கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மார்
2013
00:00

கேள்வி: கேப்சா (CAPTCHA) டெஸ்ட் என்று சொல்லப்படுவது எது? எதற்காக இந்த பெயர் வந்தது. இதன் விரிவாக்கம் என்ன?
சி. கமலேஷ் குமார், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. வெகுநாட்களாக இது குறித்து எழுத எண்ணியிருந்தேன். பல வாசகர்களும் கேப்சா டெஸ்ட் குறித்து சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். கேப்சா என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apartஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி: என் கம்ப்யூட்டர் புரோகிராம் ஒன்றினைத் திறக்க 5 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை. விண்டோஸ் எக்ஸ்பி, எஸ்பி 2 பதிப்பு 2002, ஏ.எம்.டி. செம்ப்ரான் 2,800 ப்ராசசர், 448 எம்பி ராம் ஆகியன என் கம்ப்யூட்டரில் இயங்குவதாக அறிகிறேன். தீர்வு கொடுக்கவும்.
சி.என். ஜீவானந்தம், கோவை.
பதில்:
ஜீவா, உங்கள் கம்ப்யூட்டரில் அரை ஜிபி ராம் தான் உள்ளது. ராம் மெமரி தான், ஒரு நேரத்தில் எத்தனை புரோகிராமினை அனுமதிக்கலாம் என்பதை முடிவு செய்கிறது. 2 ஜிபி ராம் இருந்தால் கூட, கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் குறைகிறது. எனவே, உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்கான காரணமாக இருக்கலாம். www.crucial.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்கள் கம்ப்யூட்டருக்கு எவ்வளவு ராம் மெமரி தேவை என அறிந்து, அதற்கேற்ப அதனை உயர்த்தும் வழிகள் குறித்து யோசிக்கவும். அதிகச் செலவில்லாத DDR2 RAM I நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் சிஸ்டம், ராம் மெமரியைக் காலி செய்த பின்னர், உங்கள் ஹார்ட் ட்ரைவில் தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க இதுவும் ஒரு காரணமாகும். மேலும், உங்கள் ஹார்ட் ட்ரைவ் கிட்டத்தட்ட காலியாகும் அளவிற்கு நிறைய பைல்களும், புரோகிராம்களும் இருக்கலாம். தேவையற்றவற்றைக் காலி செய்தால், ஓரளவிற்கு கம்ப்யூட்டர் வேகத்துடன் செயல்படத் தொடங்கும்.

கேள்வி: நெட்டிகெட் (Netiquette) என்பது இணையத்தில் எதனைக் குறிக்கிறது? இதனால் என்ன பயன்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?
என். மஞ்சுளா, சின்னமனூர்.
பதில்:
Internet மற்றும் Etiquette என்ற இரு சொற்களின் இணைவே இந்த சொல். கம்ப்யூட்டர், இணையம்,மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய தனி மனித ஒழுக்கத்தினை இந்த சொல் குறிக்கிறது. எப்படி ஓரிடத்திற்குச் செல்கையில் முறையாக உடை உடுத்திச் செல்ல வேண்டும், முறையாகப் பேச வேண்டும், பேச்சில் நாகரிகம் இருக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அதே போல, இணையத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டும். நம் மெயில்கள், இன்டர் நெட் பரிமாற்றங்களில் இவை எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த வரைமுறைகளை, உலகளாவிய இன்டர்நெட் அமைப்பு, 1995ல் வடிவமைத்தது. http://tools.ietf.org/html/rfc1855 என்ற முகவரியில் உள்ள தளத்தில், மேற்கொண்டு தகவல்களைக் காணலாம்.

