வயலின் வனிதா! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
00:00

இதுவரை: வனிதாவின் பள்ளியில் இசை விழாவைப் பற்றிய அறிவிப்பு வந்தது. இனி-

""பல பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இசை நிகழ்ச்சியில், நம் பள்ளியும் கலந்து கொள்ளப் போகிறது. வாய்ப்பாட்டு, வாத்திய இசை, நாட்டியம் இவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள், நம் பள்ளியின் சார்பில் இந்த இசை விழாவில் பங்கு கொள்ளலாம். அவர்களுக்குப் பயிற்சி அளிக்க, பிரபல இசைக் கலைஞர் சங்கர்லால் சம்மதித்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரைக் கொடுக்கலாம். தினமும் மாலையில் இசைக்குழு பயிற்சி நடைபெறும்!'' என்றார்.
இந்த அறிவிப்பு வனிதாவுக்கு மகிழ்ச்சியளித்தது. வயலின் வாசிக்க வேண்டும் என்ற அவள் ஏக்கத்துக்கும், தவிப்புக்கும் ஒரு வடிகாலாக இந்த இசை விழா ஏற்பாட்டைக் கருதினாள். அன்று மாலையே டீச்சரிடம் போய் நின்றாள். ""எனக்கு வயலின் வாசிக்கத் தெரியும். என் அப்பா பெரிய வயலின் வித்வான். அவரிடம் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். நம் பள்ளியின் இசைக் குழுவில் கலந்து கொள்ள விரும்புகிறேன். சங்கர்லால் அவர்களிடம் பயிற்சி பெற என்னை அனுப்பி வையுங்கள் மேடம்!'' என்று மூச்சு விடாமல் பேசினாள் வனிதா.
""நம் பள்ளி மாணவிகளின் இசைக் குழுவிற்கு சங்கர்லால் பயற்சி தர இருக்கிறார். கோரஸ் எனப்படும் சேர்ந்து இசைக்கும் நிகழ்ச்சிக்கும், ஆர்க்கெஸ்ட்ரா என்னும் வாத்திய இசைக் குழுவுக்கும் மாணவி களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் சங்கர்லால். ஆனால், அவரவர் வாத்தியங்களை அவரவர்களே கொண்டு வரவேண்டும். உன்னிடம் வயலின் இருந்தால் இசைக் குழுவில் நீ இடம் பெறலாம்,'' என்றார்.
""என்னிடம் வயலின் இருக்கிறது மிஸ். என் அப்பாவோடது!'' என்றாள் மகிழ்ச்சியாக.
""அப்படியானால் சரி. சற்று நேரத்தில் சங்கர்லால் வர இருக்கிறார். அவரிடம் உன்னை அறிமுகப்படுத்துகிறேன்!'' என்றார்.
வனிதா தவிப்போடு சங்கர்லாலின் வரவிற்காகத் காத்திருந்தாள். அவளைத் போலவே வேறு சில மாணவிகளும் இசைக் குழுவில் சேர, சங்கர்லாலுக்காக காத்திருந்தனர்.
இசை விழாவில், தான் வயலின் வாசிப்பதைப் போலவும், தன்மீது தனியாக ஒளி பாய்ச்சி ஸ்பாட் லைட் காண்பிப்பது போலவும், கூட்டத்தினர் கரவொலி எழுப்பிப் பாராட்டுவதாகவும், கற்பனையில் மூழ்கிப் போனாள் வனிதா. சங்கர்லால் வந்ததையே கவனிக்கவில்லை.
வனிதாவின் தோளைத் தொட்டு, அவளை நினைவு உலகுக்குக் கொண்டு வந்த ஆசிரியை, ""இவள் எங்கள் பள்ளியின் புதிய மாணவி!'' என்று சங்கர்லாலுக்கு வனிதாவை அறிமுகப்படுத்தினார்.
""இவளுக்கு வயலின் வாத்தியத்தில் தேர்ச்சியுண்டாம். உங்கள் வாத்திய இசைக் குழுவில் சேர விரும்புகிறாள்!'' சங்கர்லால் கனிவோடு, வனிதாவைப் பார்த்தார்.
