அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கலாபேக்ஸ் தீவு!

இயற்கையைப் பற்றி ஆயிரம், ஆயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால், இயற்கை கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? கலாபேகஸ் தீவைப்போல இருக்கும் என்கின்றனர் அதைக் கண்டவர்கள்.
ஆம்! இயற்கை என்னும் பெருங்கவிஞன் எழுதிய எழில் மிகுந்த கவிதைதான் கலாபேகஸ் தீவுகள். இது கிழக்கு பிசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இவை தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமானவை. தென் அமெரிக்க கண்டத்திலிருந்து வெகு தொலைவில் சுமார் 1000 கிலோ மீட்டர் தள்ளி கடலில் அமைந்துள்ளதால் பல்வேறு தனித்துவங்களை இவை பெற்றுள்ளன. இத்தீவுக் கூட்டம் 19 பெரிய தீவுகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட பாறைத்திட்டுகளையும் கொண்டு 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் கடற்பரப்பில் பரவிக் கிடக்கிறது. இவற்றில், "இஸபெல்லா' என்னும் தீவுதான் பெரியது. கலாபேகஸின் தனித்துவமான சுற்றுச் சூழலும், தாவர மற்றும் விலங்கு வகைகளும், இத்தீவுக் கூட்டத்தை பல்லுயிரியத்தின் பயிலரங்க மாக்கி பரிணாமக் கோட்பாட்டின் சோதனைக் கூடமாக்கி உள்ளன. இதனால் டார்வின் காலம் தொட்டு இன்றுவரை இது இயற்கை விஞ்ஞானிகளின் ஆய்வகமாக போற்றப்படுகிறது.
டார்வின் 1835ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏMகு பீகிள் என்ற கப்பல் மூலம் இத்தீவினை அடைந்தார். இளம் ஆய்வாளரான அவருக்கு அங்குள்ள விலங்குகள், பறவைகளில் கண்ட வேறுபாடுகள் பரிணாமக் கோட்பாட்டை உருவாக்க உதவின. டார்வினை பெரிதும் சிந்திக்க வைத்த கலாபேகஸ் பின்ச் குருவி இன்று அவர் பெயரால், டார்வின் பின்ச் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பறவைகள், ஊர்வன முதலியன மனிதர்களை கண்டு அஞ்சாமல் மனிதர்களும் நம்மைப்போல் ஒரு ஜீவராசிதான் என்பதுபோல் இயல்பாக நடந்துகொள்கின்றன. இத்தீவுகளில் இஸபெல்லா தீவு மிகப்பெரியது என்று பார்த்தோம். கலாபேகஸ் பேராமைகள் இத்தீவில்தான் அதிகம் காணப்படுகின்றன.
பாறைகள் நிறைந்த இதன் கடற்கரையில் நீலநிற பாதங்கள் கொண்ட பூமி பறவைகள், பென்குயின்கள், கடல் உடும்புகள் ஆகிய வற்றை ஏராளமாக காணலாம். கலாபேகஸ் தீவுகளில் "பால்ட்ராதீவு' தான் மனித குடியேற்றத்தால் தன் இயற்கை அழகை அதிகமாக இழந்துவிட்ட தீவு ஆகும். இரண்டாம் உலகப்போரின் போது இத்தீவு அமெரிக்க கப்பற்படைத் தளமாக பயன்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டது. ஆனாலும், இன்றும் இத்தீவு கலாபேகஸ் கடல் சிங்கங் களின் தாய் வீடாக விளங்குகிறது. கலாபேகஸ் தீவுகளில் மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தீவு "பார்த்தலோமி தீவு' ஆகும். எரிமலைக்குழம்பின் இறுகிய படிவுகளும், எரிமலைக் கூம்புகளும் நிறைந்த இப்பிரதேசம் புவியியல் பாடத்தின் திறந்த புத்தகமாக கருதப்படுகிறது. கடல் சிங்கங்களும், பென்குயின்களும் நிறைந்த இதன் கடற்கரைகள் அழகும், கம்பீரமும் நிறைந்தவை. இத்தீவில் அமைந்துள்ள கோபுரப் பாறையை புகைப்படம் எடுக்காமல் யாரும் திரும்புவது இல்லை. கலாபேகஸ் தீவு கூட்டத்தில் "பெர்ணான்டினா தீவு' மிகவும் சிறியது. இங்குள்ள எரிமலை இன்னும் குமுறிக் கொண்டுதான் உள்ளது. கருப்புநிற எரிமலைப் பாறைகள் மீது ஊர்ந்து செல்லும் கடல் உடும்புகள், பறக்க இயலாத கர்மராண்ட் பறவைகள், பென்குயின் பறவைகள், பெலிக்கன் பறவைகள் ஆகியவை நிறைந்த இத்தீவில் கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கிறது. "எஸ்டினோலாதீவு' ஆல்பெட்ராஸ், மிமிக்கிரி பறவைகள் போன்ற நீர்பறவைகள் நிறைந்த ஒன்று. இதைப் போலவே மற்ற தீவுகளும் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டவைதான். கலாபேகஸ் தீவுகளின் தனித்துவத்தையும், அழகையும் பாதுகாப்பது குறித்த முயற்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகின்றன.
