இரவு கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். முதல் கால பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் கால பூஜைக்கு வெண்ணெய், நெய், நான்காம் கால பூஜைக்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோவிலில் ஒப்படைக்க வேண்டும். அன்றிரவில் விழித்திருக்க வேண்டும். அப்போது, சிவனை குறித்த ஸ்தோத்திரங்கள், தேவார, திருவாசகப் பாடல்களைப் பாட வேண்டும். மறுநாள் காலையில், அவரவர் தகுதிக்கேற்ப, அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பின் சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவபெருமான் உருவம், அருவுருவம், அருவம், எனும் மூவகை நிலைகளில் காட்சி தருகிறார். கருவறையில் பெரும்பாலும், அருவத் திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவுருவத் திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) திருப்பெருந்துறை போன்ற சில கோவில்களில் அருள்புரிகிறார். சோமாஸ்கந்தர், தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர், பைரவர் உள்ளிட்ட சில வடிவங்கள் உருவமுடையவை.
நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் சிவபெரு மானை உருவ வடிவில் வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணா மூர்த்தியாக வழிபடுபவர்கள், மன அமைதியும், ஞானமும் கைவரப் பெறுவர். வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால், முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கி, தைரியம் உண்டாகும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால், மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க, முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை தரிசித்தால், வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். சிவராத்திரியன்று, குலதெய்வ வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு. அவரவர் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். நன்மை நடக்கும்.
***

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai  ( Posted via: Dinamalar Android App )
12-மார்ச்-201311:21:16 IST Report Abuse
Raja நமசிவாய நல்ல கட்டுரை நன்றி
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - cudolur,இந்தியா
11-மார்ச்-201312:53:58 IST Report Abuse
SENTHIL KUMAR ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Rate this:
Share this comment
Cancel
dhasaratha - Chennai,இந்தியா
10-மார்ச்-201306:12:07 IST Report Abuse
dhasaratha ஓம் நமச்சிவாய அரும்மையான கட்டுரை வெளியிட்ட தினமலருக்கு என்றும் வாழ்த்துக்கள். வாழ்க தினமலர், வளர்க நாளும் தசரதன், வளசரவாக்கம், சென்னை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X