கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:00

கேள்வி: பிராட்பேண்ட் இணைப்பிற்கு வயர்டு கனெக்ஷன் வைத்திருந்த நான், வை-பி இணைப்பிற்கு மாறியுள்ளேன். இதில் பிரச்னை வருகையில், நண்பர்களிடம் உதவி கேட்டால், ஐ.பி. முகவரி என்ன காட்டுகிறது என்று கேட்கிறார்கள். இதனை எப்படி தெரிந்து கொள்வது?
எஸ். மாலதி, சென்னை.
பதில்:
எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் கீ அழுத்தி, அதில் run கட்டம் தேர்ந்தெடுக்கவும். இக்கட்டத்தில், cmd என டைப் செய்து என்டர் தட்டவும். இனி கருப்பாக ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் கட்டளைப் புள்ளி (command prompt) ஒன்று துடித்துக் கொண்டிருக்கும். இங்கு ipconfig என டைப் செய்து என்டர் தட்டினால், உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். இதிலிருந்து நெட்வொர்க்கின் ஐ.பி. முகவரி தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: என்னிடம் பழைய எக்ஸ்பி சிஸ்டத்தில் சர்வீஸ் பேக் 3 உடன் இயங்கும் கம்ப்யூட்டர் உள்ளது. அண்மையில் என் அமெரிக்க நண்பர் புதிய மைக்ரோசாப்ட் வயர்லெஸ் கீ போர்டு ஒன்றையும், மவுஸ் ஒன்றையும் பரிசாக அனுப்பி உள்ளார். இதனை நான் என் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்த முடியுமா? கம்ப்யூட்டருக்கு பிரச்னை ஏற்படுமா? அல்லது கீ போர்டு வீணாகி விடுமா?
ஆர்,ஸ்வாமிநாதன், திருப்பூர்.
பதில்:
நீங்கள் இயக்கும் கம்ப்யூட்டர் குறித்துத் தெரிந்துதானே உங்கள் நண்பர் அனுப்பி உள்ளார். உங்களின் கடிதத்திலிருந்து புதிய கீ போர்டு, கீகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்ட கீ போர்டு என அறிந்து கொண்டேன். மிக அருமையான கீ போர்டு அது. இவற்றுடன் சிறியதாக பென் ட்ரைவ் போல ஒரு சாதனமும் தரப்பட்டிருக்கும். அதனை யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்து வைத்துப் பின்னர் கீ போர்டையும், மவுஸை யும் எந்த இணைப்பும் இன்றி பயன்படுத்தவும். விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் எந்தக் கம்ப்யூட்டரும் இவற்றை ஏற்றுக் கொள்ளும். எந்தப் பிரச்னையும் எந்த சாதனத்திற்கும் ஏற்படாது.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில், நெல் உற்பத்தி குறித்த ஒர்க்ஷீட் ஒன்றைத் தயார் செய்தேன். இதில் சில முடிவுகளின் மதிப்பினை இரண்டு தசமஸ்தானத்திற்கு மாற்ற என்ன பார்முலா கொடுக்க வேண்டும். Round என்ற பார்முலா இதற்கு ஒத்துவருமா?
டி.சூர்யகலா, கோயம்புத்தூர்.
பதில்:
Round என்ற கட்டளையை இதற்குப் பயன்படுத்தலாம். ஒரு செல்லில் கிடைக்கும் மதிப்பினை இது நாம் பார்முலாவில் கொடுக்கும் அளவிற்கேற்ப வரையறை செய்திடும். இந்த பார்முலாவின் பார்மட் =ROUND(A1,2). இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும்.

கேள்வி: புதிய லேப்டாப் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். விண் 7 இயங்கு கிறது. இதில் உள்ள பேட்டரி சீக்கிரம் தன் திறனை இழப்பது போல் உள்ளது. இதன் செயல்பாடு சரியா என எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
டி.ரஞ்சித் குமார், சென்னை.
பதில்:
லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப்பதில்லை என்பது வியப்புக்குரியது. இந்த வசதியினைப் பயன் படுத்தி சோதனையை மேற்கொண்டால், லேப்டாப் கம்ப்யூட்டரில் மின்சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். எப்படி இந்த மின்சக்தி செலவினை ட்யூன் செய்திடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்த முதலில் Windows > Search Box எனச் செல்லவும். பின்னர் சர்ச் பாக்ஸில் “cmd” என டைப் செய்திடவும். இங்கு உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து powercfg energy output \FilePath\Energy_Report.html என டைப் செய்திடவும். இதில் FilePath என்பது, நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட இருக்கும் எச்.டி.எம். எல். ரிப்போர்ட் எங்கு சேவ் செய்யப்பட உள்ளது என்பதனைக் குறிப்பிட வேண்டிய இடமாகும். இந்த சோதனை நடத்தப்படுகையில், வேறு எந்த புரோகிராமும் இயக்கத்தில் இருக்கக் கூடாது. கிடைக்கும் ரிப்போர்ட்டில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் எப்படி, பேட்டரியின் மின்சக்தியினைச் செலவளிக் கிறது என்பதனையும், வேறு சில பரிந்துரைகளையும் தரும்.

