பழி வாங்கிய ஆவி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
00:00

புராதன எகிப்தியர்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, என்னவென்றால் இறந்த மன்னர்களைப் புதைத்தால், மன்னரின் ஆவி அந்த உடலிலேயே இருக்கும் அல்லது அடக்கம் செய்த பிறகு அவரது ஆவி, அதற்குள் வந்து புகுந்து கொண்டு விடும் என்பது. ஆனால், இறந்த உடல் சிதையாமலிருக்க வேண்டும். சவக்குழிக்கு எவ்வித ஊறும் விளைந்திருக்ககூடாது. அப்போதுதான் ஆவி அதில் தங்கி இருக்கும். இக்காரணத்தினால்தான், பண்டைய உலக அதிசயங்கள் ஏழில் ஒன்றான பிரமிட்களை உருவாக்கினர் எகிப்தியர்கள். இறந்த மன்னர்களின் உடல்களைக் கெடாமல் மருந்திட்டுப் பாடம் பண்ணி, யாரும் அணுக முடியாதபடி, தொல்லை தராதபடி பிரமிட் (கல்லறை)களை உருவாக்கி, அதில் கிடத்தினர். பிறகு மலைச் சரிவுகளைக் குடைந்து பெட்டகங்களை உருவாக்கி, அதற்குள் ஏராளமான பொக்கிஷங்களோடு மன்னர்களின் உடல்களைப் பத்திரப்படுத்தினர். பிறர் கவனத்தைக் கவர முடியாதபடி, எத்தனையோ சாமர்த்தியமாக, இப்பெட்டகங்கள் இருக்குமிடத்தை ஒளித்தும், மறைத்தும் உருவாக்கி இருந்தும் கூட, திருடர்களின் திறமைக்கு முன்னால் அவை செயலற்றுப் போயின. அது பெரிய கதை. இங்கு தேவையில்லை. மன்னர்களின் உடல்களை கொண்ட பெட்டகங்கள் உள்ள பகுதியை அரசர்களின், "பள்ளத்தாக்கு' என்று அழைத்தனர்.
1922 வரை இப்பள்ளத்தாக்கிலிருந்த கல்லறைகளில் ஒன்று கூடத் திருடர்களின் கைவரிசைக்குத் தப்பி இருக்க வில்லை. எல்லாக் கல்லறைப் பெட்டகங்களுமே உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. புதை பொருள் ஆராய்ச்சியாளரான, ஹோவார்டு கார்ட்டர் என்ற பிரிட்டிஷ்காரர், 1922ல் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வழியில் ஒரு தொழிலாளியின் குடிசை தன் காரியத்துக்கு இடைஞ்சலாக இருக்கவே, அதை அகற்றுமாறு உத்தர விட்டார். குடிசை அகற்றப்பட்ட போது, அதன் கட்டடத்துக்குக் கீழே, சில படிகள் போவதைக் கண்டார்.
கார்ட்டரும், அவரது பணியாளரும் ஆச்சரியத்தோடு இடிபாடுகளைப் பரவலாக அகற்றிப் பார்த்தபோது, அந்தப் படிகள் கீழே ஒரு சுவரில் போய் முடிந்தன. அந்தச் சுவரில் புராதன எகிப்திய அரசு முத்திரை பதிக்கப் பட்டிருந்தது. அது கல்லறைகளுக்கு வைக்கப்படும் சீல் (முத்திரை). கார்ட்டருக்கு குஷி. திருடர்கள் கைபடாத ஒரு கல்லறையைக் கண்டுபிடித்து விட்டோம் என்று.
சீல் அகற்றப்பட்டது. சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து போக வழி உண்டாக்கினர். அந்தப் பாதையெல்லாம் கல்லும், மணலும், இடிபாடுகளுமாக இருந்தன. அவற்றைக் கடந்து போன போது, முடிவில் மற்றொரு சுவர். கார்ட்டர் கவலையும், களைப்பும் அடைந்தார். இரண்டாவது சுவரிலும் வழி உண்டாக்கி, உள்ளே நுழைந்த போது அவர் மூச்சே நின்று விட்டது. விழிகளும், வாயும் விரிந்தன. பரந்து இருந்த ஓர் அறை நிறையப் பொக்கிஷங்கள் நிறைந்திருந்தன. எல்லாம் மன்னர் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், கட்டில்கள், அரியணை, தேர் என அவ்வளவும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டு, நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு அவற்றின் ஒளியும், அழகும் கண்ணைப் பறித்தன.