கேள்வி: ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெவ்வேறு இருந்தாலும், ஆபீஸ் தொகுப்பின் பயன்பாடு நமக்கு தேவையாய் உள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல வேறு தொகுப்புகள் உள்ளனவா? அவற்றை விண்டோஸ் மற்றும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியுமா?
ஏ.என். சிவராஜ், காரைக்கால்.
பதில்:
ஆபீஸ் தொகுப்புகளுக்கு இணையாக இணையத்தில் நிறைய தொகுப்புகள் கிடைக் கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். கூகுள் டாக்ஸ் (google docs) – இதனை http://www.google.com/googleds /intl/en/tour1.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். க்ளவ்ட் கம்ப்யூட்டிங் என்ற முறையில் இயக்கலாம். வேர்ட் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன் டேஷன் மற்றும் படங்களை உருவாக்கலாம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு அளவிற்கு வளமானதாக அனைத்து வசதிகளும் இருக்காது. ஆபீஸ் டாகுமெண்ட்களை இதில் எடிட் செய்திடலாம்.
அடுத்தது லிப்ரே ஆபீஸ் (libreoffice). இதனை http://www.libreoffice.org/#0 என்ற முகவரியில் காணலாம். மேலே சொன்ன அனைத்து வகை பைல்களை உருவாக்கலாம். டேட்டா பேஸ் அப்ளிகேஷனும் உள்ளது. மூன்றாவதாக, கிங்சாப்ட் ஆபீஸ் சூட் ப்ரீ 2012 (KingsoftOfficeFree 2012). இந்த தொகுப்பு http://download.cnet. com/KingsoftOffice2012/300018483_475563178.html என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆபீஸ் 2010 போலவே இது செயல்படும். வழக்கமான பைல் பார்மட்களுடன், RTF, TXT, and HTML போன்ற பார்மட்களையும் இது சப்போர்ட் செய்கிறது.
அடுத்ததாக அபாச்சி ஓப்பன் ஆபீஸ் (Apache openoffice). இதனைப் பெற http://www.openoffice.org என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்ல வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போலவே செயல்படும் தொகுப்பு இது. அனைத்து வகை பைல்களையும் உருவாக் கலாம். இறுதியாக, மைக்ரோசாப்ட் தரும் இலவச ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பினையும் கூறலாம். http://office.microsoft.com/enus/webapps/ என்ற தளத்தில் இதனைப் பெறலாம். Microsoft Office Web Apps என இது அழைக்கப்படுகிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இலவச இடம் தரப்படுகிறது. Word, Excel, PowerPoint, and OneNote ஆகிய பைல்களை இதிலும் உருவாக்கலாம். ஆபீஸ் 2010, 2013 அளவிற்கு நுணுக்கமான வசதிகள் இல்லை என்றாலும், அடிப்படை வசதிகளுடன் இந்த தொகுப்பு இயங்குகிறது.

கேள்வி: என்னிடம் உள்ள வை-பி கனக்ஷன் மிக நன்றாக, அனைத்து பார்களும் ஆக்டிவாக உள்ளன. ஆனால், லேப்டாப்பில் யு-ட்யூப் பார்க்க முயற்சிக்கையில், மிகவும் மெதுவாகவே தளம் கிடைக்கிறது. மற்ற இணைய தளங்களும் இறங்க அதிக நேரம் ஆகிறது. இது எதனால்?
ஆர். குமுதா சிவகுமார், தேனி.
பதில்:
வை-பி இணைப்பின் வேகத்திற்கும், இணைய இணைப்பிற்கும் தொடர்பு இல்லை. எடுத்துக்காட்டாக, உங்களுடைய இணைய இணைப்பு ஒரு மெகா பிட்ஸ் பெர் செகண்ட் என்ற முறையில் டவுண்லோட் செய்வதற்கும், உங்களுடைய வை-பி இணைப்பு 100 எம்.பி.பி.எஸ். என இருந்தாலும், இதில் இணைக்கப்படும் எந்த கம்ப்யூட்டரும் அதிக பட்சம் இணைய இணைப்பில் மட்டுமே செயல்படும். எனவே உங்களுடைய இணைய இணைப்பினைச் சோதனை செய்திடவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டர் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி, சர்வீஸ் பேக் 3 கொண்டு இயங்குகிறது. இதில் விண்டோஸ் டைரக்டரி யில், “Installer” என்று ஒரு சப் டைரக்டரி உள்ளது. இதனை அழிக்கலாமா? இது 2 ஜிபி இடம் பிடித்துள்ளதால், தேவை இல்லை எனில் அழிக்க எண்ணுகிறேன். இதில் msp மற்றும் .msi என பைல்கள் உள்ளன.
எஸ். நெடுஞ்செழியன், திண்டிவனம்.
பதில்:
உங்கள் சிஸ்டத்தில் உள்ள சில சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளுக்கான சாப்ட்வேர் பேட்ச் பைல் மற்றும் இன்ஸ்டாலர் பைல்கள் இதில் இருக்கும். இவை, இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு மிக முக்கியமானவை. எனவே இவற்றை நீக்குவது சரியல்ல. நீங்கள் நீக்கிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைல்கள் என உறுதி செய்திடும் பட்சத்தில் அவற்றை நீக்கலாம். நீங்கள் ஆபீஸ் 2007க்கு முந்தைய தொகுப்பு பயன்படுத்துவதாக இருந்தால், மைக்ரோசாப்ட் முன்பு வழங்கிய Windows Installer Cleanup Tool என்பதை டவுண்லோட் செய்து பயன்படுத் தலாம். மைக்ரோசாப்ட் இதனைக் கைவிட்டு விட்டது. ஆனால், இதனை http://www.softpedia.com/progDownload/WindowsInstallerCleanUpUtilityDownload18442.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், ரன் விண்டோவில் cmd என டைப் செய்து, கமாண்ட் ப்ராம்ப்ட் பெறவும். அதில் msizap.exe என டைப் செய்தால், இன்ஸ்டாலர் டைரக்டரியில் உள்ள தேவையற்ற பைல்கள் அனைத்தும் நீக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X