சார்லஸ் டார்வினின் ""உயிர்களின் தோற்றம்'' நூலின் நூற்றாண்டான 1959ல் இத்தீவுக் கூட்டத்தின் 97.5% நிலப்பகுதி தேசியப் பூங்காவாக ஈக்வடார் அரசால் அறிவிக்கப் பட்டது. யுனெஸ்கோ "ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய பகுதிகள்' என்ற பட்டியலில் இத்தீவுக்கூட்டத்தை இணைத்திருக்கிறது. இத்தீவுகளில் மட்டுமே காணப்படும் தனித்துவமான "என்டமிக்' உயிரினங்களான கலாபேகஸ் பேராமை, தரை உடும்பு, கடல் உடும்பு, பறக்காத கர்மராண்ட், கலாபேகஸ் பென்குயின், டார்வின், பின்ச் குருவிகள் முதலியன உலகின் சொத்தாகவே கருதி பாதுகாக்கப்பட வேண்டியவை. கலாபேகஸ் தீவுக்கூட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்தே இருந்து வந்துள்ளது.
"புதிய ஏழு இயற்கை அதிசயங்கள் அமைப்பு' என்ற ஓர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு உலகில் உள்ள ஏழு இயற்கை அதிசயங்களை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. அப்பட்டியலில் கலாபேகஸ் தீவுகள் சுலபமாக இடம் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஸ்மார்ட் அக்கறை'!


ஸ்மார்ட் போன் எனப்படும் அதிநவீன செல் போன்கள் இன்று அதிகம் பேர் கைகளில் காணப்படுகின்றன. அசாதாரணமான வசதிகளைக் கொண்ட இந்த செல்போன்களை கவனமாகப் பாதுகாப்பதும் முக்கியம்.
அதற்கான சில டிப்ஸ்...
* வாரம் ஒருமுறையாவது உங்கள் ஸ்மார்ட் போன் முற்றிலுமாக, "சார்ஜ்' இழக்கும் வரை அப்படியே விடுங்கள். அதன்பிறகு மறுபடி சார்ஜ் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் செல்போன் பேட்டரி நீண்டகாலம் நீடித்து உழைக்கும்.
* ஸ்மார்ட் போனுக்கு உரிய ஒரிஜினல் சார்ஜரையே எப்போதும் பயன் படுத்துங்கள். தற்போது வெளியிடங்களில் ஸ்மார்ட் போன்களுக்கான துணைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரிஜினல் சார்ஜர் தான் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு ஏற்றவாறு மிகச் சரியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். பிற சார்ஜர்களை பயன்படுத்தும்போது அவற்றின் வழியாக வரும் மின்சார அளவு வோல்டேஜ் மாறுபடும்.
* போனில் தண்ணீர் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் எதுவும் சிந்திவிட்டால் (அ) ஈரப்பதமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், போனை உடனடியாக அணைத்து, சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் நிரம்பிய பை (அ) அரிசியில் வையுங்கள். அது ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.
* உத்தரவாதமற்ற வழிகளில் வரும் அப்ளிக் கேஷன்களை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவ வேண்டாம். இலவச கேம்களை அனுப்புவதாக உங்கள் நண்பர்கள் கூறுவார்கள். உள்ளூர் கடைக்காரர் சில பாடல்களை உங்களுக்கு அளிப்பதாகக் கூறுவார். ஆனால், அவற்றால் "வைரஸ்' தாக்குதல் அபாயம் மட்டுமின்றி, உங்கள் போனில் இருந்து டேட்டாக்கள் திருடப்படும் வாய்ப்பும் அதிகம்.
*உங்கள் ஸ்மார்ட் போனுக்கு எப்போதும் ஒரு பேக்கப் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை போனை பயன்படுத்துகிறீர் என்பதைப் பொறுத்து, "சிங்க் டூல்' களைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையோ தினசரியோ, வாரம் ஒரு முறையோ, "பேக்கப்' செய்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X