"ஹைடெக்' மாட்டுப்பண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

மெல்லிசை கேட்டு, மெல்ல எழுகின்றன பசுக்கள். கம்ப்யூட்டர் கட்டளைப்படி, புற்களை தின்று, தண்ணீர் குடித்து, "ஏசி'யில் ஓய்வெடுத்து, பால் கறக்கின்றன. தினமும் பசுவின் எடையையும் பார்த்து, கறந்த பாலையும் கணக்கு பார்க்கிறது கம்ப்யூட்டர். இப்படி ஒரு, "ஹைடெக்' மாட்டுப்பண்ணை கேரளாவில் உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக, முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, அரசு மாட்டுப்பண்ணை, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் குளத்துபுழாவில் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, பரிட்சயமான ஊர் குளத்துபுழா. இங்கு தர்மசாஸ்தா கோவில் உள்ளது.
நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் இந்த பண்ணையில், பசுக்களுக்காக, 50 ஏக்கர் நிலத்தில் புற்கள் வளர்க்கப் படுகின்றன. முப்பது ஏக்கர் பரப்பளவில், ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன சுத்தமான காற்றை தரும் மரங்கள். மீதி, 20 ஏக்கரில், பண்ணைக்கான கட்டடம் உள்ளது. இதில், பிரமாண்ட, "ஷெட்' அமைக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கான, "ஷெட்டில்' ரெஸ்ட் ஏரியா, டைனிங் ஏரியா, மில்க்கிங் ஏரியா என, மூன்று பகுதிகள். இருநூறு பசுக்கள் வளர்க்க வசதியான இடத்தில், இப்போது, 180 பசுக்கள் உள்ளன.
ஒவ்வொரு பசுவிற்கும் ஒரு எண், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்மல் போல, காதில் ஒரு, "சிப்' மாட்டப்பட்டுள்ளது. கழுத்தில் நீல நிற, "டிரான்ஸ்பாண்டர்' கட்டப் பட்டுள்ளது. நானோ டெக்னாலஜிபடி, பசுவின் ஒவ்வொரு அசைவும், "சென்சர்' மூலம் கன்ட்ரோல் ரூம் கம்ப்யூட்டரில் பதிவாகும். ஒவ்வொரு பசுவிற்கும் ஒரு, "பே' ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கேயே ரெஸ்ட் எடுக்கின்றன. எப்போது சாப்பிடுவது, பால் கறப்பது என்பதை கம்ப்யூட்டர் முடிவு செய்து, கட்டளை பிறப்பிக்கும். அதற்கு தகுந்தவாறு, அப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பு, "லாக்' ரிலீஸ் ஆகும் போது, பசுக்கள் வெளியே வரும்.
"டைனிங் ஏரியா' வரும் பசுக்களின் முன்பாக, இயந்திரம் மூலம் கொட்டப்படும் சத்துணவை (மரவள்ளி கிழங்கு+புல்+ தீவனம், "மிக்ஸ்' செய்யப்பட்டது) சாப்பிடுகின்றன. குறிப்பிட்ட நேரமாகும் போது, வரிசையாக, பால் கறக்கும், "மில்க்கிங் ஏரியா'வுக்கு வருகின்றன. "கவ் கேட்' என்ற இயந்திரம் மூலம், ஒரே நேரத்தில், 12 பசுக்களுக்கு பால் கறக்கப்படுகிறது. ஒவ்வொரு பசுவும் தந்த பாலின் அளவு, பசுவின் எடை போன்றவை கம்ப்யூட்டரில் பதிவாகும். பால் கறந்த பின், பள்ளி "அசெம்பிளி'க்கு, வரிசையாக செல்லும் மாணவர்களை போல, வெளியே வருகின்றன பசுக்கள். இவ்வாறு வரும் போது, தனித்தனியாக, "சென்சர்' செய்ய கதவு உள்ளது. பால் அளவு குறைவு அல்லது நோய் அறிகுறி போன்ற அசாதாரண சூழ்நிலை இருந்தால், அதை கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கும். அப்போது குறிப்பிட்ட பசு, செல்ல வேண்டிய, "கேட்' திறக்காது. அது, தனியாக பராமரிப்பு பகுதிக்கு அனுப்பப்படும்.
பசுக்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்த, "ஷெட்' எங்கும் மெல்லிசை கேட்கிறது. ஓய்வெடுக்கும் பகுதியில், வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியசை விட அதிகமானால், குளிர்விக்கும் இயந்திரம் மூலம், செயற்கையாக பனிமழை பெய்விக்கப்படுகிறது. உடலை மசாஜ் செய்ய, ஈரமாக்கி துடைக்க, ஆங்காங்கே, "மெகா ஆட்டோமேட்டிக் பிரஷ்கள்' வைக்கப்பட்டுள்ளன. இப்படி ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன பசுக்கள்; அதுவும் அரசுப் பண்ணையில் என்பது அதிசயம் தானே!
பசுவின் சாணமும், இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. இவை, ஜெர்மன் தொழில் நுட்ப இயந்திரம் மூலம், தண்ணீருடன் கலக்கப்பட்டு, புல்வெளிக்கு பாய்ச்சப்படுகின்றன. அயர்லாந்து நாட்டு தொழில்நுட்பத்தில், கம்ப்யூட்டர்கள் இயக்கப்படுகின்றன. ஆறு அதிகாரிகள் ஜெர்மனி சென்று பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக இவ்வளவு பசுக்களையும் பராமரிக்க, 50 தொழிலாளர் கள் வேண்டும். ஆனால் இயந்திர மயமாக்கியதால், எட்டு பேர் தான் பணியில் உள்ளனர். "இயந்திர புரட்சி' நடத்தி, பண்ணை துவக்கப்பட்டது, தொழிலாளர்களுக்காக போராடும், கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய ஆட்சியில் என்பது ஆச்சரிய தகவல்! துவங்கிய ஒன்றரை ஆண்டுகளில், கேரளாவில், "ஹைடெக்' வெண்மை புரட்சியை ஏற்படுத்தி விட்டது இந்த பண்ணை.
பார்வையாளர்கள் அனுமதி உண்டு!
*பண்ணையை பார்க்க ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம். பசுக்கள் அருகே சென்று நேசம் காட்டி, தொழில்நுட்ப விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கட்டணம், 500 ரூபாய். விவசாய குழுக்களுக்கு பயிற்சி, பண்ணைகள் அமைக்க, தனியாருக்கு ஆலோசனை வழங்கு கின்றனர். தொடர்புக்கு: 0475-2317547, பொறுப்பாளர் கார்த்திகேயன் : 094460 04285.
***

ஜி.வி. ரமேஷ்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
10-மார்ச்-201310:51:41 IST Report Abuse
S.Ravi நான் நியூ சிலாந்தில் அனுபவப்பட்டதை எழுதுகிறேன் . இந்தியாவை விட வெகு சிறிய நாடு. மொத்த ஜனத்தொகை 43 லஷம் தான். இங்கு ஒரு மாட்டு பண்ணையில் குறைந்தது 500 அல்லது 600 மாடுகள் உண்டு. மொத்தம் வேலை பார்பவர்கள் 3 இல்லை 4 பேர். ஒரே சமயத்தில் 50 அல்லது 60 மாடுகள் பால்கறக்கும், சுற்றும் தளம் உண்டு (rotating platform) காலையிலும் மாலையிலும் மாடுகள் தடைவைக்கு 25 லிட்டர் பால் கொடுக்கும். இந்தியாவில் இதுபோல் வந்திருப்பது மகிழ்ச்சி அனால் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X