பிறகு, ""உன் வயலின் வாத்தியத்தோடு புதன் கிழமை மாலை வா... நீ எப்படி வாசிக்கிறாய் என்பதைப் பார்க்கிறேன். அதன் பிறகு என் முடிவைக் கூறுகிறேன்!'' என்றார் வனிதாவிடம்.
துள்ளும் உள்ளத்துடன் வீடு திரும்பினாள் வனிதா. வீட்டுக்கு வந்ததும், வனிதாவை கவலை சூழ்ந்து கொண்டது.
அன்றிரவு ஊர் சுற்றி விட்டு வந்த லீலா, தன் தாயாரிடம் ஆத்திரப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததை பாவம் வனிதா கேட்க வில்லை. கேட்டிருந்தால் தான் வாத்தியக் குழுவில் சேர இருப்பதைக் கூறலாமா? வேண்டாமா?என்பதில் ஒரு முடிவுக்கு வந்திருப்பாள்.
லீலா படிக்கும் பள்ளி வேறு. அந்தப் பள்ளியும் மாணவிகளை இசை விழாவிற்கு அனுப்ப இருந்தது.
அதற்கான தேர்வில் லீலாவும், அவள் தோழிகளும் தங்கள் பெயரைக் கொடுத் திருந்தனர். தங்கள் பாப் இசையிலும், டிஸ்கோ ஆட்டத்திலும் அபார நம்பிக்கை வைத்திருந்தனர் லீலாவும், அவள் தோழி களும். தங்களை விட்டால் வேறு யார் இருக்கின்றனர் என்ற கர்வம் வேறு; ஆனால், மாணவிகளின் திறமைகளைப் பரிசீலிக்கும் தேர்வில் லீலாவுக்கு மூக்கறுப்பு ஏற்பட்டது.
""நம் கலாசாரத்துக்கு ஒவ்வாத இந்த மாதிரி ஆட்டமெல்லாம் இசை விழாவில் இடம் பெறப்போவதில்லை. ஆகவே, நீ அதில் பங்கு பெற முடியாது!'' என்று கூறி விட்டனர்.
இந்த நிராகரிப்பு லீலாவுக்கு அதிர்ச்சி யளித்தது; ஆத்திரப்பட வைத்தது; பள்ளி நிர்வாகியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் அம்மாவிடம் காட்டினாள். புத்தகங் களை விசிறி அடித்துவிட்டு, ""சே! சுத்த கட்டுப்பெட்டிங்க!'' என்று வெறுத்துப் போய் சோபாவில் விழுந்தாள்.
""இசைக் குழுவில் எனக்கு இடமில்லை யாம். பாரத கலாசாரமாம், பறங்கிக்காயாம்! இவங்க பாட்டையும் ஆட்டத்தையும் யார் கேட்பாங்க... பார்ப்பாங்க? கண்ட்ரி புரூட்ஸ்!'' என்று கொதித்தாள்.
விஷயத்தைக் கேட்டறிந்த காமாட்சி, மகளை அமைதிப்படுத்தினாள்.
""இதுக்காகவா இத்தனை ஆத்திரப்படறே அசடே! உன்னை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தால் கூட, நான் வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். அதென்ன பெரிய இசை நிகழ்ச்சி ஊரிலுள்ள எல்லாப் பள்ளி மாணவ, மாணவிகளும் சேர்ந்து நடத்தும், "அவியல் நிகழ்ச்சி!' கும்பலோட கோவிந்தா போட உன்னை சேர்த்துக்காததே நல்லதுன்னு நினைச்சுக்கோ. உன் திறமை வெளிப்பட தனி நிகழ்ச்சிக்கு நான் ஏற்பாடு செய்யறேன். கவலைப்படாதே!'' என்றாள்.
அம்மாவின் ஆதரவான சமாதானத்தில் லீலாவின் ஆத்திரம் அடங்கியது.
இரவு முழுவதும் யோசித்து, யோசித்து அத்தையிடம் விஷயத்தை சொல்லி விடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் வனிதா. ஆகவே, அத்தை நல்ல மூடில் இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
காலை உணவின் போது தயங்கி, தயங்கி, மெதுவாக அத்தையிடம் இசை விழாவில் பங்கு கொள்ள, பள்ளியில் தன்பெயரைக் கொடுத்திருப்பதைக் கூறினாள்.