ஒரு மனிதனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ இது போதாதா? ஆனால், கார்ட்டர் புதையல் தேடி வந்தவரல்ல... அவர் ஒரு புதை பொருள் ஆராய்ச்சியாளர். இத்தனை செல்வக் குவியல்களையும் அவர் லட்சியமே செய்யவில்லை. இவற்றுக்கு உரியவரான மன்னரின் கல்லறை எங்கே என்ற கவலையும், அதைத் தேடுவதில் கவனமும் கொண்டார்.
முதலில் அந்தப் பொக்கிஷங்களையெல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். தொடர்ந்து ஆராய இடவசதி வேண்டுமே. புராதன எகிப்திய மன்னரின் பொக்கிஷப் பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பரவியதுமே, வல்லுநர்களும், பழம் பொருள் ஆய்வாளர்களும் வந்து குவிந்தனர். புராதனப் புதையல் பொருள்களை அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்க, கார்ட்டர் அந்தப் பொக்கிஷ அறையின் சுவரை இடித்து முன்னேறினார். மற்றொரு அறைக்கு அழைத்துப் போயிற்று வழி. அங்கும் ஏராளமான பொக்கிஷங்கள். முதல் அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் இரண்டு விசித்திரமான மரச் சிற்பங்கள் இருந்தன. அவை எதையோ காவல் காத்து நிற்பது போலத் தோன்றியது கார்ட்டருக்கு. உடனே, அந்த இரு சிலைகளுக்கும் நடுவே சுவரில் துளையிடச் செய்து, அதன் வழியே மறு பக்கத்தில் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தார்.
வியப்பான வியப்பு! தங்கச் சுவர் ஒன்று தெரிந்தது. ஆனால், உண்மையில் அது சுவரல்ல. தங்கத் தகடு கொண்டு மூடப்பட்ட பெரிய பெட்டி அது. அந்தப் பெரிய பெட்டிக்குள், ஒன்றுக்கு ஒன்றாக அதே போலத் தங்கத் தகடு போர்த்திய மூன்று பெட்டிகள் இருந்தன. நான்காவது தங்கப் பெட்டியின் உள்ளே பளிங்குக் கல்லாலான சவப் பெட்டி ஒன்று இருந்தது. பல நூறு பவுண்டுகள் கனமுள்ள பெட்டி அது. அதன் மூடி, வழுவழுப்பாக்கப்பட்ட உறுதியான கல்லினால் ஆனது.
மிகுந்த பிரயாசையின் பேரில், சவப் பெட்டியின் கருங்கல் மூடியை அகற்றினார் கார்ட்டர். அதன் உள்ளே மேலும், மூன்று சவப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்றாக ஒவ்வொன்றும் தூங்கும் அரசன். அல்லது கடவுளைப் போன்ற வடிவத்தில், அவை யெல்லாம் தங்கத்தினாலும், ரத்தினத்தி னாலும் அலங்கரிப்பட்டிருந்தன.
சவப் பெட்டிகளிலுள்ள முத்திரை, வேறு பல தடயங்களிலிருந்து, அந்தக் கல்லறை 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தூதகமன் என்ற மன்னனுடைய கல்லறை என்ற முடிவுக்கு வந்தார் கார்ட்டர். கடைசி சவப்பெட்டியிலிருந்த சுருங்கிச் சிறுத்த சின்னஞ்சிறு உடல் தூதகமனுடையதுதான். அவன் இறந்த போது, அவனுக்கு வயது 18 என்பதைத் தவிர, அவனைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
அவனது ஆவி செய்த வேலை?
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X