கேள்வி: வேர்ட் 2007 புரோகிராமில் டாகுமெண்ட்களுக்கு வாட்டர் மார்க் அமைப்பது குறித்து விளக்கம் தரவும். இந்த தொகுப்பில் எப்படி அமைப்பது என்று தெரியவில்லை.
சி.ஆர். செல்வ சேகரன், சிவகாசி.
பதில்:
மிக மிக எளிது. பலர் இது குறித்து தங்கள் கடிதங்களில் எழுதி உள்ளனர். வேர்ட் 2007ல், ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் Watermark பட்டனை கிளிக் செய்திடவும். இதில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். நீங்களாகத் தயார் செய்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படம் என ஏதேனும் ஒன்றை வாட்டர் மார்க்காக அமைக்க வேண்டும் எனில், Custom Watermark என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எந்த வகை வாட்டர்மார்க் என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் படத்திற்கான பைல் மற்றும் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்கவும். பின்னர் இது எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண Apply என்பதில் கிளிக் செய்து பிரிவியூ தோற்றத்தினைப் பார்க்கவும். உங்களுக்குத் திருப்தியாக இருந்தால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் கேட்காத ஒன்றும் சொல்கிறேன். நீங்கள் தயாரித்த வாட்டர்மார்க் பின் நாளில் தேவை இல்லை எனில், அதனை நீக்க, Page Layout சென்று, Watermark பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Remove Watermark என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் ஜிமெயில் புரோகிராமினை லிஸ்ட் செய்து, அதனை என் டிபால்ட் இமெயில் புரோகிராமாக அமைக்க முடியுமா?
கா.அஹமது,காரைக்கால்.
பதில்:
இதற்கு "முடியும்' மற்றும் "முடியாது' என இருவகை பதிலைத் தரலாம். ஜிமெயில் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராமாக இல்லாததால், உங்கள் விண்டோஸ் சிஸ்டத்தில், அதனை லிஸ்ட்டில் உள்ள ஆப்ஷனாக அமைக்க முடியாது. இருந்தாலும், ஜிமெயில் நோட்டிபையர் (Gmail Notifier) என்பதைத் தரவிறக்கம் செய்திடலாம். இதற்கான இணைய தள முகவரி: http://toolbar. google.com/gmailhelper/notifier_windows. html.
உங்கள் சிஸ்டம் ட்ரேயில் உள்ள நோட்டிபையர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Use Gmail for internet mailto: links என்பதற்கு அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். இனி, ஏதேனும் இமெயில் முகவரிக்கான ஹைப்பர் லிங்க் கிடைத்து அதில் கிளிக் செய்தால், ஜிமெயில் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 உரிமத்துடன் கூடிய லேப்டாப் ஒன்றை வாங்கியுள்ளேன். இது ஸ்லீப் மோடுக்கு மாற மறுக்கிறது. ஸ்லீப் என்பதில் கிளிக் செய்தாலும், சில நொடிகளில் மீண்டும் வந்துவிடுகிறது. பவர் ஆப்ஷன்ஸ் பிரிவிலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பிரச்னைக்குத் தீர்வு என்ன?
ஆர். சுந்தர் மோகன், திருப்பூர்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு புரோகிராம், கம்ப்யூட்டரை அதன் ஸ்லீப் மோடில் இருந்து எழ வைக்கிறது. இதுதான் காரணமாக இருக்கும். ஸ்டார்ட் மெனு சென்று, Control Panel செல்லவும். இங்கு Hardware and Sound என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Change when the computer sleeps என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் Change advanced power settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பிரிவில், பாதிக்கும் மேலாகச் சென்றால் Sleep என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் ஒரு ப்ளஸ் அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால், இன்னும் சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இங்கு Allow wake timers என்று இருப்பதனை அடுத்துள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இங்கு Disable wake timers என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னரும் உங்கள் பிரச்னை சரியாகவில்லை என்றால், கீழே கொடுத்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும். ஸ்டார்ட் மெனு சென்று, cmd என டைப் செய்து, கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியுடன் கூடிய கருப்பு கட்டம் கிடைக்கும். இதில் powercfg lastwake என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது Wake History Count என்ற தலைப்பில் நிறைய தகவல்கள் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரைத் தூங்க விடாமல் வைத்திருப்பவை எவை என இந்த பட்டியல் காட்டும். இதைக் கவனித்து, அந்த புரோகிராமினை ஸ்டார்ட் அப் பிரிவில் முடக்கி வைக்கவும். இனி, உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லீப் மோடுக்குச் சென்று தூங்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X