அவ்வளவுதான் எரிமலையாக வெடித்தாள் லீலா.
""அதெல்லாம் கூடாது. பெரிய இசை விழா. அந்தப் பத்தாம் பசலிக் கும்பலிலே நீ சேரக்கூடாது. அதுக்காக, வீட்டிலே உன் வயலினை, "கீச் மூச்'சென்று அறுக்கவும் கூடாது. ஆமா,'' என்று கூறிவிட்டு விருட்டென்று எழுந்து போனாள்.
தான் தேர்ந்தெடுக்கப்படாத ஆத்திரம். தோல்வியின் அவமானம் அவள் பேச்சில் தெறித்து விழுந்தன. காமாட்சி பதிலேதும் சொல்லவில்லை. வனிதாவுக்கோ, "எப்படியும் அத்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி விடலாம்' என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு பள்ளிக்கு போனாள். இசைக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் வலுப்பெற்றது.
அன்று பள்ளியில் கடைசி வகுப்பு எடுக்க வேண்டிய சரித்திர டீச்சர் வராததினால், சீக்கிரமே வீட்டுக்கு வந்த வனிதாவுக்கு ஒரே மகிழ்ச்சி.
""அத்தை எங்கேயோ வெளியே போயிருக் கிறாள். அவள் வரு வதற்குள் ஆசை தீர என் வயலினை வாசித்து சாதகம் செய்கிறேன். தொடர்பு விட்டுப் போனால் சங்கர்லாலிடம் பாராட்டுப் பெற முடியாது...'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, பரபரப்புடன் உள்ளே ஓடினாள்.
பசிமறந்து விட்டது. அவளுக்காக அத்தை டேபிளில் மூடி வைத்திருந்த டிபனைக் கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் அறைக்கு ஓடியவள், பள்ளி உடையைக் கூடக் களை யாமல் பரபரப்புடன் தன் வயலின் பெட்டியை கட்டிலின் கீழே இருந்து எடுத்தாள். வயலின் மீது வில்லைப் படர விட்டு வாசிக்கலானாள். தன்னை மறந்து ஆசை தீர, இத்தனை நாள் வாசிக்க முடியாமல் இருந்த தாபம் தீர வாசித்துக் கொண்டிருந்தாள். நேரம் போவதே தெரியாமல் அமைதியான அந்த வீட்டில் வயலின் இசை கும்மென்று பரவி நிறைந்தது.
வெளியே சென்றிருந்த காமாட்சியும், தோழிகளுடன் ஊர் சுற்றிக் கொட்டமடித்து விட்டுத் திரும்பிய லீலாவும் ஒரே சமயத்தில் வீட்டுக்கு வரவேண்டுமா? வனிதாவின் போறாத வேளை என்று தான் சொல்ல வேண்டும்.
""மகாராணி சங்கீத பூஷணி உள்ளே வயலின் சாதகம் செய்து கொண்டிருக்கிறாள்!'' என்றாள் எகத்தாளமாக லீலா.
தான் இடம் பெற முடியாத இசை விழாவில் வனிதா கலந்துக் கொள்ளக் கூடாது என்று வீம்பு கொண்டிருந்தாள் லீலா. தன் அம்மாவிடமும் அதற்காகத் தூபம் போட்டிருந்தாள். கதவு திறக்கப்பட்டதையோ, காமாட்சியும், லீலாவும் வீட்டுக்கு வந்ததையோ எதையுமே உணராத நிலையில் தன் வயலினில் லயித்துப் போயிருந்தாள் வனிதா.
தன் அணைப்பிலிருந்து திடீரென்று வயலின் பறிக்கப்பட்டதும் திடுக்கிட்டுப் போன வனிதா, தன் நினைவுக்கு வந்தாள். தன் முன்னால் கோபத்தோடு காமாட்சி வயலினோடு நிற்பதையும், பின்னால் லீலா குறும்பாகச் சிரித்தபடி எட்டிப் பார்ப்பதையும் கண்டவள், தன் நிலையைப் புரிந்து கொண்டாள். அவர்களைப் பற்றிய நினைவே இல்லாமல் தான் வெகு நேரமாக வயலின் வாசித்துக் கொண்டிருந்தது அவள் உள்ளத்தில் பீதிப் புகையாக எழுந்தது.
-4 தொடரும்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X